ஆராரோ ஆரீராரோ பாடல் வரிகள் | Araro Ariraro Song Lrics in Tamil

Advertisement

ஆராரோ ஆரிராரோ பாடல் வரிகள்

நம் முன்னோர்களின் காலத்தில் குழந்தையை தூங்க வைப்பதற்கு தாலாட்டு பாடல் பாடுவார்கள். இதனால் குழந்தைகள் தூங்கி விடுவார்கள். ஆனால்  இன்றைய காலத்தில் உள்ளவர்கள் குழந்தையை தூங்க வைப்பதற்கு ரொம்பவும் கஸ்டப்படுகிறார்கள். காரணம் அவர்களுக்கு பிள்ளையை எப்படி தூக்க வைக்க வேண்டும் என்று தெரியவில்லை. அப்படி குழந்தைகள் ரொம்ப அடம் பிடித்தால் மொபைலில் பாடலை போட்டு விடுகிறார்கள். இதனால் குழந்தைகள் தூங்காது மொபைலை தான் பார்த்து கொண்டிருக்கும். தாய் தாலாட்டு பாடினாலே அந்த குழந்தைகள் அழகாக தூங்கி விடும். அதனால் தான் இந்த பதிவில் ஆராரோ ஆரிராரோ பாடல் வரிகளை தெரிந்து கொள்வோம் வாங்க..

Araro Ariraro Song Lrics in Tamil:

ஆராரோ ஆரீராரோ
அம்புலிக்கு நேரிவரோ
தாயான தாய் இவரோ
தங்கரத தேரிவரோ

மூச்சுப்பட்டா
நோகுமுன்னு மூச்சடக்கி
முத்தமிட்டேன் நிழலு பட்டா
நோகுமுன்னு நிலவடங்க
முத்தமிட்டேன்

தூங்கா மணி
விளக்கே தூங்காம
தூங்கு கண்ணே ஆச
அகல் விளக்கே அசையாம
தூங்கு கண்ணே

ஆராரோ ஆரீராரோ
ஆரீரோ ஆரீராரோ
ஆராரோ ஆரீராரோ
ஆரீரோ ஆரீராரோ

ரஞ்சிதமே பாடல் தமிழ்

ஆராரோ ஆரிராரோ பாடல் வரிகள்:

ஆராரிராரோ…
நான் இங்கே பாட…
தாயே நீ கண் உறங்கு…
என்னோட மடி சாய்ந்து

ஆராரிராரோ…
நான் இங்கே பாட…
தாயே நீ கண் உறங்கு…
என்னோட மடி சாய்ந்து

வாழும் காலம் யாவுமே…
தாயின் பாதம் சொர்க்கமே…
வேதம் நான்கும் சொன்னதே…
அதை நான் அறிவேனே

அம்மா என்னும் மந்திரமே…
அகிலம் யாவும் ஆள்கிறதே

ஆராரிராரோ…
நான் இங்கே பாட…
தாயே நீ கண் உறங்கு…
என்னோட மடி சாய்ந்து

வோ் இல்லாத மரம்போல் என்னை…
நீ பூமியில் நட்டாயே…
ஊா் கண் எந்தன் மேலே பட்டால்…
உன் உயிர் நோக துடித்தாயே…
உலகத்தின் பந்தங்கள் எல்லாம்…
நீ சொல்லி தந்தாயே

பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்…
வழி நடத்திச் சென்றாயே…
உனக்கே ஓா் தொட்டில் கட்டி…
நானே தாயாய் மாறிட வேண்டும்

ஆராரிராரோ…
நான் இங்கே பாட…
தாயே நீ கண் உறங்கு…
என்னோட மடி சாய்ந்து

தாய் சொல்கின்ற வார்த்தைகள் எல்லாம்…
நோய் தீா்க்கின்ற மருந்தல்லவா…
மண் பொன் மேலே ஆசை துறந்த…
கண் தூங்காத உயிர் அல்லவா

காலத்தின் கணக்குகளில்…
செலவாகும் வரவும் நீ…
சுழல்கின்ற பூமியின் மேலே…
சுழலாத பூமியும் நீ

இறைவா நீ ஆணையிடு…
தாயே எந்தன் மகளாய் மாற

ஆராரிராரோ…
நான் இங்கே பாட…
தாயே நீ கண் உறங்கு…
என்னோட மடி சாய்ந்து

வா வாசுகி பாடல் வரிகள்

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com
Advertisement