ஆமணக்கு சாகுபடி முறை..! தெளிவான விளக்கம்..!

Advertisement

ஆமணக்கு சாகுபடி முறை (Castor Cultivation in Tamil)..!

ஆமணக்கு ஒரு மூலிகை தாவரம். இது பலவகையான ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகின்றது.  ஆமணக்கு இந்தியாவில் எல்லா இடங்களிலும், குறிப்பாக தரிசு நிலங்களிலும் நன்றாக வளரக்கூடியது.

இரகங்கள்:-

TMV -4 (105 நாள்கள்), TMV -5 (120 நாள்கள்), TMV6 (160 நாள்கள்), TMVCH -1 (160 நாள்கள்), YRCH .1 (150 நாள்கள்), CO 1 ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.

சொட்டுநீர் பாசனம் மூலம் செவ்வாழை சாகுபடி முறை..!

பருவ காலம்:-

மானாவாரி பயிருக்கு: ஆடிப்பட்டம் (ஜூன், ஜூலை)

இறவை பயிராக இருந்தால்: வைகாசிப்பட்டம் (மே – ஜூன்), கார்த்திகைப்பட்டம் (நவம்பர் – டிசம்பர்), பங்குனி பட்டம் (மார்ச்- ஏப்ரல்)

ஆகிய பருவ காலங்களில் இந்த ஆமணக்கு சாகுபடி செய்ய ஏற்றவை.

நிலம்:-

ஆமணக்கு சாகுபடி (castor cultivation in tamil) பொறுத்தவரை வடிகால் வசதியுடன் கூடிய கார, அமிலத் தன்மையற்ற வண்டல், செம்மண் நிலங்கள் ஆமணக்கு சாகுபடி செய்ய ஏற்ற நிலங்கள்.

நிலம் தயாரிப்பு:-

ஆமணக்கு சாகுபடி செய்ய தேர்வு செய்த நிலத்தை 2-3 முறை கட்டிகள் இல்லாமல் நன்கு புழுதிபட உழ வேண்டும். கடைசி உழவில் 5 டன் மக்கிய தொழு உரமிட்டு உழ வேண்டும். இறவை பயிராக இருந்தால் நீர் பாய்ச்ச ஏதுவாக பார்கள் அமைத்து கொள்ள வேண்டும்.

விதையளவு:

ஆமணக்கு சாகுபடி (castor cultivation in tamil) பொறுத்தவரை ஒரு ஏக்கருக்கு 10 கிலோ விதைகள் வீதம் தேவைப்படும்.

விதை நேர்த்தி:

ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் திரம் அல்லது கார்பன்டாசிம் கலந்து 4 மணி நேரம் கழித்து விதைக்க வேண்டும். மானாவாரி பகுதியில், விதைப்பதற்கு 3 மணி நேரத்திற்கு முன்னர் 1% பொட்டாசியம் குளோரைடு கொண்டு விதை நேர்த்தி செய்த விதைகளை பருவமழை தொடங்கும் முன் விதைக்க வேண்டும்.

விதைத்தல்:-

மானாவாரி பயிராக இருந்தால்  90 செ.மீ x 60 செ.மீ இடைவெளியும், இரவை பயிராக இருந்தால் 90 செ.மீ x 90 செ.மீ இடைவெளியில் விதைக்க வேண்டும். டி.எம்.வி.5 குறுகிய கால இரகத்திற்கு 60 X 30 செ.மீ. இடைவெளி இருக்க வேண்டும். விதைகளை 4-6 செ.மீ ஆழத்தில் விதைக்க வேண்டும்.

சொட்டு நீர் பாசனம் முறையில் பூசணி சாகுபடி..!

நீர் நிர்வாகம்:-

மானாவாரி பயிராக இருந்தால் விதை விதைத்தவுடன் உயிர்த் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பிறகு 15 நாட்கள் இடைவெளியில் மண்ணின் தன்மைக்கு ஏற்ப நீர் பாய்ச்ச வேண்டும்.

உரமிடுதல்:-

உழவு செய்யப்படாத நிலத்தில் 12.5 டன், எக்டர் அல்லது மக்கிய தென்னை நார்க்கழிவு பரப்பி உழவேண்டும். மண் பரிசோதனைப் படி உரங்கள் இடவேண்டும். மண்பரிசோதனை செய்யாவிட்டால் கீழ்க்கண்டவற்றைப் பின்பற்றவேண்டும்.

கடைசி உழவின் போது ஏக்கருக்கு 30 கிலோ கந்தகத்தை ஜிப்சம் மூலம் இடுவதால் அதிக மகசூல் பெறலாம். மண் பரிசோதனை படி பரிந்துரைக்கப்பட்ட உரங்களை இட வேண்டும். இல்லையெனில் பொதுவான பரிந்துரையின்படி உரங்கள் அளிக்க வேண்டும்.

  1. மானாவாரி பகுதிகளில் 100% மணிச்சத்து மற்றும் 50% தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்து ஆகியவற்றை அடியுரமாக இட வேண்டும். மீதம் உள்ள அளவுகளை ஒன்று (அ) இரண்டு முறை தகுந்த ஈரப்பதத்தில் மேலுரமாக இடவேண்டும்.
  2. இறவை பகுதிகளில், 100% மணிச்சத்து மற்றும் 50% தழை மற்றும் சாம்பல் சத்தினை அடியுரமாக இட வேண்டும். மீதம் உள்ள தழை மற்றும் சாம்பல் சத்து உரங்களை இரண்டு சம பாகங்களாக பிரித்து விதைத்த 30 மற்றும் 60 வது நாளில் இட வேண்டும்.
  3. ஏக்கருக்கு 12.5 கிலோ துத்தநாக சல்பேட்டும் 25 கிலோ பெரஸ் சல்பேட்டும் இட வேண்டும்.

களை நிர்வாகம்:-

விதைத்த 3 நாட்களுக்குள் ஏக்கருக்கு புளுகுனோரலின் 800 மி.லி தெளித்து களைகளை கட்டுப்படுத்தலாம்.

மருந்து தெளிக்காத போது விதைத்த 20 மற்றும் 40வது நாளில் களைக்கொத்து கொண்டு களை எடுக்க வேண்டும்.

பயிர் பாதுகாப்பு:-

சுருள் புதிர்களுக்கு:-

சுருள் பூச்சியை கட்டுப்படுத்த வேப்பங்கொட்டை சாறு 5% (அ) ட்ரைகோபாஸ் 2.5 மிலி மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

கம்பிளிரோம்ப்புழு:-

ஆமணக்கு சாகுபடி பொறுத்தவரை கம்பளி ரோமப் புழுவை கட்டுப்படுத்த குளோரிபைரிபாஸ் அல்லது மோனோகுரோட்டபாஸ் 2 மிலி மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

இதன் மூலம் முட்புழுவையும் கட்டுப்படுத்தலாம்.

இலைப்பேன்:-

ஆமணக்கு சாகுபடி பொறுத்தவரை இலைப்பேனை கட்டுப்படுத்த டைமீத்தேயேட் (அ) மெதில் டெமட்டான் (அ) மோனோகுரோட்டபாஸ் 2 மிலி மருந்தை 1 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும்.

மல்லிகை பூ சாகுபடி முறைகள்..!

செதில்பூச்சி

ஆமணக்கு சாகுபடி பொறுத்தவரை செதில் பூச்சிகளின் தாக்குதல்கள் அதிகம் இருக்கும். எனவே அதற்கு மோனோகுரோட்டபாஸ் 320 மிலி, வேப்பம் எண்ணெய் 1 லி, காதி தூள் 1 கிலோ ஆகியவற்றை 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளித்து செதில்பூச்சியைக் கட்டுப்படுத்தலாம்.

நாற்று கருகல்

ஆமணக்கு சாகுபடி பொறுத்தவரை நாற்று கருகல் நோயைக் கட்டுப்படுத்த காப்பர் ஆக்ஸிகுளோரைடு 3 கிராம் அல்லது மெட்டலக்சில் 2 கிராம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

அறுவடை

ஆமணக்கு சாகுபடி முறையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆமணக்கு முத்துக்கள் காய்ந்து இருந்தால் அறுவடை செய்யலாம்.

முற்றிய விதைக்கொத்தை இதர கொத்துக்களை பாதிக்காதவாறு அறுவடை செய்ய வேண்டும்.

விதைகளை நிழலில் குவித்து வைக்காமல் சூரிய ஒளியில் உலர்த்த வேண்டும்.

காய்ந்த கொத்தை, குச்சி கொண்டு அடித்து விதை முத்துக்களை பிரித்தெடுத்து, காற்றில் இட்டு தூசியை நீக்கலாம் அல்லது விதைப் பிரித்தெடுக்கும் கருவி கொண்டு விதைகளைப் பிரித்தெடுக்கவும்.

மகசூல்

ஆமணக்கு சாகுபடி முறையில் மானாவாரியில் ஏக்கருக்கு 1800 கிலோவும், இறவையில் 3500 கிலோவும் மகசூல் கிடைக்கும்.

 

இது போன்று தகவல்களை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Pasumai Vivasayam in Tamil
Advertisement