Renault kwid
நமக்கு இருக்கும் முக்கியமான ஆசை மற்றும் கனவுகளில் ஒன்றாக இருப்பது என்றால் கார் வாங்க வேண்டும் என்னும் ஆசையாகத்தான் இருக்கும். அப்படி கார் வாங்கும் கார் நமது பட்ஜெட்டில் இருக்க வேண்டும். அந்த காருக்கு நாம் கொடுக்கும் விலைக்கு ஏற்ற கார் இருக்க வேண்டும் என எண்ணுவோம். கார் வாங்க வேண்டும் ஆசையும் அல்லது புதிய கார்களை பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள ஆசைப்படுபவர்களுக்கு உதவும் வகையில் நமது பதிவின் மூலம் தினமும் ஒரு கார் பற்றிய அனைத்து தகவல்களையும் அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவின் மூலம் Renault kwid கார் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இந்த காரின் வடிவமைப்பு, சிறப்பம்சம் மற்றும் இதன் தொழில்நுட்பம் போன்ற தகவல்களை அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Renault kwid | ரெனால்ட் க்விட்:
Renault kwid காரின் ஆரம்ப விலை ரூ.₹4.7லட்சம் முதல் ₹6.32 லட்சம் வரை சந்தையில் கிடைக்கிறது.
RXL, RXE, RXL (O), RXT மற்றும் Climber ஆகிய நான்கு வகைகளில் ரெனால்ட் க்விட் கார் கிடைக்கிறது.
Renault kwid, பெட்ரோல் எஞ்சினுடன் 68PS/91Nm 1.0-லிட்டர் யூனிட், 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் நிலையான மற்றும் 5-ஸ்பீடு AMT உடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஹேட்ச்பேக்கில் Android மற்றும் Apple carplay கூடிய 8-இன்ச் touchScreen இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மல்டி-இன்ஃபோ டிஸ்ப்ளே கொண்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளே, மேனுவல் ஏர் கண்டிஷனர், முன்பவர் பவர் ஜன்னல்கள், 12வி சார்ஜர், ரிமோட் லாக்கிங் மற்றும் எல்இடி டிஆர்எல்கள் உள்ளன.
Renault kwid கார்களில் பாதுகாப்பு டூயல் ஏர்பேக்குகள், EBD உடன் ABS மற்றும் கேமராவுடன் பின்புற பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை உள்ளது.
முக்கியமாக, இந்த கார் லிட்டருக்கு 21.46 கிலோ மீட்டர் மைலேஜ் கொடுக்கிறது.
மேலும் இதுபோன்ற கார் பற்றிய பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்வதற்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Cars Information in Tamil |