ரோஜாப்பூ நிறைய பூக்க இதுல ஒரு கைப்பிடி போடுங்க

Advertisement

ரோஜாப்பூ நிறைய பூக்க இதுல ஒரு கைப்பிடி போடுங்க – Roja Poo Niraya Pooka Tips

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம் இன்று நாம் பார்க்க இருப்பது.. ரோஸ் செடியில் நிறைய பூக்கள் பூக்க ஒரு அருமையான டிப்ஸை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். பொதுவாக நிறைய வீடுகளில் ரோஸ் செடி வைத்து வளர்ப்பார்கள். அதுவும் நன்றாக வளரும் இருப்பினும் அவற்றில் பூக்களே பூக்காது. இதற்கு காரணம் செடிக்கு சரியான உரம் வழங்காமல் இருப்பது தான் முக்கிய காரணம் என்று சொல்லலாம். ஆக செடிக்கு சிறந்த உரம் வழங்கும் வகையில் இன்று நாம் ரோஸ் செடியில் பூக்கள் பூக்க ஒரு கைப்பிடியளவு செடியில் போட்டால் போதும் செடியில் ஏரளமான பூக்கள் பூக்க ஆரம்பிக்கும். சரி வாங்க அது என்ன உரம் எப்படி தயார் செய்யலாம் போன்ற விவரங்களை இப்பொழுது நாம் பார்க்கலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வீட்டிலேயே கிராம்பு செடி வளர்க்கும் முறை..!

வெள்ளை உளுந்து – Roja Poo Niraya Pooka Tips:

நாம் ரோஸ் செடிக்கு பயன்படுத்துவது வெள்ளை உளுந்து தான். வெள்ளை உளுந்து சமையல் செய்வதற்கு மிகவும் பயன்படும் ஒன்றாகும். இந்த வெள்ளை உளுந்தை பவுடர் போல் அரைத்து கொள்ளுங்கள்.

பிறகு அதனை ரோஸ் செடியின் வேர் பகுதியில் போட்டு மண்ணை லேசாக கிளறிவிடுங்கள் தண்ணீர் தெளிக்கவும்.

இவ்வாறு செடிக்கு கொடுப்பதினால் இவற்றில் இருக்கும் நைட்ரஜன் சத்து, கேல்சியம் சத்து, அதிகமாக இருக்கிறது இதனை நாம் நமது ரோஸ் செடிக்கு கொடுப்பதினால் செடி நன்கு வளரும் மற்றும் செடியில் நன்கு பூக்களும் பூக்க ஆரம்பிக்கும். ஆக செடிக்கு நல்ல ஒரு பூஸ்டராக இருக்கும்.

இந்த பவுடரை நாம் எப்பொழுது செடிக்கு கொடுக்க வேண்டும் என்றால் செடியை காவந்து செய்த உடன் கொடுக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து கொடுத்து வந்தால் செடியில் நிறைய தளிர்கள் விட ஆரம்பிக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வீட்டிலேயே பாதாம் செடி வளர்க்கும் முறை..!

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இயற்கை விவசாயம்
Advertisement