நின்று கொண்டு தண்ணீர் குடிப்பவரா நீங்கள்..? அப்போ இதை கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்..!

Advertisement

Standing Drinking water Disadvantages in Tamil

தண்ணீர் குடிப்பது எவ்வளவு முக்கியம் என்பது நம் அனைவர்க்கும் தெரியும். ஆனால், நம்மில் பெரும்பாலானவர்கள் முறையாக தண்ணீர் குடிப்பதில்லை. ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீராவது குடிப்பது மிகவும் அவசியம். ஆனால், எவரும் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பதில்லை. தாகம் எடுத்தால் மட்டுமே தண்ணீர் கொடுப்பதை தான் பலபேர் வழக்கமாக வைத்து கொள்கிறார்கள். ஆனால், இது மிகவும் தவறான ஒன்று.

தண்ணீர் குடிப்பதற்கென்று ஒரு முறை இருக்கிறது. அதன்படியே தண்ணீர் குடிக்கவேண்டும். அதாவது, தண்ணீரை வாய்வைத்து தான் குடிக்க வேண்டும். இதுதான் தண்ணீரை குடிப்பதற்கு சரியான முறை. அதேபோல், தண்ணீரை நின்றுகொண்டு குடிக்கக்கூடாது. அப்படி நின்றுகொண்டு தண்ணீர் குடித்தால் உடலில் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதை பின்வருமாறு தெரிந்து கொள்ளலாம் வாங்க.

நின்று கொண்டு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள்:

 why drinking water while standing is harmful

அஜீரண கோளாறு:

நின்று கொண்டு தண்ணீர் குடிப்பதால் செரிமானம் மண்டலம் பாதிக்கப்படும். அதாவது, நின்று கொண்டு தண்ணீர் குடிக்கும் போது, ​​அதிக வேகத்துடனும் தண்ணீர் நேரடியாக கீழ் வயிற்றில் விழுவதால், அஜீரண கோளாறு பாதிக்கப்படும். மேலும், நின்று கொண்டு தண்ணீர் குடிப்பதால் நரம்புகள் பதற்றமடைகிறது.

மூட்டுவலி:

நின்றுகொண்டே தண்ணீர் அருந்துவதால், நரம்புகள் பதற்றமடைந்து திரவங்களின் சமநிலையை சீர்குலைத்து மூட்டுவலி ஏற்பட வாய்ப்புள்ளது. மூட்டுகளில் அதிக திரவங்கள் தேங்கி கீல்வாதத்தை ஏற்படுத்துகிறது.

அதிகம் தண்ணீர் குடிப்பது நல்லதா? கெட்டதா?

நுரையீரல் பிரச்சனை:

நின்றுகொண்டே தண்ணீர் குடிக்கும்போது, தேவையான சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் கல்லீரல் மற்றும் செரிமான மண்டலத்தை சென்றடையாது. இதனால் ஆக்ஸிஜன் அளவு இந்த வழியில் சிரமப்படுகிறது. இதனால், நுரையீரல் மற்றும் இதய பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

சிறுநீரக கோளாறு:

நின்று தண்ணீர் குடிக்கும் போது, ​​தண்ணீர் அதிக அழுத்தத்துடன் கீழ் வயிற்றில் வடிகட்டப்படாமல் செல்கிறது. இது நீர் அசுத்தங்கள் சிறுநீர்ப்பையில் குடியேறி, சிறுநீரகத்தின் செயல்பாட்டை சேதப்படுத்துகிறது. இதனால் சிறுநீரக பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

தண்ணீர் குடிக்கும் முறை:

தரையில் அல்லது நாற்காலியில் அமர்ந்துகொண்டு முதுகை நிமிர்த்தி தண்ணீர் குடிப்பது தான் சிறந்த வழி. அதேபோல், தண்ணீரை தலையை தூக்கி தண்ணீர் குடிக்கக்கூடாது, தண்ணீரை வாய்வைத்து(உறிஞ்சி) தான் குடிக்க வேண்டும். இவ்வாறு தண்ணீர் குடிப்பது தான் ஆரோக்கியத்திற்கு நல்லது.

சீரகத் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..?

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips in tamil
Advertisement