Thirumana Lagna Porutham in Tamil
பொதுநலம் பதிவின் ஆன்மீக அன்பர்களுக்கு வணக்கம்..! தினமும் நம் ஆன்மீகம் பதிவின் வாயிலாக பல ஆன்மீக தகவல்களை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் காணப்போகும் தகவலும் உங்களுக்கு பயனுள்ளதாக தான் இருக்கும். சரி பொதுவாக ஒருவருக்கு திருமணம் செய்ய போகிறார்கள் என்றால், அதற்கென்று திருமண பொருத்தம் பார்ப்பார்கள். திருமணம் செய்வதற்கு பொருத்தம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.
அதனால் தான் திருமணத்தின் போது மணமக்கள் இருவருக்கும் ஜாதகப் பொருத்தம் பார்க்கிறார்கள். அந்த வகையில் திருமண பொருத்தமானது 12 வகைகளில் இருக்கிறது. அந்த 12 திருமண பொருத்தம் பற்றி விரிவாக தெரிந்து கொள்ள நினைத்தால் கீழ் இருக்கும் லிங்கை கிளிக் செய்து பார்க்கவும். சரி வாங்க நண்பர்களே நம் பதிவின் வாயிலாக லக்கின பொருத்தம் என்றால் என்ன..? திருமணத்திற்கு லக்கின பொருத்தம் அவசியமா என்று பார்க்கலாம்.
12 வகையான பொருத்த விளக்கம் பற்றி தெரியுமா
லக்கின திருமண பொருத்தம் என்றால் என்ன..?
பொதுவாக திருமண பொருத்தங்களில் லக்கின பொருத்தமும் ஓன்று. முதலில் லக்னம் என்றால் என்னவென்று உங்களுக்கு தெரியுமா..?
லக்னம் என்பது ஒருவர் பிறக்கும் போது, அவர் பிறந்த இடத்தில் இருந்து கிழக்கு நோக்கி பார்க்கும் போது நமது கண்கள் ராசி மண்டலத்தில் சென்று அடையும் புள்ளி தான் லக்னம் என்று சொல்லப்படுகிறது. அதாவது அது எந்த ராசியில் விழுகிறதோ அதை தான் லக்னம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
அதுபோல ராசிக்கும் லக்கினத்திற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. அதனை நாம் பின் தெரிந்து கொள்ளலாம்.
ஒரே லக்னத்தில் உள்ளவர்கள் திருமணம் செய்யலாமா
லக்னம் என்பது ஜாதக கட்டத்தின் முதல் வீடாகும். அதுபோல லக்னத்தை பயன்படுத்தி பொருத்தம் பார்ப்பதை தான் லக்கின பொருத்தம் என்று சொல்கிறார்கள். எனவே லக்கின பொருத்தத்தை அடிப்படையாக கொண்டு தான் மற்ற 11 பொருத்தங்களும் கணக்கிடப்படுகின்றன.
அதேபோல ஜாதகத்தை பொறுத்தவரையில் லக்னம் என்பது உயிராகவும், ராசி என்பது உடலாகவும் கருதப்படுகிறது.
லக்னம் என்பது சூரியனை பொருத்து அமைவது. ராசி மற்றும் நட்சத்திரம் என்பது சந்திரனை பொருத்து அமைவது. இதில் சூரியனே நிலையானது என்பதால் லக்னமே நிலையானதாக பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக தான் திருமண பொருத்தத்தில் லக்கின பொருத்தம் முதன்மையாக பார்க்கப்படுகிறது. எனவே லக்னம் என்ப ஜாதகத்தின் முதல் கட்டமாகும். அதனால் லக்கின பொருத்தத்திற்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
எத்தனை பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாம்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |