Advertisement
நொய்யல் ஆறு உற்பத்தியாகும் இடம்
நண்பர்களே வணக்கம் இன்று பொதுநலம்.காம் பதிவில் நொய்யல் ஆறு உற்பத்தியாகும் மலை எது என்பதை பற்றி பார்க்கப்போகிறோம். பொதுவாக ஆறு என்பது எங்கு உருவாகும் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். அந்த வகையில் இன்று நொய்யல் ஆறுக்கு என்று சிறப்பு உள்ளது. இந்த ஆறு கி.மு நூற்றாண்டுக்கு முன் உருவானது என்பது குறிப்பிட தக்கது. இந்த ஆற்றை பற்றி முக்கிய சிறப்புகளை பார்ப்போம் வாங்க.
தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறுகள் என்ன தெரியுமா? |
நொய்யல் ஆறு உற்பத்தியாகும் மலை:
நொய்யல் ஆறு உற்பத்தியாகும் மலை?
விடை: வெள்ளியகிரிமலை
நொய்யல் ஆறு உற்பத்தியாகும் இடம்:
- நொய்யல் ஆறு தமிழகத்தில் கொங்கு மண்டலத்தில் உள்ள மிகவும் பழமையான ஆறு. காஞ்சிமாநதி என்று சங்ககாலத்தில் புகழ்பெற்று விளங்கிய ஆறு நொய்யல் ஆறு கோயமுத்தூரில் மேற்கு தொடர்ச்சி மலையில் அடிவாரத்தில் சிற்றோடைகளாய் ஆரம்பித்து 130 கி.மீ பயணித்து கருவூரில் உள்ள நொய்யல் என்னும் கிராமத்தில் சென்று காவேரியில் கலக்கிறது.
- இந்த ஆறு வருடத்திற்கு எட்டுமாதம் வத்தாமல் ஓடக்கூடியது. சில வருடங்களுக்கு முன் இறந்த ஆறு என்று அரசாளும் இயற்கை ஆர்வலர்களால் நொய்யல் ஆறு இறந்த ஆறு என்று அறிவிக்கப்பட்டது.
- இந்த ஆறு ஓடும் வழியில் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கலை செழிப்படையவும், அதை சுற்றி உள்ள மக்கள்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்துகொண்டிருந்தது நொய்யல் ஆறு. இந்த ஆறு சிறுவாணிக்கு இணையாக சுவையை தரும்.
உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது? |
- கோயம்புத்தூர் முக்கிய சிறப்புகளில் ஒன்றானது நொய்யல் ஆறு. இந்த ஆற்றின் பிறப்புகள் பற்றி தெரிந்தகொள்ள 1000 வருடம் பின் நோக்கி செல்ல வேண்டும்.
- அந்த காலத்தில் 1. 1/2 மாதம் விடாமல் பெய்த மழையால் உருவானது நொய்யல் ஆறு.
- நொய்யல் ஆறுக்கேன்று சிறப்புகள் உள்ளது. பெரும்பாலும் வெளி மாநிலத்திலிருந்து நமக்கு அதிகம் ஆறுகள் வருகிறது. ஆனால் நொய்யல் ஆறு தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகி தமிழக எல்லையை கடக்கும் முன்னரே காவிரியில் கலக்கும் தமிழருக்கே உரியதான ஆறு தான் நொய்யல் ஆறு ஆகும்.
- தமிழகத்தின் உரிமை நதி நொய்யல் ஆறு ஆகும்.
- இறந்த நொய்யல் ஆறு என்று சொல்வதற்கு காரணம். சில வருடங்களுக்கு முன் ஆற்றின் சீமைக் கருவேலம் மரங்கள் வளர ஆரம்பித்தது. அது தண்ணீர்களை வற்றும் நிலைக்கு தள்ளப்பட்டது. அதிகம் தண்ணீர் ஊறியும் இந்த சீமைக் கருவேலம் மரங்களை அளிப்பதற்காக பலர் வந்து அதனை தூர் வார ஆரம்பித்தார்கள்.
- தூர்வாருபவர்கள் மரங்களை விட்டு மணல்களை மட்டும் அள்ளி சென்றார்கள் இது நாளடைவில் நொய்யல் ஆறு இறப்பதற்கு காரணமாக இருந்தது.
- இப்போது ஆறுகள் இருந்ததற்கு ஒரு அடையாளம் இல்லாமல் கட்டிடங்கள் மற்றும் நிறுவனமாக விளங்கிறது.
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |
Advertisement