இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

indian bank internet banking password reset in online tamil

Indian Bank Internet Banking Password Reset in Online Tamil

நாம் எப்போதும் உபயோகப்படுத்தும் பொருள் என அனைத்தும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்போம். இதன் அடிப்படையில் நம்முடைய மொபைல் முதல் வங்கி கணக்கு என அனைத்தும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்து அதற்கு நமக்கு ஏற்ற மாதிரியான Password மற்றவர்களுக்கு தெரியாதவாறு போட்டு வைத்து இருப்போம். இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. அது என்னவென்றால் நாம் போட்டு வைக்கும் Password என்னவென்று சில நேரத்தில் மறந்து போகிவிடும். இப்படி இருக்கும் பட்சத்தில் சிலவற்றை நாம் மீண்டும் Password மாற்றி கொள்ளலாம். அந்த  வரிசையில் இன்று Indian Bank Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி என்று தெரிந்துக்கொண்டு அதனை தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்தலாம் வாங்க..!

Indian Bank Internet Banking Password Reset:

ஸ்டேப்- 1

முதலில் https://www.indianbank.net.in என்ற இணையத்தளத்திற்குள் செல்லுங்கள். அதன் பின்பு அதில் கேட்கப்படும் User ID உங்களுக்கு தெரிந்து இருந்தால் அதனை கொடுக்கவும். அப்படி உங்களுக்கு தெரியவில்லை என்றால் Forget User ID என்பதை கிளிக் செய்யவும்.

ஸ்டேப்- 2

இப்போது உங்களுக்கு ஒரு New Page ஓபன் ஆகும். அதில் உங்களுடைய AC நம்பர் மற்றும் CIF நம்பர் கேட்கப்படும் இந்த இரண்டையும் நீங்கள் உங்களுடைய வங்கி கணக்கு புத்தகத்தை பார்த்து கொடுக்கவேண்டும்.

ஸ்டேப்- 3

அடுத்து அதில் ஒரு சாதாரணமான Sum கொடுக்கப்பட்டிருக்கும் அதனை பூர்த்தி செய்து Submit என்பதை கிளிக் செய்யவும்.

ஸ்டேப்- 4

அதன் பிறகு Forget User ID Conformation என்ற Page ஓபன் ஆகும். இதில் உங்களுடைய AC நம்பர் மற்றும் CIF நம்பர் கொடுக்கப்பட்டிருக்கும் இப்போது வங்கி கணக்கு புத்தகத்தில் இணைக்கப்பட்டுள்ள மொபைலுக்கு ஒரு OTP வரும்.

அதனை OTP என்ற காலத்தில் பூர்த்தி செய்து Submit என்பதை கிளிக் செய்ய வேண்டும். 

ஸ்டேப்- 5

இவற்றை எல்லாம் சரியாக செய்து முடித்த பிறகு Internet Banking Login Page ஓபன் ஆகும். அதில் User ID என்ற இடத்தில் உங்களுடைய CIF நம்பர் பூர்த்தி செய்யப்பட்டு இருக்கும்.

அதற்கு கீழே ஒரு Sum இருக்கும் அதனை பூர்த்தி செய்து Processed என்பதை கிளிக் செய்து கொள்ளவும்.

ஸ்டேப்- 6

கடைசியாக உங்களுக்கு ஒரு Password Page ஓபன் ஆகும் அதில் உங்களுக்கு Password தெரிந்தால் அதனை கொடுங்கள். அப்படி இல்லை என்றால் Forget User ID என்ற Option-ஐ Select செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 7

அதற்கு பிறகு Forget Password என்ற Page ஓபன் ஆகும். அதில் இரண்டு Option கொடுக்கப்பட்டிருக்கும் இதில் Mobile Number என்ற Option-ஐ தேர்வு செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 8

நீங்கள் இதை தேர்வு செய்த பிறகு ஓபன் ஆகும். அந்த பேஜில் கேட்டு இருக்கும் விவரங்களை பூர்த்தி செய்து Conform என்பதை கிளிக் செய்து கொள்ளவும்.

ஸ்டேப்- 9

இப்போது ஓபன் ஆகியுள்ள பேஜில் உங்களுடையக மொபைல் நம்பருக்கு வரும் OTP-யினை பூர்த்தி செய்து Submit செய்யவும்.

ஸ்டேப்- 10

அடுத்து Login Pasword பேஜ் ஓபன் ஆகும். அதில் உங்களுக்கு விருப்பம் உள்ள Password-ஐ Enter செய்து பிறகு Conform என்பதை கிளிக் செய்யுங்கள்.

இதனை செய்தவுடன் வரும் Done பட்டனை கிளிக் செய்யவும்.

ஸ்டேப்- 11

உங்களுடைய Login Password மாறியதும் அதற்கு பிறகு ஒரு Login பேஜ் ஓபன் ஆகிய பிறகு அதில் கேட்கப்படும் தகவலை கொடுத்து Processed என்பதை கிளிக் செய்து கொள்ளவும்.

ஸ்டேப்- 12

கடைசியாக உங்களுடைய Password பேஜ் ஓபன் ஆகும். அதில் நீங்கள் புதிதாக Reset செய்த Password-ஐ அதில் கொடுத்து Enter செய்தால் Indian Bank Internet பேஜ் ஓபன் ஆகிவிடும்.

இதையும் படியுங்கள்⇒ Indian Bank Mobile Banking செயலில் MPIN மற்றும் MTPIN ஆகியவற்றை மாற்றம் செய்வது எப்படி..?

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking