யாருக்கும் தெரியாமல் Wifi Password-ஐ கண்டுபிடிக்க இந்த ட்ரிக்ஸை ட்ரை பண்ணுங்க..!

Wifi Password-ஐ கண்டுபிடிக்க இந்த ட்ரிக்ஸை ட்ரை பண்ணுங்க..!

நண்பர்களுக்கு வணக்கம்.. இன்றைய காலத்தில் நிறைய டெக்னாலஜி நன்றாகவே வளர்ச்சியடைந்துவிட்டது. மருத்துவம் முதல் பலவகையான விஷயங்களுக்கு அத்தகைய தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அதன் வரிசையில் டெக்னாலஜியில்  நிறையவகையான  ட்ரிக்ஸ் அண்ட் டிப்ஸும் இருக்கிறது. அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது மற்றவர்களுடைய Wifi Password-ஐ  அவர்களுக்கே தெரியாமல் எப்படி கண்டுபிடிப்பது என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். இருப்பினும் இந்த ட்ரிக்ஸை நீங்கள் உங்களுடைய Windows-யில் மட்டும் தான் ட்ரை செய்ய முடியும். மொபைலில் தெரிந்துகொள்ள முடியாது. சரி வாங்க அது எப்படி என்று இப்பொழுது பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How to Know Wifi Password Using cmd in Tamil

ஸ்டேப்: 1

முதலில் உங்கள் Windows-ஐ Open செய்யவும். பின் அதில் Windows + R என்பதை கிளிக் செய்யவும்.

ஸ்டேப்: 2

பின் இப்பொழுது ஒரு திரை Open ஆகும். அதில் Open என்ற இடத்தில் cmd என்று டைப் செய்து OK என்பதை கிளிக் செய்யுங்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
நோட்ல எழுதுனா போன்ல Save ஆகுமா..! என்ன ஒரு ஆச்சிரியம்..!

ஸ்டேப்: 3

இப்பொழுது மேல் படத்தில் காட்டியுள்ளது போல் ஒரு திரை Open ஆகும். அதில் அம்புக்குறி உள்ள இடத்தில் நீங்கள் netsh wlan show profile name=(இங்கு Wifi  Name-ஐ டைப் செய்யவும்)key=clear என்று டைப் செய்ய வேண்டும். உதாரணத்திற்கு கீழ் உள்ள படத்தை பார்க்கவும்.

இவ்வாறு டைப் செய்த பிறகு Enter பட்டனை கிளிக் செய்யவும்.

ஸ்டேப்: 4

இப்பொழுது மேல் படத்தில் உள்ளது போல் ஒரு திரை திறக்கப்படும். அதில் Key Content என்பதில் அந்த Wifi-க்கான Password காண்பிக்கப்படும். இதன் மூலம் நீங்கள் மிக எளிதாக Wifi Password-ஐ தெரிந்துகொள்ள முடியும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Image மற்றும் Video-வில் உள்ள Text-ஐ Copy பண்ணனுமா.. அப்போ இந்த ட்ரிக்ஸை ட்ரை பண்ணி பாருங்க.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News