அரசு வழக்காடல் துறை வேலைவாய்ப்பு 2021..! TN Litigation Recruitment 2021..!

Litigation Recruitment

அரசு வழக்காடல் துறை வேலைவாய்ப்பு 2021..! TN Litigation Recruitment 2021..!

Litigation Recruitment: அரசு வழக்காடல் துறை தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது அலுவலக உதவியாளர் (Office Assistant) பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 16 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும்  உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் (Offline) மூலம் வரவேற்கப்படுகிறது. இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதி உள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் 22.02.2021 அன்றுக்குள் விண்ணப்பித்து விடவும். 

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த அரசு வழக்காடல் துறை வேலைவாய்ப்பு 2021 (TN Litigation Recruitment 2021) அறிவிப்புப்படி விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றிப்பெற்ற விண்ணப்பதாரர்கள் சென்னை மற்றும் மதுரை மாவட்டத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.

TN Litigation Recruitment 2021 – அறிவிப்பு விவரம்:

நிறுவனம்அரசு வழக்காடல் துறை (Tamilnadu Litigation Department)
விளம்பர எண்01/ 2021
பணிகள்அலுவலக உதவியாளர் (Office Assistant)
பணியிடம்சென்னை மற்றும் மதுரை
மொத்த காலியிடம்16 (பணியிடங்கள் கூடவோ அல்லது குறையவோ செய்யலாம்)
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி10.02.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி22.02.2021

கல்வி தகுதி:

 • 08-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • குறிப்பு: முன்னாள் படைவீரர்களுக்கு இக்கல்வி தகுதியானது வலியுறுத்தப்படமாட்டாது
 • மேலும் நான்கு சக்கர வாகனம் உரிமம் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வயது தகுதி:

 • விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டு முதல் அதிகபட்ச வயது 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
 • மேலும் வயது தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதை பற்றிய முழு விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ க்ளிக் செய்து படிக்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

 • நேர்முக தேர்வு (விண்ணப்பம் ஏற்கப்பட்ட மனுதாரர்களுக்கு நேர்முக தேர்விற்கான நாள் மற்றும் நேரம் தபால் மூலம் பின்னர் அறிவிக்கப்படும்).

விண்ணப்ப முறை:

 • அஞ்சல் (Offline)

விண்ணப்பத்துடன் இணைக்கவேண்டிய சான்றிதழ்:

 • அரசு சார்ந்த அமைப்பு வழங்கிய அடையாள சான்றிதழ்
 • கல்வி சான்றிதழ்
 • சாதி சான்றிதழ்
 • முன்னுரிமை தகுதி சான்றிதழ் போன்றவற்றின் நகல்களில் அரசிதல் பதிவு பெற்ற அலுவலர் சான்றொப்பம் இட்டு விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:

 • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ரூ. 45/- அஞ்சல் தலையுடன் கூடிய சுயமுகவரியிட்ட உரையுடன்,
 • அரசு தலைமை வழக்குரைஞர், உயர்நீதிமன்றம், சென்னை – 600 104.
 • என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

அரசு வழக்காடல் துறை வேலைவாய்ப்பு 2021 (TN Litigation Recruitment 2021) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. இந்த அரசு வழக்காடல் துறை வேலைவாய்ப்பு அறிவிப்பானது தினமணி செய்தி தாள் மூலம் 11.02.2021 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
 2. இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க போகும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு விளம்பரத்தை சரிபார்த்த பிறகு விண்ணப்பிக்க வேண்டும்.
OFFICIAL NOTIFICATION & APPLICATION FORMDOWNLOAD HERE>>
TN JOBS ALERT ON TELEGRAMJOIN NOW>>

 

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் அரசு வழக்காடல் துறை வேலைவாய்ப்பு 2021 (TN Litigation Recruitment 2021) அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>TN Velaivaaipppu 2021