வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

அகர் அகர் எந்த பாசியிலிருந்து பெறப்படுகிறது ?

Updated On: March 3, 2026 5:28 PM
Follow Us:
agar agar payangal
---Advertisement---
Advertisement

அகர் அகர் என்றால் என்ன ?

தற்போது உள்ள மக்கள் உணவு சுவையாகவும், டிப்ராண்டாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக நிறைய மூல பொருட்களை பயன்படுத்துகின்றனர். அப்படி சமையலுக்காக பயன்படுத்தும் ஒரு பொருள் தான் இந்த அகர் அகர். இது ஒரு கடற்பாசியாகும். இது உணவை ஜெல்லி பததிதிற்கு கொண்டு வர பயன்பபடுகிறது. இதற்கு நிறமோ, மணமோ கிடையாது.  இது கடலில் உள்ள  சிவப்பு கடல் பாசியின் செல்லுலார் சுவர்களில் இருந்து கிடைக்கும் நேரியல் கேலக்டான் பாலிசாக்கரைடுகளின் வகை கொண்ட பாசியாகும்.  இதனை அகர் அகர் என்று அழைக்கிறார்கள். மேலும் அகர் அகர் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.

Agar Agar Benefits in Tamil 

agar agar uses in tamil

  • அகர் அகர் இதில் நார் சத்து அதிகம். மேலும் இவை எளிதில் கரைய கூடியவை கலோரிகள் குறைவாகவே உள்ளது.
  • கொழுப்புகள் மற்றும் சர்க்கரை, கார்போஹைட்ரேட்டுகளின் அளவு குறைவாகவே உள்ளது.
  • இந்த கடல்பாசி சைவ உணவு வகையை சேர்ந்தது.
  • நீங்கள் வீட்டிலேயே ஜெல்லி தயாரிக்கிறீர்கள் என்றால், அதற்கு இந்த அகர் அகர் பயன்படுத்தும்பபோது அது கெட்டியான பதத்திற்கு வருகிறது.
  • இந்த அகர் அகரை மிட்டாய், மர்மலேட், ஜெல்லி, கெட்டியான தயிர் ஆகியவற்றிற்க்கு சேர்க்கலாம்.
  • அகர் மருத்துவத்தில் கொலஸ்ட்ரால் கரைசல்களை கண்டறிய பயன்ப்படுகிறது.

கடல் பாசி  தீமைகள் (அகர் அகர் )

  • அகர் அகர் சீக்கிரத்தில் செரிமானம் ஆவதில்லை. அதனால் இது குடல் இயக்கத்திற்கு சற்று சிரமமாக இருக்கிறது.
  • நாள்பட்ட மலச்சிக்கல் உடையவர்கள் அகர் அகர் உட்கொள்ளும்போது மலச்சிக்கல் மேலும் மோசமாகிறது.
  • இது பசியை குறைக்கிறது . இதனால் உடல் எடை குறைகிறது. இருப்பினும் நீங்கள் உங்கள் பழைய உணவு பழக்கங்களையே மேற்கொள்வதன் மூலம் இழந்த எடையை மீண்டும் கொண்டு வந் விடலாம். இது 14 மடங்கு தண்ணீரை உடலில் உறிஞ்சிக்கிறது.
  • நீரிழிவு நோயாளிகள் இதனை எடுத்துகொள்ள்ளலாம் என கூறப்படுகிறது . ஆனால் இதில் இரத்தத்தில் குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் அளவில் எந்த வித மாற்றமும் ஏற்படுத்துவதில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • அகர் அகர் சரியான அளவு தண்ணீர் சேர்த்து எடுத்துக்கொண்டால் எந்த பாதிப்பும் ஏற்படுத்துவதில்லை. சரியான அளவு தண்ணீர் சேர்க்கவில்லை என்றால் தொண்டையில் மற்றும் உணவு குழாயில் அடைத்து கொள்ளலாம்.அதனால் மூச்சி திணறலும் ஏற்படலாம்.
  • மேலும் அகர் அகர் பசியின்மை மற்றும் செரிமான கோளாறுகளை தரலாம். தளர்வான மலச்சிக்கலும் ஏற்படலாம்.

முன்னெச்செரிக்கை 

  • அகர் அகர் பயன்படுத்துவதற்கு அதற்கு சமமான திரவங்கள் தேவைப்படுகிறது. ஏனெனில் இது உணவு குழாய் மற்றும் தொண்டையில் அடைப்பை ஏற்படுத்தலாம்.
  • நீங்கள் அகர் அகர் உட்கொண்ட பின் வாந்தி, குமட்டல, மூச்சுத்திணறல் அல்லது விழுங்குவதில் சிரமாக தெரிந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

ரமலான் ஸ்பெஷல் அகர் அகர் ரெசிபி..! Agar Agar Recipe..!

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement

Indhu Mathi

நான் இந்துமதி பொதுநலம் வலைத்தளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். ஆரோக்கியம் ,அழகு குறிப்பு மற்றும் சமையல் குறிப்பு போன்றவற்றின் தகவல்களை உங்களுக்கு சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை