தேவாரம் குறிப்பு வரைக | Thevaram Nool Kurippu in Tamil | தேவாரம் சிறு குறிப்பு
வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் தேவாரம் பற்றித் தான் தெரிந்து கொள்ளப்போகிறோம். நாம் அனைவருமே தேவாரம் பற்றிய விவரங்களை தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். ஏனென்றால், தேர்வுகளில் தேவாரத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். ஓகே வாருங்கள் Thevaram Nool Kurippu in Tamil பற்றி பின்வருமாறு தெரிந்து கொள்ளலாம். தமிழில் பல நூல்களில் இதுவும் ஒன்றாகும். தேவாரம் இன்றும் பல பாடபுத்தகங்களில் இடம் பெற்று வருகிறது. இவை சிவபெருமானை போற்றி பாடப்பெற்ற பாடலாகும். தேவாரம் பாடல்கள் மன குறைகளை தீர்த்து மகிழ்ச்சி பெற பாடப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது.
தேவாரம் பாடல் மூவரால் பாடப்பெற்ற நூலாகும். மேலும் தேவாரத்தின் பெயர் காரணம், நூல் குறிப்பு, பாடல் எண்ணிக்கை போன்றவற்றை நம் பதிவில் மூலம் காணலாம் வாங்க.
குறுந்தொகை ஆசிரியர் குறிப்பு |
தேவாரம் பெயர் காரணம்:
- தேவாரம்= தே+ஆரம் – இறைவனுக்கு சூட்டப்படும் மாலை என்றும்,
- தே+வாரம்= இனிய இசை பொருந்திய பாடல் என்றும் அழைக்கப்படுகிறது.
தேவாரம் நூல் குறிப்பு | தேவாரம் பாடியவர் எத்தனை பேர்:
தேவாரம் என்பது சைவ சமய கடவுளான சிவபெருமானை பற்றி பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில் முதல் எழு திருமறைதான் தேவாரம் ஆகும். இந்த தேவாரம் பாடல் தேவர் மூவரால் பாடப்பெற்றதாகும்.திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார் மற்றும் சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய மூவரால் பாடப்பெற்றது ஆகும்.
- திருஞானசம்மந்தர்- 1, 2, 3 திருமுறைகள் இவரால் படப்பெற்றவை ஆகும்.
- திருநாவுக்கரசர்- 4, 5, 6 திருமுறைகள் இவரால் பாடப்பட்டது.
- சுந்தரர்- 7 ஆம் திருமுறை இவரால் பாடபெற்றது.
- இவர்கள் மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பே தேவாரமாகும்
தேவாரம் பாடல் எண்ணிக்கை:
தேவாரம் பாடல்களின் முதல் ஏழு திருமுறைகளின் மொத்த எண்ணிக்கை 8227 பாடலாகும்.
- முதலாம் திருமுறை – திருஞானசம்மந்தர் – 1,469
- இரண்டாம் திருமுறை -திருஞானசம்மந்தர்- 1,331
- மூன்றாம் திருமுறை -திருஞானசம்மந்தர்- 1,358
- நான்காம் திருமுறை -திருநாவுக்கரசர்- 1,070
- ஐந்தாம் திருமுறை -திருநாவுக்கரசர்- 1,015
- ஆறாம் திருமுறை -திருநாவுக்கரசர்- 981
- ஏழாம் திருமுறை- சுந்தரமூர்த்தி- 1,026
- மொத்த பாடல்களின் எண்ணிக்கை =8227
தேவாரத்தின் சிறப்பு:
- தேவாரம் மூவர் சேர்ந்து பாடியதால் இவை மூவர் தேவாரம் என்றும் அழைக்கப்படுகிறது.
- இந்த தேவாரம் பாடல்கள் திருஞானசம்மந்தர், திருநாவுக்கரசர் கி.பி 7 ஆம் நூற்றாண்டில் பாடியதாகவும், சுந்தரர் கி.பி 8 நூற்றாண்டிலும் பாடியதாக சொல்லப்படுகிறது.
- தேவாரம் பாடல்கள் பதிகம் வழியில் பாடப்பட்டவையாகும். பதிகம் என்பது பத்து பாடல்களை கொண்டதாகும்.
- திருஞானசம்மந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் இருவரும் ஊர்ரூராகச் சென்று சமயப்பிரசாரம் செய்தனர். அப்பொழுது அங்கு இருக்கும் கோவில்களில் தேவாரத்தை பாடி வந்தனர்.
- தேவாரம் பாடல்கள் சமய நிகழ்ச்சியின் போது சைவ கோவில்களிலும், சைவர்கள் வீடுகளிலும் பாடப்பெற்று வருகிறது என்றும் சொல்லப்படுகிறது.
- தேவாரம் காலத்தின் இசை கருவியானது யாழ், வீணை, குழல், கின்னரி, கொக்கரி, சச்சரி, தக்கை, முழவம், மொந்தை, மிருதங்கம், மத்தளம், தமருகம், துந்துபி, குடமுழா, தத்தலகம், முரசம், உடுக்கை, தாளம், துடி, கொடுகொட்டி ஆகிய 20 இசைக்கருவிகள் போன்றவை பண்டையகாலத்தில் இருந்து பாடப்பெற்றது.
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |