பெண்கள் இப்படி உட்கார கூடாது
வணக்கம் நண்பர்களே..! தினமும் ஒரு பயனுள்ள தகவலை நம் பதிவின் வாயிலாக தெரிந்து கொண்டு வருகின்றோம். அதுபோல இன்று நாம் காணப்போகும் பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக தான் இருக்கும். பொதுவாக ஆண்கள் பெண்கள் அனைவருமே சமம் என்று சொல்கிறார்கள். ஆனால் ஆண்களுக்கு கொடுக்கின்ற சுதந்திரம் பெண்களுக்கு கொடுப்பதில்லை என்று சொல்லி புலம்பவும் செய்கிறார்கள். ஆனால் இப்படி சொல்வதற்கும் பல காரணங்கள் இருக்கிறது. அதுபோல நம் முன்னோர்கள் சொல்லிய ஒவ்வொரு விஷயத்திற்கு பின்னாலும் ஒரு காரணம் ஒளிந்திருக்கும். அப்படி இருக்கும் காரணங்களை நம் பதிவில் தெரிந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இன்று பெண்கள் கால் மேல் கால் போட்டு உட்கார கூடாது என்று சொல்வதற்கு பின் இருக்கும் காரணத்தை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
6 மணிக்கு மேல் ஏன் எண்ணெய், ஊசி, இரும்பு போன்ற பொருட்களை தர கூடாது என்று சொல்கிறார்கள் தெரியுமா
ஏன் பெண்கள் கால் மேல் கால் போட்டு அமரக்கூடாது..?
பொதுவாக பெண்கள் கால் மேல் கால் போட்டு அமர்ந்தால் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் இப்படி உட்கார கூடாது என்று சொல்வார்கள்.
ஆண்கள் மட்டும் உட்காரலாம் பெண்கள் ஏன் உட்கார கூடாது என்று கேள்வி கேட்டால், அதற்கு அவர்கள் பெண்கள் யார் முன்னும் கால் மேல் கால் போட்டு அமர கூடாது என்று சொல்வார்கள். காரணம் கேட்டால் சொல்லவும் மாட்டார்கள்.
இப்படி பெண்கள் கால் மேல் கால் போட்டு அமர்ந்தால் அதை அடிமைத்தனம், திமிர், அகங்காரம் என்று சொல்கிறார்கள்.
ஆனால் இதற்கு பின் ஒரு அறிவியல் காரணம் இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா..?
அம்மை போட்டவர்கள் ஏன் கண்ணாடி பார்க்க கூடாதுனு தெரியுமா
உண்மை தான். பெண்கள் கால் மேல் கால் போட்டு அமர்ந்தால் அது நாளடைவில் கர்ப்பப்பைக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமில்லாமல் கால் மேல் கால் போட்டு அமர்வதால் இடுப்பு எலும்புகள் இடம்பெயரும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
மேலும் கீழ்ப்பகுதியில் உள்ள ரத்தக்குழாய்களில் ரத்த ஓட்ட வேகத்திலும் இது மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்த உறைவு ஏற்படும் அபாயம் அதிகம். கால் மேல் கால் போட்டு அமரும் போது ரத்த அழுத்தமும் அதிகரிக்கிறது.
இதனால் தான் பெண்கள் கால் மேல் கால் போட்டு அமரக்கூடாது என்று நம் முன்னோர்கள் கூறினார்கள். ஆனால் இதை சொன்னால் யாரும் கேட்க மாட்டார்கள். அதனால் தான் இதை ஒழுங்கீனம் என்று மேலோட்டமாக சொல்லிவைத்தார்கள்.
முருங்கை மரத்தை வாசலில் வளர்க்க கூடாது என்று சொல்ல உண்மை காரணம் என்ன தெரியுமா
மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் | Facts |