IDBI பேங்கில் 1 லட்சம் கோல்டு லோன் பெற்றால் 1 வருடத்திற்கு எவ்வளவு வட்டி செலுத்த வேண்டும்.?

Advertisement

IDBI Bank Gold Loan Interest Rate 2023

IDBI வங்கி ஒரு இந்திய அரசின் தொழில் வளர்ச்சி வங்கியாகும். இவ்வங்கி மும்பையை தலைமை இடமாக கொண்டு செயல்படுகிறது. IDBI வங்கி தற்போது இந்தியாவில் 1513 கிளைகளை கொண்டு செயல்படுகிறது. இவ்வங்கியில் பர்சனல் லோன், வீட்டு லோன்,கல்வி லோன், கோல்டு லோன் உள்ளிட்ட பல வகையான லோன் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, அந்த வகையில் இவ்வங்கியில் வழங்கப்படும் கோல்டு லோன் பற்றிய சில விவரங்களை தெளிவாக பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

IDBI Bank 1 Lakh Gold Loan Interest Rate 2023 in Tamil:

IDBI Bank Gold Loan Interest Rate 2023

வட்டி விகிதம்:

IDBI வங்கியில் வழங்கப்படும் கோல்டு லோனிற்கு 7.25% முதல் 14% வரையிலான அளவில் வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது.

கடன் தொகை:

IDBI வங்கியில் அதிகபட்சம் 20 லட்சம் வரை கோல்டு லோன் வழங்கப்படுகிறது.

கால அளவு:

IDBI வங்கியில் நீங்கள் கோல்டு லோன் பெற்றால் அதிகபட்சம் 2 வருடத்திற்குள் திருப்பி செலுத்துதல் வேண்டும்.

1 லட்சம் கோல்டு லோன் பெற்றால் அதற்கான EMI மற்றும் மொத்த வட்டி எவ்வளவு.?

நீங்கள் உதாரணமாக, IDBI வங்கியில் 1 லட்சம் கோல்டு லோன் பெறுகிறீர்கள் என்றால் உங்களுக்கான வட்டி விகிதமாக 7.25% அளிக்கப்படுகிறது.

எனவே, இந்த வட்டி விகிதத்தை வைத்து கணக்கிடும்போது நீங்கள் மாத EMI ஆக 8,664 ரூபாய் செலுத்தி வர வேண்டும்.

1 வருடத்தில் உங்களுக்கான மொத்த வட்டி தொகை 3,970 ரூபாய் ஆகும். ஆகவே, நீங்கள் கடனாக வாங்கிய தொகை மற்றும் வட்டித்தொகை ஆகிய இரண்டையும் சேர்த்து 1,03,970 ரூபாய் செலுத்த வேண்டும்.

IDBI பேங்கில் 3 லட்சம் தனிநபர் கடன் வாங்கினால் கட்ட வேண்டிய மொத்த வட்டி எவ்வளவு

குறிப்பு: EMI தொகை, வட்டி தொகை, வட்டி விகிதம் அனைத்தும் நீங்கள் வாங்கும் கடன் தொகையினை பொறுத்தே மாறுபடும். 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement