தலையில் பேன் எப்படி உருவாகிறது தெரியுமா.?
நமது உடலில் உள்ள உறுப்புகளில் தலையும் ஒன்று, இந்த தலையில் முடியானது பெண்களுக்கு நிறைய இருக்க வேண்டும் என்று தான் ஆசை இருக்கும். அது போல் சில பேருக்கு முடி கொஞ்சமாக தான் இருக்கும், ஆனால் பேன் மற்றும் ஈர் நிறைய இருக்கும்.
சில பேர் உறவினர் வீட்டிற்கு சென்று வருவார்கள், வந்தவுடன் அவர்களுக்கு தலையில் பேன் இருக்கும், உடனே அவர்களது பக்கத்தில் தான் பேன் இருந்தது போல என் தலைக்கும் வந்துவிட்டது என்று சொல்லுவார்கள். உண்மையிலே ஒருவர் பக்கத்தில் படுத்து உறங்கினால் அவர்களது தலையில் உள்ள பேன் வந்துவிடுமா.! வாங்க உண்மையாக பேன் எப்படி உருவாகிறது என்று அறிந்து கொள்வோம்.
தலையில் பேன் உருவாவது எப்படி.?
தலை பேன்கள் மனித உச்சந்தலையில் வாழும் மற்றும் இரத்தத்தை உண்ணும் சிறிய, இறக்கையற்ற பூச்சிகள். தலை பேன்களின் வாழ்க்கைச் சுழற்சி மூன்று முக்கிய நிலைகளைக் கொண்டுள்ளது: நைட் (முட்டை), நிம்ஃப் மற்றும் வயது வந்தோர்.
இந்த பேன் ஆனது ஒருவர் தலையில் இருந்தால் சரி அல்லது அவர்களின் பக்கத்தில் இருந்தாலும் பேன் நம் தலைக்கு வந்துவிடும். பக்கத்தில் இருந்தால் மட்டுமில்லை அவர்கள் தலைக்கு பயன்படுத்தும் டவல், சீப்பு, ட்ரெஸ் போன்றவற்றை பயன்படுத்தினாலும் பேன் வந்துவிடும்.
மேலும் தலையை நீங்கள் சரியாக பராமரிக்காமல் இருந்தாலும் சரி,பொடுகு, அழுக்கு போன்றவை இருந்தாலும் சரி பேன் வந்துவிடும்.
பேன் வாழ்க்கையானது ஒன்றிலிருந்து ஆரம்பிக்கிறது,இந்த ஒரு பேன் ஆனது ஒரு நாளைக்கு 5 அல்லது 10 முட்டை வரைக்கும் போடும். இதனுடைய முட்டையானது பிங்க் அல்லது ஒயிட் நிறமாக இருக்கும்.
இந்த முட்டையை கண்ணிற்கு தெரியாத வகையில் சிறியதாக இருக்கும். இந்த முட்டையானது ஒரு வாரத்தில் பொரிந்து பேனாக வந்துவிடும். இந்த குட்டி பேனை நீப் என்று அழைப்பார்கள்.
அசைவ உணவு எடுத்து செல்லும் கூடையில் ஏன் கரிக்கட்டையை வைக்கிறார்கள்.. அறிவியல் காரணம் தெரியுமா.. |
இந்த பேனுடைய ஆயுட் காலம் என்று பார்த்தால் 25 நாட்கள் முதல் 30 நாட்கள் வரைக்கும் தான் இருக்கும். பேனுக்கு 6 கால்கள் இருக்கிறது, அதனால் சீக்கிரமாக தலையிலிருந்து தப்பித்து விடுகிறது. நமது உடல் சூடு அதிகமாக இருப்பதனால் தான் பேன் தலையில் இருந்து கொள்கிறது. மேலும் இவற்றால் 8 மணி நேரம் இருக்கும் வரைக்கும் தனது மூச்சை இழுத்து வைத்திருக்கும்.
உங்கள் வீட்டில் யாருக்காவது தலையில் பேன் இருந்தால், அது மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்க உடனடியாக சிகிச்சை அளிப்பது அவசியம். தலைப் பேன்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கடைகளில் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் உள்ளன, மேலும் நீங்கள் தலைமுடியினை சுத்தமாக வைத்திருப்பது அவசியமானது.
மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் | Facts |