Which Country Has Triangular Flag in Tamil
வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம் பதிவின் வாயிலாக தினமும் பல பயனுள்ள பதிவுகளை அறிந்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் எந்த நாடு முக்கோண வடிவ தேசிய கொடியை கொண்டுள்ளது என்பதை பின்வருமாறு தெரிந்து கொள்ள போகிறோம். ஒவ்வொரு நாடுமே அதற்கான தேசிய கொடியை கொண்டிருக்கும்.
பொதுவாக அனைத்து நாடுகளிலும் தேசிய கொடி செவ்வக அல்லது சதுர வடிவில் இருக்கும். ஆனால் முக்கோண வடிவில் தேசிய கொடியை கொண்டுள்ள ஒரு நாடு ஒன்று உள்ளது. அதனை பற்றித்தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம்.
Which Country Has Triangular Shape Flag in Tamil:
முக்கோண வடிவ தேசிய கொடியை கொண்டுள்ள நாடு நேபாளம் ஆகும். உலகிலேயே சதுரம் அல்லது செவ்வக வடிவ தேசிய கொடி இல்லாத நாடாகவும் நேபாளம் உள்ளது.
நேபாளத்தின் தேசிய கொடியின் வடிவமைப்பானது இரண்டு முக்கோணங்களை கொண்டுள்ளதாக இருக்கும்.
நேபாளத்தின் கொடியில் இரண்டு சின்னங்கள் உள்ளன. ஒன்று சூரியன் மற்றொன்று சந்திரன். இதில் உள்ள சூரியன் மற்றும் சந்திரன் வெவ்வேறு நேபாள வம்சங்களுடன் தொடர்புடையவர்களை குறிக்கிறது. மேலும் சூரியன் மற்றும் சந்திரன் போன்று நீண்ட ஆயுளை நாடு என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
தேசிய கொடியை உருவாக்கியவர் யார் தெரியுமா..
இந்நாட்டின் தேசிய கொடியில் உள்ள சிகப்பு நிறமானது நேபாள மக்களின் துணிச்சலை குறிக்கிறது. மேலும் கொடியின் ஓரத்தில் உள்ள நீலநிறம் சமாதானத்தையும், எல்லை அமைதியையும் மற்றும் நல்லிணக்கத்தையும் குறிக்கிறது.
இக்கொடி டிசம்பர் 16 ஆம் தேதி 1962 ஆண்டில் புதிய அரசியலமைப்புச் சட்ட வரைவின் போது ஏற்றுக் கொள்ளப்பட்டது. தனி முக்கோண கொடிகள் கிபி 17-வது நூற்றாண்டு முதல் பயன்பாட்டில் இருந்தன. அதற்கு பிறகு, கிபி 19 -வது நூற்றாண்டில் முதல் இரட்டை முக்கோண கொடி பாவிக்கப்பட்டது.
உலகிலேயே மிகப்பெரிய ராணுவத்தை கொண்டுள்ள நாடு எது தெரியுமா.
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |