மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள் 2021 | Theni Jobs 2021

Theni Jobs 2021

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள் 2021 | Theni Jobs 2021

Theni Jobs 2021: தேனி மாவட்டம், நலப்பணிகள் இணை இயக்குநர் அலுவலகம் கட்டுப்பாட்டில் உள்ள அரசு மருத்துவனைகளில் கோவிட் – 19 தொற்று பணிகளுக்காக ஒப்பந்த அடிப்படையில். 6 மாத கால ஒப்பந்தம் அடிப்படையில் மருந்தாளுநர், ஆய்வக நுட்புநர் நிலை-2 மற்றும் நுண்கதிர் வீச்சாளர் ஆகிய பணிகளை நிரப்பிட 36 காலியிடங்கள் நிரப்பட தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் வரவேற்கப்படுகிறது. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 05.08.2021 அன்றுக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை அஞ்சல் மூலம் சமர்ப்பிக்கவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் இதர தகுதிகளை நிறைவு செய்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் இந்த தேனி மாவட்ட வேலைவாய்ப்பு காலியிடத்திக்கு நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படலாம். நேர்காணல் தேர்வில் வெற்றிபெற்றவர்கள் தேனி மாவட்டம், நலப்பணிகள் இணை இயக்குநர் அலுவலகம் கட்டுப்பாட்டில் உள்ள அரசு மருத்துவனைகளில் 6 மாத கால ஒப்பந்தம் அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள். பணிபுரியும் இந்த 6 மாத காலம் தங்களுக்கு ரூ.12,000/- ஊதியம் வழங்கப்படும்.

தேனி மாவட்டம் வேலைவாய்ப்பு 2021 – அறிவிப்பு விவரம்: 

நிறுவனம் மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் (ம) குடும்பநலத்துறை
பணிகள் மருந்தாளுநர், ஆய்வக நுட்புநர் நிலை-2 மற்றும் நுண்கதிர் வீச்சாளர்
மொத்த காலியிடம் 36
பணியிடம் தேனி
விண்ணப்பிக்க கடைசி நாள்05.08.2021

பணிகள், மொத்த காலியிடம் மற்றும் மாத சம்பளம் விவரம்:

பணிகள் காலியிடங்கள் எண்ணிக்கைஊதியம்
மருந்தாளுநர்12ரூ.12,000/-
ஆய்வக நுட்புநர் நிலை-212
நுண்கதிர் வீச்சாளர்12
மொத்த காலியிடங்கள் 36

கல்வி தகுதி:

  • இதற்கு சம்மந்தப்பட்ட துறைகளில் இருந்து டிப்ளமோ படித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
  • கல்வி தகுதி பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ டவுன்லோடு செய்து பார்க்கவும்.

விண்ணப்ப முறை:

  • அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:-

இணை இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் (ம) குடும்பநல அலுவகம், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகம், பெரியகுளம், தேனி மாவட்டம் 625531.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

தேனி மாவட்டம் வேலைவாய்ப்பு காலியிடத்திக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தங்களது அனைத்து கல்வித்தகுதியின் சான்றிதழ்களின் நகல்களை மேல் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 05.08.2021 அன்றுக்குள் அனுப்பிவைக்கவும்.

OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>>

 

இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Employment News in tamil