வீட்டிலேயே வேகமாக கற்றாழையை வளர்ப்பது எப்படி.?

katralai valarpathu eppadi

கற்றாழை வீட்டில் வளர்ப்பது எப்படி.?

கற்றாழையை வீட்டிலேயே வளர்க்க ஆசைப்படுகிறார்கள். நிறைய நபர்கள் வீட்டிலேயே வளர்த்தும் வருகின்றனர். சிலர் நபர்கள் அழகுக்காகவும், சில நபர்கள் திருஷ்டிக்காகவும் வளர்க்கின்றனர்.  கற்றாழை அழகுக்கும், ஆரோக்கியத்திற்கும் நன்மை அளிக்கிறது. இதனின் வேர் முதல் உள்ளிருக்கும் ஜெல் வரை மருத்துவ குணங்கள் உடையது. ஆனால் சிலரது வீட்டில் கற்றாழையை வைப்பார்கள் கொஞ்ச நாளிலே வாடிவிடும். இல்லையென்றால் வளர்வதற்கு நாளாகும். அதனால் இந்த பதிவில் கற்றாழையை வீட்டிலேயே வேகமாக வளர வைப்பது எப்படி என்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.

கற்றாழை வளர்ப்பது எப்படி.?

கற்றாழை வீட்டில் வளர்ப்பது எப்படி.

முதலில் கற்றாழையை வாங்கும் போது கடையில் பெரிய கற்றாழையாக வாங்கி கொள்ள வேண்டும். பிறகு கற்றாழையில் வேர் இருக்க வேண்டும். வேரில் கீறலோ இருக்க கூடாது,  கற்றாழையின் நுனி உடைந்திருக்க கூடாது.

உங்கள் வீட்டு செடிகளை வளர விடாமல் தடுக்கும் பூச்சிகளை விரட்ட இந்த ஒரு கரைசல் போதும்..!

கற்றாழை வைக்கும் முறை: 

கற்றாழை வளர்ப்பதற்கு உகந்த மண் செம்மண். செம்மண்ணில் தான் கற்றாழை வேகமாக வளரும். ஒரு அகலமான டப்பாவை எடுத்து அதில் செம்மண்ணை நிரப்பி கொள்ளவும்.

கற்றாழையின் முதல் நுனி கீழே வரைக்கும் உள்ளே போகின்ற அளவிற்கு மண்ணை குழி தோண்டி அதன் பிறகு அதில் கற்றாழையை வைக்க வேண்டும்.

2 வாரத்திற்கு நிழலியே வைத்து தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டும். வேர் விட்ட பிறகு வெயிலில் வைத்து வளர்க்கலாம். அதற்காக ரொம்ப வெயிலிலும் வைக்க கூடாது. மிதமான வெயில் படுகின்ற இடத்தில் வைத்து வளர்க்க வேண்டும்.

நீங்கள் தொட்டியில் வளர்ப்பதை விட மண்ணில் வைத்து வளர்த்தால் அதிலிருந்து செடிகள் அதிகமாகவும் வளரும், அதே நேராதகில் சீக்கிரமாகவும் வளரும்.

கற்றாழை மருத்துவ பயன்கள்

இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம்