அன்பே பேரன்பே பாடல் வரிகள்
நாம் அனைவருக்கும் பாடல்கள் பிடிக்கும். மகிழ்ச்சியோ சோகமோ கோவமோ இப்படி நம்மின் அனைத்து சூழலுக்கும் பாடல்கள் நமக்கு இதமளிக்கும். நம் நாளை மகிழ்ச்சியாக தொடங்க நம்மில் பலரும் பாடல் கேட்டோம். நமது சோகத்தை மறக்க பாடல் கேட்போம். தனிமையை ரசிக்க பாடல் கேட்போம். அப்படி கேட்கும் பாடல் வரிகள் நமக்கு பிடித்திருந்தாலோ அல்லது சில வரிகளுக்கு மேல் அந்த பாடல் வரிகள் தெரியவில்லை என்றாலோ, நாம் தேடுவது பாடல் வரிகளை தான். அந்த பாடல் வரிகள் பிடித்துவிட்டது என்றால் அதனை முழுமையாக கற்றுக்கொள்ள வேண்டும் என எண்ணுவோம். அப்படி நாம் தேடும் வரிகள் நமக்கு தமிழில் கிடைக்குமா என்றால், அது சற்று கம்மிதான் அதற்கு தீர்வாகத்தான் பொதுநலம் தளத்தில் அனைத்து பாடல் வரிகளையும் உங்களுக்காக சேர்த்துள்ளோம். அந்த வகையில் இன்று சூர்யா நடித்த N.G.K திரைப்படத்தில் இருந்து அன்பே பேரன்பே பாடல் வரிகள் உங்களுக்காக…..
அன்பே பேரன்பே பாடல் வரிகள் | anbe peranbe song lyrics in tamil:
பாடல் பற்றிய குறிப்புகள்:
படத்தின் பெயர்: N.G.K (நந்த கோபாலன் குமரன்)
படத்தின் கதாநாயகன் மற்றும் கதாநாயகி: சூர்யா, ரகுல் பிரீத் சிங், சாய் பல்லவி,
பாடலாசிரியர்: உமா தேவி
பாடகர்கள்: சித் ஶ்ரீராம் மற்றும் ஸ்ரேயா கோஷல்
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படத்தின் இயக்குனர்: செல்வராகவன்
Anbe Peranbe Song Lyrics in Tamil
ஆண் : அன்பே… அன்பே அன்பே அன்பே…
அன்பே… அன்பே அன்பே அன்பே…
பேரன்பே… பேரன்பே பேரன்பே…
பேரன்பே… பேரன்பே பேரன்பே…
—BGM—
ஆண் : ஹோ… ஓ ஓ ஹோ…
ஓ ஓ ஹோ…
ஓ ஓ ஹோ…
—BGM—
பெண் : ஏனோ இரவோடு ஒளியாய் கூடும்…
உறவொன்று கேட்கிறேன்…
வரைமீறும் இவளின் ஆசை நிறைவேற பார்க்கிறேன்…
நதி சேரும் கடலின் மீது மழை நீராய் சேருவேன்…
பெண் : அமுதே பேரமுதே…
பெண் மனதின் கனவின் ஏக்கம் தீர்க்குமா…
ஈர்க்குமா… ஆ…
மதியை தன் மதியை இவன் அழகின் பிம்பம்…
கண்கள் பார்க்குமா… தோற்குமா…
ஆண் : மழைவானம் தூறும் போது மணல் என்ன கூசுமோ…
மலரோடு மலர்கள்கூட ஊர் என்ன தூற்றுமோ…
திரையே திரை கடலே…
உன் அதிரும் அன்பு மதிலை தாண்டுதே… தூண்டுதே…
—BGM—
பெண் : ஆஅ… ஆஅ… ஆ…
நெஞ்சோரம் தூங்கும் மோகம்…
கண்ணோரம் தூபம் போட…
சொல்லாத ரகசியம் நீதானே…
ஊர் கேட்க்க ஏங்குதே…
பெண் : தனிமையில் துணை வரும் யோசனை…
நினைவிலும் மணக்குது உன் வாசனை…
எல்லாமே ஒன்றாக மாறுதே…
மணந்திட சேவல் கூவுதே…
ஆண் : ஓ… கோடை காலத்தின் மேகங்கள்…
கார்காலம் தூறும்… ம்ம்…
ஆள் இல்லாத காட்டிலும்…
பூபாளம் கேட்க்கும்…
ம்ம்… ம்ம்… ம்ம்… ம்ம்…
ஆண் & பெண் : அன்பே பேரன்பே…
நெடுவாழ்வின் நிழல்கள் வண்ணம் ஆகுதே…
ஆகுதே… ஏ… ஏ…
உறவே நம் உறவே…
ஒரு அணுவின் பிரிவில் அன்றில் ஆகுதே… ஆகுதே…
ஆண் : ஹோ… ஹோ ஓ…
உறையாத சொல்லின் பொருளை…
மொழி இங்கு தாங்குமோ…
உறவாக அன்பில் வாழ…
ஒரு ஆயுள் போதுமோ…
—BGM—
வாடி என் தங்க சேல பாடல் வரிகள் ..
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | www.pothunalam.com |