உங்கள் விட்டு மாடியிலும் வெற்றிலை கொடியை சுலபமாக வளர்க்க டிப்ஸ்..!

Advertisement

Tips For Growing Betel Plant Indoors in Tamil

வெற்றிலை என்றால் ஒரு தெய்விகம் கலந்த ஒரு மருந்து பொருளாக பார்க்க படுகிறது. அதேபோல் இது மருத்துவ மூலிகையில் மருந்து பொருளாக பார்க்க படுகிறது. வெற்றிலையை அதிகமாக நாம் கடைகளிலும் பூஜை அறையிலும் தான் பார்த்திருப்போம். சிலருக்கு இதனுடைய மகிழ்மை தெரியால் இருந்திருக்கும். எந்த ஒரு விழாவாக இருந்தாலும் சரி பண்டிகை நாளாக இருந்தாலும் சரி வெற்றிலை இல்லாமல் இருக்காது.

ஒரு திருமணமாக இருந்தாலும் அதில் முதலில் வெற்றிலையை மாற்றி கொள்வதன் ஒரு சம்பரதாயமாக பார்க்க படிக்கிறது. இதனை வீட்டில் வளர்பதால் வாஸ்து சாஸ்திரத்திற்கு நல்லது என்றும் சொல்லப்டுகிறது. வாங்க அதனை வீட்டில் வளர்பதற்கு ஈசியான டிப்ஸ் பற்றி தெரிந்துகொள்வோம்..!

வெற்றிலை பயன்கள்:

கீழ் கொடுக்கப்பட்ட நோய்களை சரி செய்ய வெற்றிலையை என்ன செய்யவேண்டும் தெரியுமா? தெரிந்துகொள்ள 👉👉 வெற்றிலை மருத்துவ குணங்கள்

இது சளி, இருமல், காய்ச்சல் என நிறைய நோய்களுக்கு மருந்தாக பார்க்கப்படுகிறது. மேலும் இது பல் ஈறு பிரச்சனை தீர்வு, சுவாச கோளாறுகளிலிருந்து விடுதலை, தொற்று நோய் குணமாக, காது வலி நீங்க, செரிமான பிரச்சனை நீங்க, எலும்பு சம்பந்த பிரச்சனை நீங்க, மூட்டு வலிக்கு சிறந்த நிவாரணம் வெற்றிலை, உடல் எடை குறைய வெற்றிலை, வாய் துர்நாற்றம் நீங்க, தொண்டை வலி குணமாக என ஒரு மூலிகை மருத்துக்கடைகளை வீட்டில் வளர்க்கிறோம் ஆகையால் வீட்டில் வளர்க்காமல் இருந்தால் வெற்றிலையை வளர்க்க செயுங்கள்.

உங்களுக்கு வெற்றிலை கொடியை சாகுபடி செய்ய முழு விவரங்களை தெரிந்துகொள்ள 👉👉 வெற்றிலை சாகுபடி மிகவும் சுலபமாக செய்யலாம்

betel leaf growing tips in tamil:

டிப்ஸ்: 1

வெற்றிலை கொடி வளர்ப்பு

ஒரு சின்ன கொடி கிடைத்தால் போதுமானது அதனை வீடு முழுவதும் வளர்த்துவிடலாம். கொடியை எடுக்கும் போது அதில் 2 கணுவு இருக்கவேண்டும், அதனை எடுத்த உடன் தண்ணீரில் கழுவி வைத்துக்கொள்ளவேண்டும்.  அப்போது தான் அதனை வைத்தால் கொடிகளில் வேர் பிடிக்கும்.

டிப்ஸ்: 2

வெற்றிலை கொடி வளர்ப்பு

அடுத்து ஒரு சிறிய அளவு தொட்டியை எடுத்து அதில் குடிக்கும் தண்ணீரை ஊற்றி அதில் இந்த செடியை போட்டு வைக்கவும். 1 நாளுக்கு ஒரு முறை அந்த தண்ணீரை மாற்றிவிடவேண்டும் அதன் பின் அந்த அச்செடியிலிருந்து வேர் வர ஆரம்பிக்கும் அது பார்பதற்க்கு வெள்ளை நிறமாக இருக்கும். அதேபோல் 25 நாட்களிலில் அதில் வேர் நீளமாக இருக்கும்.

டிப்ஸ்: 3

 tips for growing betel plant indoors in tamil

அதன் பின் அதனை எடுத்து மண்ணில் மாற்றி வைக்கலாம். அதுவும் செம்மண் 60% சதவீதம், மணல் 20% சதவீதம் சேர்த்து கொள்ளலாம், அதில் நீங்கள் தண்ணீராக காய்கறிகள் கழுவிய தண்ணீரை ஊற்றி ஓரளவு ஊறிய மண்ணில் அந்த வெற்றிலை கொடியை நடவேண்டும்.

டிப்ஸ்: 4

ஈரப்பதமாக இருப்பதற்கு தினமும் இரண்டு முறை தண்ணீர் ஊற்றலாம் ஆனால் தொட்டியை தேங்காமல் பார்த்துக்கொள்ளலாம். அந்த செடிகளுக்கு நடுவில் ஒரு குச்சியை நடவேண்டும் அப்போது தான் அதில் கீழ் படராமல் மேல் நோக்கி வளரும். அப்படி இல்லையென்றால் ஒரு நூல் போட்டு கட்டிவிடலாம்.

டிப்ஸ்: 5

சூரியன் வெளிச்சம் நேராக படும் படி வைக்காமல் ஒரு நிழல் இருக்கும் இடத்தில் வைத்தால் போதுமானது. வீட்டில் வெங்காயத்தோல், காய்கறி நறுக்கியது, டீ தூள் பவுடர் போன்றவை இதில் போடலாம். வெற்றிலை செடி சாதாரணமாக நன்கு வளரும் ஆகவே இதற்கு தனியாக எதையும் போடுவதற்கு அவசியம் இல்லை இருந்தாலும் வளரவில்லை என்பவர்கள் இதனை ட்ரை பண்ணுங்க நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

செம்பருத்தி செடி வேகமாக வளர்ந்து பூக்கள் பூக்க இதை செய்யுங்கள்..!

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 
Advertisement