ஐந்தே நிமிடத்தில் முகம் மினுமினுக்க..! Beauty Tips Of Papaya..!
Beauty Tips With Papaya: வணக்கம் தோழிகளே..! இன்றைய பதிவில் பப்பாளியை வைத்து முகத்தினை எப்படி பளிச்சென்று வைத்துக்கொள்வது என்று பார்க்கலாம். பப்பாளியில் சருமத்திற்கு தேவையான வைட்டமின், வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளது. பப்பாளி சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஆரோக்கியமும் கூட உள்ளது. அனைத்து பெண்களும் பார்லர் சென்று முகத்தினை பேசியல் செய்வார்கள். ஆனால் இந்த பப்பாளியினை வைத்து பேசியல் செய்தால் முகம் நல்ல பளிச்சென்றும், புத்துணர்ச்சியாகவும் இருக்கும். பப்பாளி எடுத்து கொண்டால் பெண்களுக்கு கர்ப்பப்பை கோளாறுகள் எதுவும் வராது. முகத்தில் அதிக பருக்கள், கரும்புள்ளி திட்டுக்கள் இருப்பவர்கள் இந்த டிப்ஸை பாலோ செய்யவும்.
முகம் பளபளக்க – தேவையான பொருட்கள்:
- பப்பாளி – 1 துண்டு(நறுக்கியது)
- தேன் – 1 ஸ்பூன்
- பப்பாளி தோல் – நறுக்கியது
செய்முறை விளக்கம் 1:
முதலில் சுத்தமான பவுலில் ஒரு துண்டு பப்பாளி பழத்தினை நறுக்கி எடுத்துக்கொள்ளவும். அதன் பிறகு ஒரு ஸ்பூனால் நறுக்கிய பப்பாளி பழத்தினை மசித்து கொள்ளவும்.
செய்முறை விளக்கம் 2:
அடுத்து பப்பாளியை நன்றாக மசித்த பிறகு இதனுடன் 1 ஸ்பூன் அளவிற்கு தேனை சேர்த்துக்கொள்ளவும். தேன் சேர்ப்பதினால் சிலர் நரை முடி வரும் என்று கூறுவார்கள். தேன் சேர்ப்பதினால் இது போன்ற விளைவுகள் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை. இப்போது தேன் சேர்த்த பிறகு நன்றாக கலந்து கொள்ளவேண்டும்.
செய்முறை விளக்கம் 3:
இப்போது இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்வதற்கு முன் பப்பாளியின் தோலை சிறிது மொத்தமாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும். பப்பாளியின் தோலை முகத்தில் பயன்படுத்துவதால் முகத்தில் நல்ல மாற்றம் கிடைக்கும்.
அடுத்து முகம் வெள்ளையாக இருப்பதற்கு பவுலில் கலந்த கலவையினை நறுக்கிய பப்பாளியின் தோலை கொண்டு அதில் டிப் செய்து முகத்தில் மசாஜ் போன்று செய்ய வேண்டும். இது போன்று தொடர்ந்து செய்வதால் முகத்திற்கு வெண்மை அதிகமாக கிடைக்கும்.
குறிப்பாக இந்த டிப்ஸை பின்பற்றினால் முகத்தில் கரும்புள்ளிகள், கருந்திட்டுக்கள், முக தழும்புகள் மறைந்து விடும்.
பப்பாளி பேஸ் மாஸ்க்கை எதை கொண்டு வாஷ் செய்ய வேண்டும்:
முகத்தில் மசாஜ் செய்த பிறகு face wash-ன் மூலம் முகத்தை வாஷ் செய்யலாம். சிலருக்கு முகத்தில் எப்போதும் எண்ணெய் பசை வழிவது போன்று இருக்கும். அது போன்று உள்ளவர்கள் Activated charcoal பேஸ் வாஷை பயன்படுத்தி வரலாம். முகத்தில் அதிகமாக பருக்கள் உள்ளவர்கள் Neem Tea Tree பேஸ் வாஷை கொண்டு பயன்படுத்தலாம்.
இயற்கை அழகு குறிப்புகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tami |