இதற்கு காரணம் இது தானா..?
வாசகர்களுக்கு வணக்கம்..! இன்று நாம் நம் முன்னோர்கள் சொல்லிய ஒரு அறிவியல் காரணத்தை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நாம் தினமும் நம் பதிவின் மூலமாக முன்னோர்கள் மறைத்து வைத்த விஷயங்களை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று என்ன காரணத்தை தெரிந்து கொள்ளப்போகின்றோம் என்று மேல் படித்து தெரிந்து கொண்டிருப்பீர்கள். இருந்தாலும் மறுமுறையும் சொல்கிறேன். நம் வீட்டிற்கு யாராவது வந்தால் ஏன் முதலில் அவர்களுக்கு தண்ணீர் தருகிறோம் என்று உங்களுக்கு தெரியுமா..? தெரியவில்லை என்றால் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
திருமணமானவர்கள் ஏன் தாலி கயிற்றில் மஞ்சள் தடவி குளிக்கிறார்கள் தெரியுமா
வீட்டிற்கு யாராவது வந்தால் முதலில் தண்ணீர் தருவது ஏன் தெரியுமா..?
பொதுவாக அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் வீட்டிற்கு யாரவது வந்தால் முதலில் அவர்களை அமரவைத்து, அவர்களுக்கு தண்ணீர் தருவதை வழக்கமாக வைத்திருந்தார்கள். அதையே நாமும் பின் பற்றி வந்தோம். அவ்வளவு ஏன் இன்றும் நாம் இந்த பழக்கத்தை கடைப்பிடித்து வருகின்றோம்.
சரி இதற்கு என்ன காரணமா என்று நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா..? அப்படி யோசித்திருந்தால் அதற்கான காரணத்தை இங்கு காணலாம்.
இந்த உலகில் பிறந்த அனைத்து உயிர்களுக்கும் நீர் எவ்வளவு முக்கியம் என்று நம் அனைவருக்குமே தெரியும். நீரின்றி அமையாது உலகு என்று வள்ளுவர் கூட சொல்லிருக்கிறார்.
ஏன் பெண்கள் கால் மேல் கால் போட்டு அமரக்கூடாது.. உண்மை என்ன தெரியுமா..
அப்படி இருக்கையில் நீர் இல்லாமல் இந்த உலகமே இயங்காது. அப்படிப்பட்ட அந்த தண்ணீரில் ஒருவரது உடலையும் மனதையும் குளிர்விக்கும் சக்தி அதிகமாகவே இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் ஒருவர் எவ்வளவு வன்மத்தோடும், தவறான எண்ணங்களுடனும் நம் வீட்டிற்கு வந்தாலும் அதனை மாற்றி நீக்கும் தன்மை தண்ணீருக்கு உண்டு.
அதனால் தான் நம் முன்னோர்கள் வீட்டிற்கு யார் வந்தாலும் அவர்களுக்கு முதலில் தண்ணீர் கொடுக்க வேண்டும் என்று சொல்லிவைத்தார்கள்.
ஆனால் இன்று அப்படி இல்லை. யாரவது வீட்டிற்கு வந்தால் ஜூஸ், காபி என்று கொடுக்கிறோம். அதனால் இனியாவது தண்ணீர் கொடுக்க பழகுங்கள்.
மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் | Facts |