கையை கீழே வைத்து சாப்பிட கூடாதா..?
வாசகர்களுக்கு வணக்கம்..! பெரும்பாலும் நாம் சிறு வயதில் இருந்து எது செய்தாலும், அதை குறையாக சொல்லி அதற்கு ஒரு காரணம் சொல்வார்கள். அதையும் நம் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் தான் சொல்வார்கள். அதாவது நாம் நகம் கடித்தால் அதற்கு ஒரு காரணம் சொல்வார்கள். அதே கன்னத்தில் கை வைத்தால் அதற்கு ஒரு காரணம் என்று ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காரணம் சொல்வார்கள். நாம் ஏன் இப்படி சொல்கிறீர்கள் என்று கேட்டால், சரியான விடையும் சொல்ல மாட்டார்கள்.
இதற்கு என்ன காரணம் என்று நம் அனைவருக்குமே தெரியும். அதாவது நம் முன்னோர்கள் ஒவ்வொரு விஷயத்திற்கு பின்னும் ஒரு காரணத்தை மறைத்து வைத்திருப்பார்கள். அப்படி முன்னோர்கள் சொல்லி மறைத்து வைத்திருந்த பல தகவல்களை நாம் நம் பொதுநலம் பதிவின் வாயிலாக தெரிந்து கொண்டு வருகிறோம். அந்த வகையில் இன்று சாப்பிடும் போது கையை தரையில் ஊன்றி சாப்பிட கூடாது என்று ஏன் சொல்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
நாம் தரையில் அமர்ந்து சாப்பிடுவதற்கான காரணம் என்ன உங்களுக்கு தெரியுமா
சாப்பிடும் போது கையை தரையில் வைத்து ஏன் சாப்பிட கூடாது..?
பொதுவாக நம் முன்னோர்கள் நாம் செய்யும் சிறு செயலுக்கு பின்னாலும் ஒரு அறிவியல் காரணத்தை மறைத்து வைத்திருப்பார்கள்.
அப்படி அவர்கள் மறைத்த விஷயங்களில் சாப்பிடும் பழக்கமும் ஓன்று. அதாவது நாம் சாப்பிடும் போது இப்படி தான் சாப்பிட வேண்டும். பேசிக்கொண்டு சாப்பிட கூடாது, தரையில் கால்களை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும்.
இப்படி நெறைய விஷயங்கள் சொல்வார்கள். அப்படி சொல்லும் விஷயங்களில் ஓன்று தான் இது. அதாவது சாப்பிடும் போது கையை தரையில் வைத்து சாப்பிட கூடாது என்று சொல்வார்கள்.
அசைவ உணவு எடுத்து செல்லும் கூடையில் ஏன் கரிக்கட்டையை வைக்கிறார்கள்.. அறிவியல் காரணம் தெரியுமா.. |
ஏன் அப்படி சொல்கிறார்கள் என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா..? அப்படி யோசித்திருந்தால் இந்த பதிவு உங்களுக்கு தான்.
பொதுவாக நாம் தரையில் அமர்ந்து சாப்பிடும் போது, இடுப்பு பகுதிக்கு கீழே இரத்த ஓட்டம் குறைவாகவும், அதேசமயம் வயிற்றுப் பகுதியில் இரத்த ஓட்டம் அதிகமாகவும் இருக்கும். இதன் காரணமாக நாம் சாப்பிடும் உணவு விரைவாக ஜீரணமாகும்.
ஆனால் நாம் சாப்பிடும் போது கைகளை தரையில் ஊன்றுவதால், தரையில் இருக்கும் புவியீர்ப்பு விசையின் காரணமாக, வயிற்றை விட கைகளில்தான் அதிக இரத்த ஓட்டம் இருக்கும். இதன் காரணமாக உணவு ஜீரணமாவதில் சற்று தாமதம் ஏற்படும்.
இதனால் தான் நம் முன்னோர்கள் கையை தரையில் ஊன்றி சாப்பிட கூடாது என்று சொன்னார்கள்.
மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் | Facts |