Maavu Poochi Viratta Tips in Tamil | செடிகளில் உள்ள மாவு பூச்சியாய் விரட்ட டிப்ஸ்.!
இன்றைய காலகட்டத்தில் அனைவரின் வீட்டிலும் அழகுக்காகவோ அல்லது இயற்கையின் மீது உள்ள அதிக ஈடுபாட்டினால் நிறைய வகையான செடிகளை வளர்த்து வருகின்றோம். அப்படி நாம் வளர்க்கும் செடி திடீரென்று ஒரு நாள் பூச்சி தாக்குதலால் பட்டுப் போய் விட்டது என்றால் நமது மனம் மிகவும் வருத்தப்படும். அப்படி நமது செடிகளை மிகவும் கடினமாக தாக்கும் பூச்சி வகையில் இந்த மாவு பூச்சிகளும் ஒன்று ஆகும். அதனால் இந்த மாவு பூச்சிகளிடம் இருந்து நமது செடிகளை பாதுகாக்க உதவும் சில குறிப்புகளை பற்றி தான் இன்றைய பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
இதையும் படித்துப்பாருங்கள்=> செடிகளை பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்க இதை மட்டும் செய்யுங்கள்
Maavu Poochi Viratti in Tamil:
மாவு பூச்சிகளிடம் இருந்து நமது செடிகளை பாதுகாக்க உதவும் சில குறிப்புகளை பற்றி விரிவாக காணலாம். அதற்கு முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- இஞ்சி – 2 துண்டு
- பூண்டு – 10 பற்கள்
- பச்சை மிளகாய் – 5
- தண்ணீர் – தேவையான அளவு
முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 2 துண்டு இஞ்சி, 10 பற்கள் பூண்டு மற்றும் 5 பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளுங்கள்.
பின்னர் அதனுடன் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி நன்கு கலந்து கொள்ளுங்கள். இதனை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி அதனை உங்கள் செடியில் மாவு பூச்சி உள்ள இடத்தில் எல்லாம் ஸ்ப்ரே செய்து கொள்ளுங்கள்.
இதனை ஒரு வாரம் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் செடிகளில் உள்ள மாவு பூச்சிகள் அனைத்தும் காணாமல் போகிவிடும்.
இதையும் படித்துப்பாருங்கள்=> உங்கள் செடிகள் பசுமையாக வளர்வதற்கு வீட்டிலேயே கரைசல் தயாரிக்கலாம்
மாவு பூச்சி விரட்டி:
முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- பழைய சாதம் – 1 கப்
- தண்ணீர் – 1 லிட்டர்
முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கப் பழைய சாதத்தை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளுங்கள். இதனை நாம் எடுத்து வைத்துள்ள 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து ஒரு வாரத்திற்கு அப்படியே வைத்து விடுங்கள்.
பிறகு அதனை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி அதனை உங்கள் செடியில் மாவு பூச்சி உள்ள இடத்தில் எல்லாம் ஸ்ப்ரே செய்து கொள்ளுங்கள். இதனை ஒரு வாரம் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் செடிகளில் உள்ள மாவு பூச்சிகள் அனைத்தும் காணாமல் போகிவிடும்.
இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |