10 நாட்கள் ஆனாலும் பூச்செடிகள் காயாமல் பூக்கள் பூத்து குலுங்க இதை மட்டும் செடிகளுக்கு அளித்தால் போதும்..!

Advertisement

பூக்கள் அதிகமாக பூக்க என்ன செய்வது

வீட்டில் புதிதாக பூச்செடிகள் வாங்கினால் ஒரு 10 நாட்கள் அதனை தொடர்ச்சியாக கவனித்து வருவோம். அதே நாட்கள் ஆகா ஆக அதனை சரியாக கவனிக்க நேரம் இல்லாமல் அப்படியே விட்டு விடுவோம். இப்படி செடிகளை சரியாக கவனிக்காமல் அப்படியே விட்டு விட்டால் அது நாளடைவில் வாடி பூக்கள் பூக்காமல் போகிவிடும். அப்படி உங்களுடைய வீட்டில் இருக்கும் பூச்செடிகளில் மல்லிகை பூ செடியும் ஒன்று. மல்லிகை பூ செடி பார்ப்பதற்கு கண்ணை கவரும் விதமாக அழகாக இருக்கும். அதுவே அதனை சரியாக பராமரிக்காமல் விட்டு விட்டால் அது வாடி காய்ந்து போகிவிடும். அதனால் தான் உங்கள் வீட்டில் இருக்கும் மல்லிகை பூ செடி 10 நாட்கள் ஆனாலும் வாடாமல் செடி நிறைய பூக்கள் பூத்து குலுங்க என்ன செய்ய வேண்டும் என்று இன்றைய பதிவில் பார்க்கப்போகிறோம்.

செடி, கொடிகளை செழிப்பாக வளர செய்யும் கரைசல் தயாரிக்கும் முறை

Jasmine Flower Growing Tips in Tamil:

செடியில் இருக்கும் மல்லி பூ வாடாமல் இருப்பதற்கு வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து இயற்கையான முறையில் கரைசல் ஒன்று தயாரிக்க போகின்றோம். ஆகையால் அதனை எப்படி தயாரிப்பது என்று விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:

  • தண்ணீர்- 1 லிட்டர்
  • புளித்த மோர்- 1/2 லிட்டர்
  • சாதம் வடித்த தண்ணீர்- 1/2 லிட்டர்
  • வாழைப்பழம்- 5
  • பெருங்காயத்தூள்- 2 ஸ்பூன்
  • வெள்ளம்- 1/4 கிலோ
  • மூடி போட்ட பாத்திரம்- 1

மல்லிகை பூ அதிகமாக பூக்க:

மல்லிகை பூ அதிகமாக பூக்க

ஸ்டேப்- 1

உங்களுடைய வீட்டில் சாப்பாட்டிற்கு சாதம் வடித்த பிறகு மீதம் இருக்கும் தண்ணீரில் 1/2 லிட்டர் அளவிற்கு எடுத்து கொள்ளுங்கள். அதன் பின்பு நன்றாக புளித்த மோரும் ஒரு 1/2 லிட்டர் அளவிற்கு தனியாக வைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 2

அதன் பின்பு உங்களுடைய வீட்டில் இட்லிக்கு மாவு அரைப்பதற்காக அரிசி மற்றும் உளுந்து கழுவிய தண்ணீர் இருக்கும். அந்த தண்ணீரை கீழே ஊற்றாமல் அதில் ஒரு 1 லிட்டர் எடுத்துக்கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 3

இப்போது ஒரு பெரிய மூடி போட்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் எடுத்து வைத்துள்ள தண்ணீர் மற்றும் புளித்த மோரினை ஊற்றி கலந்து கொள்ளுங்கள். இந்த தண்ணீர் அனைத்தும் செடிகளுக்கு தேவையான நுண்ணுயிர்ச்சத்தினை அளித்து செடிகளை பூச்சிகள் தாக்காமல் பாதுகாத்து நன்றாக வளர செய்யும்.

ஸ்டேப்- 4

ஒரு 5 நிமிடத்திற்கு பிறகு கலந்து வைத்துள்ள தண்ணீருடன் 5 வாழைப்பழத்தை இரண்டாக நறுக்கி அதில் போட்டு கொள்ளுங்கள். இவ்வாறு வாழைப்பழத்தை செடிகளுக்கு சேர்ப்பதன் மூலம் செடிகளுக்கு தேவையான பொட்டாசியம் சத்து கிடைத்து செடிகள் செழிப்பாக வளரும்.

ஸ்டேப்- 5

அடுத்து கலந்து வைத்துள்ள பொருளுடன் வெல்லம் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து மீண்டும் ஒரு 5 நிமிடம் குச்சியால் கலந்து மூடி போட்டு மூடி வைத்து விடுங்கள்.

ஸ்டேப்- 6

ஒரு வாரம் வரை இதனை அப்படியே விட்டு விடுங்கள். ஆனால் 1 வாரத்திற்குள் 1 நாள் மட்டும் இடையில் இதனை திறந்து பார்த்து ஒரு முறை கலந்து விடுங்கள்.

காய்ந்த செடிகள் கூட 3 நாட்களில் துளிர்விடும் அதற்கு இந்த கரைசலை 1 கிளாஸ் ஊற்றுங்க போதும்

மல்லிகை பூ செடி உரம்:

1 வாரம் கழித்த பிறகு தயார் செய்து வைத்துள்ள கரைசலில் 1/ 2 லிட்டர் எடுத்துக்கொண்டு அதனை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து செடிகளுக்கு ஊற்றினால் போதும். இந்த கரைசலை அனைத்து செடிகளுக்கும் அளித்து வருவதன் மூலம் செடி செழிப்பாக வளர்ந்து பூக்கள் மற்றும் காய்கள் காய்க்கும்.

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> விவசாயம் 
Advertisement