Samanthi Poo Chedi Valarpu Murai in Tamil
அன்பு நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் சாமந்தி பூ செடி வீட்டில் வளர்க்கும் முறை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். வீட்டில் அழகான பூச்செடிகளை வளர்க்க வேண்டும் என்று பலருக்கும் ஆசை இருக்கும். சிலர் வீட்டில் பூச்செடிகள் வைத்தோம் ஆனால் துளிர் விடவில்லை, பூக்கள் பூக்கவில்லை என்று சொல்லி புலம்புவார்கள். அதுபோல செடிகள் நன்றாக வளர்வதற்கு செடியின் மேல் முழு கவனம் செலுத்த வேண்டும். அந்த வகையில் வீட்டில் சாமந்தி பூவை விதை மூலம் வளர்ப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
சாமந்தி பூ விதை மூலம் வளர்க்கும் முறை:
- சாமந்தி பூ இருவித்திலை தாவர வகையை சேர்ந்தது என்று சொல்லப்படுகிறது. இது ஆசியா மற்றும் வடமேற்கு ஐரோப்பாவை தாயகமாக கொண்ட தாவரமாகும். அதுபோல இந்த சாமந்தி பூவை விதை மூலம் வளர்ப்பது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.
- முதலில் ஒரு தொட்டியில் செம்மண் எடுத்தது கொள்ள வேண்டும். பின் அதில் மாட்டு சாணத்தை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
- பின் நம் வீட்டில் வாங்கி வைத்திருக்கும் சாமந்தி பூவின் விதைகளை எடுத்து 1 நாள் முழுவதும் வெயிலில் காயவைக்க வேண்டும். அதேபோல இந்த விதைகள் கடைகளிலும் கிடைக்கின்றன. அதை கூட நீங்கள் வாங்கி விதைக்கலாம்.
- இப்போது நாம் கலந்து வைத்துள்ள செம்மண்ணை கிளறி விட்டு இந்த விதைகளை அதில் போட வேண்டும். பிறகு மறுமுறையும் மண்ணை நன்றாக கிளறி விட்டு தண்ணீர் ஊற்ற வேண்டும்.
- பின் 10 லிருந்து 15 நாட்களுக்குள் செடிகள் துளிர் விட ஆரம்பிக்கும். பிறகு செடிகள் ஓரளவு வளர்ந்த பின் அதை வேரோடு பிடுங்கி தனித்தனியாக நடவு செய்ய வேண்டும்.
- பின் அதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். அதுபோல சாமந்தி பூ செடி இருக்கும் தொட்டியின் அடிப் பகுதியில் தண்ணீர் வடிவதற்காக ஓட்டைப் போட வேண்டும்.
- இப்படி செடிக்கு தண்ணீர் ஊற்றி அதை பராமரித்து வந்தால் செடி வேகமாக வளரும்.
ஒரே ரோஸ் செடியில் பூக்கள் அதிகம் பூக்க என்ன செய்வது? |
சாமந்தி பூ அதிகமாக பூக்கள் பூக்க உரம்:
- சாமந்தி செடியில் பூக்கள் பூக்க முட்டை ஓட்டை தூளாக செய்து பின் அதனுடன் காபி தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை செடியின் அடியில் இருக்கும் மண்ணை கிளறி விட்டு போட வேண்டும்.
- கடலை புண்ணாக்கை தண்ணீரில் கலந்து செடிகளுக்கு 2 நாட்களுக்கு ஒருமுறை ஊற்றலாம்.
- அதுபோல மாட்டு சாணத்தையும் தண்ணீரில் கலந்து செடியின் வேர்ப்பகுதியில் தெளித்து வரலாம்.
- வெங்காயத்தோல் அதேபோல காய்கறி கழிவுகளையும் சாமந்தி செடிகளுக்கு உரமாக போடலாம்.
இதுபோல உரங்களை போட்டு செடியை பராமரித்து வந்தால் சாமந்தி பூச்செடி நன்றாக வளர்ந்து அதிகமாக பூக்கள் பூக்கும்.
இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |