இஞ்சி எண்ணெய் நன்மைகள்
இஞ்சியை சமையலுக்கு பெரிதும் பயன்படுத்துகின்றனர். டீயில் இஞ்சியை சேர்த்து குடிக்கின்றனர். இஞ்சியை ஊறுகாயாக செய்தும் சாப்பிடுகின்றனர். இஞ்சியை பல முறையில் சமைத்து சாப்பிட்டாலும் அதில் உள்ள பல விஷயங்கள் தெரிவதில்லை. அதனால் தான் இன்றைய பதிவில் இஞ்சி எண்ணெயில் உள்ள நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
இஞ்சி எண்ணெயில் உள்ள நன்மைகள்:
தோலுக்கு நல்லது:
இஞ்சி எண்ணெய் தோல் மற்றும் முடிக்கு பெரிதும் உதவுகிறது. இதன் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக சருமத்தை பாதுகாக்க உதவும் மற்றும் இஞ்சி எண்ணெயில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் கிருமி நாசினிகள் சருமத்தின் தோற்றத்தை பளபளப்பாக வைத்து கொள்ள உதவுகிறது.
இஞ்சி ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா.!
வலியை குறைக்க உதவுகிறது:
இஞ்சி எண்ணெய் வலியை குறைக்க இயற்கையான ஒன்றாக பயன்படுகிறது. இதில் உள்ள அலர்ஜி எதிர்ப்பு பண்பு தசை வலி, முதுகு வலி போன்றவற்றை குறைக்க பயன்படுகிறது. இதற்கு வெதுவெதுப்பான நீரில் இஞ்சி எண்ணெயை சேர்த்து கொதிக்க வைக்கவும். இதனை ஆவி பிடிப்பதன் மூலம் சளி, தலைவலி பிரச்சனை நீங்கி விடும்.
தலைமுடியை பராமரிக்க உதவுகிறது:
இஞ்சி எண்ணெயை தலை முடியில் அப்ளை செய்து மசாஜ் செய்யவும். இதன் மூலம் முடியை வலிமையாக வைத்து கொள்ள உதவுகிறது. மேலும் தலையில் ஏற்படும் அரிப்பு, பொடுகு பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.
செரிமான பிரச்சனை:
இஞ்சியில் உள்ள வைட்டமின்கள் உள்ள தாதுக்கள் வயிற்றுக்கு பெரிதும் உதவுகிறது. இஞ்சி எண்ணெய் வயிற்றில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இதற்கு இஞ்சி எண்ணையை வயிற்றில் மசாஜ் செய்ய வேண்டும்.
பாகற்காய் சாப்பிட்ட பிறகு மறந்தும் இதை மட்டும் சாப்பிடாதீங்க.. மீறி சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா |
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 | Health tips tamil |