ஏன் கண்ணாடி பார்க்க கூடாது
நண்பர்களுக்கு வணக்கம்..! தினமும் ஒரு பயனுள்ள தகவலை நம் பொதுநலம் பதிவின் வாயிலாக தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அதேபோல் இன்று நாம் காணப்போகும் பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அப்படி என்ன தகவலாக இருக்கும் என்று யோசிப்பீர்கள். பொதுவாக நம் முன்னோர்கள் நாம் செய்யும் ஒரு சில விஷயத்திற்கும் பின்னாலும் ஒரு அறிவியல் காரணத்தை மறைத்து வைத்திருப்பார்கள். அப்படி மறைத்து வைத்திருக்கும் ரகசியங்களை நம் பதிவின் வாயிலாக தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று அம்மை போட்டவர்கள் ஏன் கண்ணாடி பார்க்க கூடாது..? அதற்கு பின் இருக்கும் உண்மை காரணம் என்னவென்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
முருங்கை மரத்தை வாசலில் வளர்க்க கூடாது என்று சொல்ல உண்மை காரணம் என்ன தெரியுமா
அம்மை போட்டவர்கள் ஏன் கண்ணாடி பார்க்க கூடாது..?
பொதுவாக நம் அனைவருக்குமே இந்த விஷயம் தெரியும். அதாவது யாருக்காவது அம்மை போட்டிருந்தால் அவர்களை அவ்வளவு பத்திரமாக பார்த்துக் கொள்வார்கள். அவர்களுக்கு அம்மை சரியாகும் வரை வெளியில் வரமாட்டார்கள். அவ்வளவு ஏன் சில வீடுகளில் சத்தமாக பேச கூட மாட்டார்கள்.
அதுபோல தான் அம்மை போட்டவர்கள் கண்ணாடி பார்க்க கூடாது என்று சொன்னார்கள். நாம் ஏன் இப்படி சொல்கிறார்கள் என்று கேட்டால், அதற்கு அவர்கள் அம்மை போட்டவர்கள் கண்ணாடி பார்த்தால் அம்மை அதிகமாக வரும் என்று சொல்வார்கள்.
ஏன் இரவு நேரத்தில் வீட்டை பெருக்க கூடாது என்று சொல்கிறார்கள் காரணம் தெரியுமா..?
உடனே நாம் அது எப்படி கண்ணாடி பார்த்தால் அதிகமாக வரும் என்று யோசிப்போம். அதற்கு என்ன காரணம் என்றால்,
ஒருவருக்கு அம்மை போட்டால் அவர் உடல் முழுவதும் கொப்பளங்கள் போல் வந்துவிடும். நம் முகம் எப்பொழுதும் இல்லாதது போல் விசித்திரமாகவும் வீங்கியும் இருக்கும். அந்த நேரத்தில் நாம் கண்ணடி பார்க்கும் போது, அந்த கொப்பளங்களை கிள்ளிவிடுவோம்.
பொதுவாக ஆண்கள் பெண்கள் யாராக இருந்தாலும் முகத்தில் சிறிய பருக்கள் வந்தால் கூட அதை கிள்ளி கிள்ளி அதிகமாக வரவைத்து விடுவோம். அப்படி இருக்கையில் முகத்தில் அம்மை இருந்தால் நம் கைகள் சும்மா இருக்குமா..? அதை கண்டிப்பாக கிள்ளுவோம்.
அப்படி கிள்ளும் போது அது அதிகமாக பரவக்கூடும். அதனால் தான் அம்மை போட்டவர்கள் கண்ணாடி பார்க்கக்கூடாது என்று சொல்கிறார்கள்.
6 மணிக்கு மேல் ஏன் எண்ணெய், ஊசி, இரும்பு போன்ற பொருட்களை தர கூடாது என்று சொல்கிறார்கள் தெரியுமா
மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் | Facts |