ஆசிரியர் தின சினிமா பாடல்கள்

Advertisement

ஆசிரியர் தின சினிமா பாடல்கள்

நம் வாழ்வில் கடந்து வந்த யாரை மறந்தாலும் பள்ளி பருவம், கல்லூரி பருவத்தில் நமக்கு கல்வி கற்று தந்த ஆசிரியர்களை மறக்க முடியாது. நமது வாழ்க்கையில் ஏதோ ஒரு செயல் செய்யும் போது அவர்கள் கற்று தந்த கல்வி நமக்கு உதவுகிறது. ஆசிரியர்கள் கல்வியை மட்டும் நமக்கு கற்று கொடுப்பதில்லை. ஒழுக்கம், நம்பிக்கை. தன்னமிக்கை போன்றவற்றையும் கற்று கொடுக்கின்றனர். இப்படி நமக்கு வாழ்க்கையை கற்று கொடுத்த ஆசிரியர்களை பெருமைப்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டப்படுகிறது. அதாவது டாக்டர் ராதாகிருஷ்னண் அவர்களது பிறந்த நாளை தான் நாம் ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம். இந்த பதிவில் ஆசிரியர்களுக்கான சில சினிமா பாடல்களை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

Nanba Vaa Nanba Song Lyrics in Tamil:

வருவது ஒருமுறை உலகிலே
இதை அறிகிற மனிதனும் கடவுளே
தவறுகள் திருந்திடும் வரையிலே
வரும் தடைகளும் தகர்ந்திடும் முடிவிலே

நமை நாமே உணர்ந்தாலே
கிடையாது வேதனை மனதிலே
நதி போல நடந்தாலே
ஒரு கோடி சூரியனும் தரையிலே

நண்பா வா நண்பா
நண்பா வா நண்பா

சிறகுகள் விரித்திடு பறக்கலாம்
வரும் சிரமங்கள் பொறுத்திடு சிரிக்கலாம்
அலைகடல் என தினம் குதிக்கலாம்
கடல் கடந்தொரு பெயரையும் எடுக்கலாம்

மழை ஊற்று அனல் காற்று
எதுவான போதிலும் ரசிக்கலாம்
சில வாரம் பல பூமி
என நாமும் மாறவே நினைக்கலாம்

நண்பா வா நண்பா
நண்பா வா நண்பா

காலம் ஒன்று மாறும் என்று

காத்திருபதா நல்லது
காலம் தன்னை மாறச்செய்யும்
சாட்டை நெஞ்சிலே உள்ளது

தூசியாலே கலங்கும் விழியை
துடைப்பதா விசித்திரம்
காற்றும் கூட நமது பெயரை
உரைப்பதே சரித்திரம்

நண்பா வா நண்பா
நண்பா வா நண்பா
வா நண்பா வா வா வா

அன்பை விட சிறந்தது
இல்லை என முழங்கிடு
புன்னகை என்னும் உடையே முகவரி
உள்ளவரை விழித்திரு
உள் மனதில் பசித்திரு
ஒற்றுமையில் இவ்வுலகை அலங்கரி

நண்பா வா நண்பா
நண்பா வா நண்பா
நண்பா வா நண்பா
நண்பா நண்பா
நண்பா வா வா வா
நண்பா வா நண்பா
நண்பா நண்பா
வா நண்பா வா வா வா

மீண்டும் பள்ளிக்கு போகலாம் பாடல் வரிகள்:

மீண்டும் பள்ளிக்கு போகலாம்
நம்மை நாம் அங்கே தேடலாம்

நீராடும் கடலுடுத்த
நிலமடந்தை கெழிலொழுகும்
சீராரும் வதனமென
திகழ்பரத கண்டமிதில்

மீண்டும் பள்ளிக்கு போகலாம்
நம்மை நாம் அங்கே தேடலாம்
சிலேட்டு குச்சி கடன் வாங்கலாம்
சிலேட்டில் பேரெழுதி பார்க்கலாம்
கொட்டு வச்ச வாத்தியாரை
தொட்டு வணங்கலாம்
முட்டிப்போட்டு நின்ன இடத்தை
முத்தம் கொடுக்கலாம்
பள்ளிக்கூடத்தில் சொன்ன பாடத்தில்
இந்த உலகத்தை நாம் அறிந்தோம்
அன்னை மடி என நம்மை தாங்கிய
இந்த பள்ளியை ஏன் மறந்தோம்

மீண்டும் பள்ளிக்கு போகலாம்
நம்மை நாம் அங்கே தேடலாம்

உயிரும் உடலும் கருவறைக்குள்ளே
உற்பத்தியாகிறது
உறவு நட்பு காதலை பள்ளி
சொல்லித் தருகிறது

உயிரும் உடலும் கருவறைக்குள்ளே
உற்பத்தியாகிறது
உறவு நட்பு காதலை பள்ளி
சொல்லித் தருகிறது

தலைக்கு மேலே வளர்ந்தால் கூட
தாய்க்கு நீ பிள்ளைதான்
எத்தனை பெரிய மனிதன் ஆனாலும்
பள்ளிக்கு நீ மாணவன்தான்
உன்னை சுமந்த பள்ளிக்கூடம்
கேட்பாரற்று கிடக்கிறதே
உந்தன் வரவை எதிர்ப்பார்த்து
ஊருக்குள் தனியாய் நிற்கிறதே

மீண்டும் பள்ளிக்கு போகலாம்
நம்மை நாம் அங்கே தேடலாம்

வசீகரா பாடல் வரிகள்

அடி பெண்ணே பாடல் வரிகள்

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com
Advertisement