தற்போது உலகின் மிக உயரமான கட்டிடம் | Ulagin Uyaramana Kattidam
நண்பர்களுக்கு வணக்கம் இன்றைய பொது அறிவு சார்ந்த பகுதியில் உலகின் மிக உயரமான கட்டிடம் எது என்று தெரிந்து கொள்ளலாம். இந்த உலகம் பல விதமான அதிசயங்களை கொண்டுள்ளது. ஒவ்வொன்றையும் பற்றி நாம் தெரிந்து கொண்டால் அதில் உள்ள சிறப்புகள் எல்லாம் தனித்தன்மை வாய்ந்ததாக உள்ளது. இது போன்ற விஷயங்களை தெரிந்து கொள்வது நமது மூளைத்திறனை மேம்படுத்துவதற்கும், வாழ்க்கைக்கும் உதவியாக இருக்கும். சரி வாங்க உலகின் மிக உயரமான கட்டிடம் எது என்று பார்க்கலாம்.
உலகின் உயரமான கட்டிடம்:
விடை: புர்ஜ் துபாய் அல்லது “புர்ஜ் கலிஃபா” என்று அழைக்கப்படும் கட்டிடம் தான் உலகின் மிக உயரமான கட்டிடம் ஆகும்.
உலகின் மிக உயரமான கட்டிடம் எது?
- இந்த கட்டிடம் 828 மீட்டர் (2,716அடி) உயரத்தை கொண்டுள்ளது. இந்த கட்டிடத்தில் மொத்தம் 163 மாடிகள் உள்ளது. இது துபாயில் அமைந்துள்ளது. Star Hotels, வர்த்தக அலுவலகங்கள், பொழுதுபோக்கு நிலையங்கள் போன்றவை அமைந்துள்ளது.
- உலகின் மிகப்பெரிய மசூதி மற்றும் நீச்சல் குளம் 76-வது மாடிகளில் உள்ளது. இந்த கட்டிடத்தை மக்கள் 95 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தே பார்க்க முடியும்.
- நிலப்பரப்பில் உள்ள வெப்பநிலையை விட புர்ஜ் கலிஃபாவின் உச்சியில் 15 டிகிரி Celsius வெப்பநிலை குறைவாக இருக்கும்.
World Tallest Building in Tamil:
- சேக் கலீபா பின் சயத் அல் நகியான் என்பவரை கௌரவிப்பதற்காக அவரின் பெயரில் எழுப்பப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் 2004 -ல் கட்ட ஆரம்பிக்கப்பட்டு 2010-ம் ஆண்டில் முடிக்கப்பட்டது. இதை கட்டுவதற்கு 12,000 தொழிலாளிகள் தேவைப்பட்டன.
- புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் உள்ள கண்ணாடிகளை துடைக்க கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் வரை ஆகும்.
- இதற்கு முன்னர் தைவானில் உள்ள தாய்ப்பே 101 கட்டிடம் கொண்டு மிக உயரமானதாக இருந்தது. இப்பொழுது அதைவிட அதிக கட்டிடத்தை புர்ஜ் கலிஃபா கொண்டுள்ளது.
உயரமாக உள்ள கட்டிடங்கள்:
கட்டிடம் | நகரம் & நாடு | அடுக்குகள் |
புர்ஜ் கலிஃபா | துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் | 163 |
ஷாங்காய் டவர் | ஷாங்காய், சீனா | 108 |
அப்ராஜ் அல் பைட் கடிகார கோபுரம் | மெக்கா, சவுதி அரேபியா | 120 |
பிங் நிதி மையம் | ஷென்சென், சீனா | 115 |
லோட்டே உலக கோபுரம் | சியோல், தென் கொரியா | 123 |
உலக வர்த்தக மையம் | நியூயார்க் நகரம், அமெரிக்கா | 94 |
Guangzhou CTF நிதி மையம் | குவாங்சோ, சீனா | 111 |
Tianjin CTF நிதி மையம் | தியான்ஜின், சீனா | 97 |
சீனா ஜுன் | பெய்ஜிங், சீனா | 109 |
தாய்ப்பே 101 | தைபே, தைவான் | 101 |
உலகின் மிகப்பெரிய பாலைவனம் எது? |
உலகின் அகலமான நதி எது? |
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |