Clove Water Benefits in Tamil | கிராம்பு தண்ணீர் பயன்கள்
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் கிராம்பு தண்ணீர் குடிப்பதால் உடலிற்கு ஏற்படும் நன்மைகள் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். பொதுவாக, கிராம்பில் பல மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கிறது. இதனை நாம் வெறுமனே சாப்பிட முடியாது. ஆகையால், அதனை பல்வேறு விதமாக எடுத்துக்கொள்வார்கள். பெரும்பாலும் கிராம்பினை தண்ணீரில் ஊறவைத்தோ அல்லது கொதிக்க வைத்தோ குடிப்பார்கள். அப்படி நீங்கள் கிராம்பு தண்ணீர் குடிப்பவராக இருந்தால் அதனின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
இந்திய உணவுகளில் கிராம்பு முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. ஏனென்றால் இவற்றை சேர்ப்பதால் சமையலின் சுவை அதிகரிக்கிறது. அதனாலாயே இந்த கிராம்பை சமையலில் அதிகமா பயன்படுத்துகிறார்கள். இதில் உள்ள நன்மைகளை அறியமலையே உணவில் சேர்க்கின்றோம். அதனால் தான் இந்த பதிவில் கிராம்பு தண்ணீரினால் கிடைக்கும் நன்மைகள் பற்றி அறிந்து கொள்வோம்.
Clove Water Benefits for Skin:
- கிராம்பு நீரை முகத்தில் பயன்படுத்தலாம், இதனை பயன்படுத்துவதால் சருமத்தின் நிறத்தை அதிகப்படுத்தலாம், முகப்பரு, பிரச்சனைகளை சரி செய்யலாம். இதற்கு நீங்கள் கிராம்பு தண்ணீரை முகத்தில் கழுவ வேண்டும். ஒருவேளை உங்களுக்கு முகத்தில் இதனை தடவுவதால் எரிச்சல் அல்லது அரிப்பு போன்ற பிரச்சனை ஏற்பட்டால் முகத்தை கழுவி விட வேண்டும்.
- உடலில் அரிப்புமற்றும் அலர்ஜி பிரச்சனை இருந்தால் கிராம்பு தண்ணீர் சிறந்த தீர்வாக இருக்கிறது. இதற்கு நீங்கள் கிராம்பு தண்ணீரை அரிப்பு உள்ள இடத்தில் அப்ளை செய்ய வேண்டும். இதனை தடவுவதன் மூலம் அரிப்பு உள்ள இடமானது குளிர்ச்சி அடைகிறது.
Clove Water Benefits For Hair:
- கிராம்பு தண்ணீரை தலைமுடியில் பயன்படுத்துவதால் முடி உதிர்வதை தடுத்து வளர்ச்சி அதிகரிக்கும், மேலும் முடி பளபளப்பாக மாறுகின்றது.
- கிராம்பு பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் பொடுகை எதிர்த்துப் போராட உதவுகிறது. அதன் அஸ்ட்ரிஜென்ட் பண்புகள் உச்சந்தலையில் எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கும், அதே நேரத்தில் அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அரிப்பு மற்றும் உச்சந்தலையில் எரிச்சலைத் தடுப்பதற்கு உதவுகிறது.
- கிராம்பு வைட்டமின்கள் ஏ, பி, சி மற்றும் கே மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற சத்துக்கள் முடியை ஆரோக்கியமாக வளர்வதற்கு உதவுகிறது.
- ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் தலைமுடியில் மெலனின் உற்பத்தியை பாதிக்கும் ,இதனால் நரைமுடி பிரச்சனை ஏற்படுகிறது. கிராம்பு நீரில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாலிபினால்கள் ஆக்ஸிஜனேற்ற சேதத்தை எதிர்த்து உங்கள் முடியின் இயற்கையான நிறத்தை பராமரிக்க உதவுகிறது.
ஒரு நாளைக்கு எத்தனை கிராம்பு சாப்பிடலாம்..!
Drinking Clove Water Benefits:
- கிராம்பு தண்ணீர் குடிப்பதால் நரம்பு மண்டலத்தை அமைதியாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது. மேலும் மன அழுத்தம் குறைப்பதற்கும் உதவுகிறது.
- இதனை குடிப்பதால் செரிமான பிரச்சனையை சரி செய்கிறது, வயிற்றில் உள்ள பிரச்சனைகளை சரி செய்கிறது.
- கிராம்பு நீரை குடிப்பதால் பல் வலி பிரச்சனையிலிருந்து நிவாரணம் தருகிறது.
- உங்களின் வாயில் துர்நாற்றம் ஏற்பட்டால் கிராம்பு நீரை குடிப்பதன் மூலம் இந்த நாற்றத்திலிருந்து வெளிவரலாம்.
- உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் எடையை குறைக்க வேண்டும் என்று நினைத்தால் கிராம்பு தண்ணீரை குடிக்கலாம். ஏனென்றால் இவை உடலில் உள்ள கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைப்பதற்கு உதவுகிறது.
- தொண்டையில் வலி பிரச்சனை இருந்தால் கிராம்பு தண்ணீரை குடிப்பதன் மூலம் வலியிலிருந்து நிவாரணம் அடையலாம்.
கிராம்பு டீ குடிப்பதால் உடலிற்கு இவ்வளவு நன்மைகளா..!
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips in tamil |