ஒரு நாளைக்கு 22 மணி நேரம் தூங்கும் உயிரினம் எது தெரியுமா..?

Advertisement

Which Creature Sleeps 22 Hours A Day in Tamil

அன்பு வாசகர்களுக்கு வணக்கம்..! இன்று நாம் நம் பதிவின் வாயிலாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவலை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். இவ்வுலகில் நாம் தெரிந்து கொள்வதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கிறது. அப்படி இருக்கும் தகவல்களை நாமும் நம் பொதுநலம் பதிவின் வாயிலாக தினமும் தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் தெரிந்து கொள்ளும் தகவலும் உங்களுக்கு பயனுள்ளதாக தான் இருக்கும்.

பொதுவாக நாம் வாழும் இவ்வுலகில் எத்தனையோ உயிரினங்கள் இருக்கின்றன. அதிலும் கண்ணுக்கே தெரியாத உயிரினங்கள் பல இருக்கின்றன. அப்படி இருக்கும் உயிரினங்களிடம் ஒரு சுவாரஸ்யமான விஷயம் மறைந்திருக்கும். அப்படி மறைந்திருக்கும் ஒரு தகவலை பற்றி தான் இன்று காணப்போகின்றோம். அதாவது இவ்வுலகில் ஒரு நாளைக்கு 22 மணிநேரம் தூங்கும் உயிரினம் எது என்று உங்களுக்கு தெரியுமா..? தெரியவில்லை என்றால் அதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

நண்பர்களுடன் இரத்தத்தை பகிர்ந்து கொள்ளும் உயிரினம் எது

ஒரு நாளில் 22 மணிநேரம் தூங்கும் உயிரினம் எது..?

 Which creature sleeps 22 hours a day

பொதுவாக மனிதனுக்கு எப்படி தூக்கம் வருகிறதோ அதேபோல் மற்ற உயிரினங்களுக்கும் தூக்கம் வரும். அதாவது, மனிதனுக்கு எப்படி தும்மல், விக்கல், கவலை, அழுகை, சிரிப்பு மற்றும் தூக்கம் போன்ற உணர்வுகள் இருக்கிறதோ அதேபோல் மற்ற உயிரினங்களுக்கும் அதுபோன்ற உணவர்வுகள் இருக்கும்.

அதுபோல தன்னுடைய வாழ்நாள் முழுவதும் தூங்காத உயிரினம் எது என்று உங்களுக்கு தெரியுமா..? தெரிந்து கொள்ள நினைத்தால் கீழ் இருக்கும் லிங்கை கிளிக் செய்து பாருங்கள்.

வாழ்நாள் முழுவதும் தூங்காத உயிரினம் எது தெரியுமா..

சரி தன்னுடைய வாழ்நாளில் ஒரு நாளைக்கு 22 மணிநேரம் தூங்கும் உயிரினம் எது என்று உங்களுக்கு தெரியுமா..?

கோலா கரடி (Koala Bear) தான் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 18 மணி நேரம் முதல் 22 மணி நேரம் வரை தூங்குகிறது. இது இவ்வளவு நேரம் தூங்குவதற்கு முக்கிய காரணம் அதனுடைய உணவு முறை என்று சொல்லப்படுகிறது.

கோலா கரடி பற்றிய சில தகவல்கள்: 

இந்த கோலா கரடியானது (Phascolarctos Cinereus) கிழக்கு மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவின் மரத்தில் வாழும் மார்சுபியல் குடும்பத்தை சேர்ந்ததது என்று சொல்லப்படுகிறது.

இது சுமார் 60 முதல் 85 செமீ (24 முதல் 33 அங்குலம்) நீளம் கொண்டதாக இருக்கிறது.

இந்த கோலா கரடியானது 14 கிலோ (31 பவுண்டுகள்) வரை எடையுள்ளதாக இருக்கிறது.

இதற்கு வால் கிடையாது. ஆனால் உடல் தடிமனாகவும், சாம்பல் நிறத்திலும் இருக்கிறது.

இந்த கோலா கரடிகள் பெரும்பாலும் யூகலிப்டஸ் மரத்தின் இலைகளை உணவாக உண்டு உயிர் வாழ்கிறது.

இதையும் படியுங்கள்⇒ வித்தியாசமாக தூங்கும் விலங்கு எது தெரியுமா

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement