விவசாயத்தில் கொடி கட்டி பறக்கும் சூப்பரான தொழில்

Advertisement

வாழை மரம் சாகுபடி

விவசாயத்தில் நம் எந்த சாகுபடி செய்தாலும் அழியாத ஒன்று. அதிலும் மக்களுக்கு எல்லா நேரங்களிலும் தேவைப்படுகின்ற ஒன்று வாழைப்பழம். அது என்ன எல்லா நேரம் என்றாலும் அதிகபட்சமாக  தீபாவளி பொங்கல், ஆயுத பூஜை, வீட்டில் நடக்கும் சுப காரியங்கள் அனைத்திற்கும் தேவைப்படுகின்ற ஒன்று வாழைப்பழம். எந்த பழம் வாங்குறோமோ இல்லையோ வாழைப்பழம் கண்டிப்பா வாங்க வேண்டும். இன்று இல்லை நேற்று இல்லை நாளை இல்லை எப்பொழுதுமே வாழைப்பழம் அத்தியாவசியமான ஒன்றாக விளங்குகிறது. அதனால் இந்த வாழை சாகுபடி செய்தால் நிச்சயமாக நஷ்டம் ஆகாது. வாங்க எப்படி என்று தெரிந்துகொள்வோம்.

இதையும் படியுங்கள் ⇒ வாழை சாகுபடி செய்யும் முறை 

Valai Maram Sagupadi in Tamil:

நீங்கள் ஒரு முறை வாழை செடியை நட்டுவிட்டிர்கள் என்றால் அதிலிருந்து 5 வருடங்களுக்கு வாழைப்பழம் கிடைக்கும். இந்த விவசாயத்தில் குறைந்த முதலீடு அதிக லாபம் கிடைக்கும். வாழைமரத்தில் உள்ள இலை, பழம், வாழை தண்டு, வாழை நார், வாழை பூ என்று எல்லாமே நமக்கு லாபம் தான் தரும். மற்ற மரங்களை எடுத்துக்கொண்டால் மரத்தில் உள்ள கனிகள், பழங்கள் மூலமாக தான் நமக்கு லாபம் கிடைக்கும். ஆனால் வாழைமரத்தில் மட்டும் தான் வேர் முதல் நுனி வரை லாபம் கிடைக்கும்.

வாழைப்பழங்களை அதிகம் விளைவிக்க கூடிய நாடு நம் நாடு தான். வாழைப்பழம் உற்பத்தியில் இந்தியா 25 சதவிகித பங்கை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தோராயமாக 2,20,000 ஹெக்டேரில் வாழை பயிரிடப்படுகிறது. அதிக இடங்களில் வாழை உற்பத்தி தான் அதிகம் பயிரிடுகின்றனர்.

எதில் எவ்வளவு முதலீடு செய்யலாம்:

பயிரிடுவதற்கு உங்களுக்கு நிலம் இருக்க வேண்டும்.  நீங்கள் எவ்வளவு நிலம் வைத்துளீர்களோ அந்த அளவுக்கு முதலீடு தேவைப்படும். உதாரணமாக 0.619 ஏக்கரில் பயிரிட 50,000 ரூபாய் செலவாகும்.

வாழை சாகுபடி லாபம்:

நீங்கள் பயிரிடும் நிலத்தை பொறுத்து லாபம் மாறுபடும். உதாரணமாக 1 ஏக்கர் நிலத்தில் வாழை பயிரிட்டால் 3 லட்சம் முதல் 3.5 லட்சத்துக்கு சம்பாதிக்கலாம்.

வாழை அறுவடை:

வாழை செடியை பயிரிட்ட பிறகு 12 அல்லது 13 மாதங்களில் பழம் பழுத்துவிடும். மஞ்சள் அல்லது சிவப்பு நிறமாக வந்தவுடன் வாழை பழத்தை சந்தையில் விற்பனை செய்யலாம்.

விவசாயத்தில் எக்காலத்திலும் நஷ்டம் ஆகாத இந்த தொழிலை செய்து வாழ்க்கையில் முன்னேறுங்கள். விவசாயத்தை கையில் எடுத்தீர்கள் என்றால் நீங்கள் தான் ராஜா. தாராளமாக இந்த தொழிலை செய்யுங்கள்.

இதையும் படியுங்கள் ⇒ அதிகம் லாபம் தரும் கொடி தக்காளி சாகுபடி செய்வது எப்படி.?

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> தெரிந்துகொள்ளுங்கள் 
Advertisement