உடல் ஆரோக்கியமாக இருக்க இந்த 5 உணவுகளை மட்டும் சாப்பிடுங்க..!

Advertisement

What to Eat to Keep The Body Healthy in Tamil

அனைவருக்கும் உடல் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியம். உடல் ஆரோக்கியமாக இல்லையென்றால் நமக்கு தொடர்ந்து பல நோய்கள் வர தொடங்கிவிடும். இக்காலத்தில் வாழ்க்கை வாழ்வதற்கு அடிப்படையான ஒன்று பணம். எனவே பணத்தை சம்பாதிக்க அனைவரும் ஏதோவொரு வேலையினை செய்து கொண்டிருக்கிறோம். அப்படி வேலை செய்வதற்கு முதலில் நமது உடலானது  ஆரோக்கியமாக இருக்க வேண்டும். எனவே உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க பல இயற்கை உணவுகள் உள்ளது. அவற்றில் நட்ஸ் வகைகள் மிகவும் சிறந்தது. ஓகே வாருங்கள் உடலை ஆரோக்கியமாக வைக்க என்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம்.

What are The Top 5 Healthy Nuts to Eat in Tamil:

பிஸ்தா பருப்பு:

what are the top 5 healthy nuts to eat in tamil

பிஸ்தாவில் கொழுப்புகள், புரதங்கள், நார்ச்சத்து, வைட்டமின் B6, தயாமின் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பிஸ்தாவை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் சாப்பிட்டு வருவதன் மூலம் அவற்றின் முழு சத்துக்களையும் பெறலாம்.

கருப்பு திராட்சை:

 what do you eat to keep yourself healthy in tamil

கருப்பு திராட்சை உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கருப்பு திராட்சையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்திற்கும் முடியின் வளர்ச்சிக்கும் சிறந்தது. எனவே கருப்பு திராட்சையை இரவு ஊறவைத்து சாப்பிட்டு வருவதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்கலாம்.

உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்க இந்த உணவுகளை தவறாமல் சாப்பிடுங்கள்

பேரிச்சம்பழம்:

 what to eat to keep the body healthy in tamil

பேரிச்சம்பழத்தில் அதிக அளவில் இரும்புச்சத்து உள்ளது. பேரிச்சம்பழம் சாப்பிடுவதன் மூலம் உடல் ஆற்றலுடன் இருக்கிறது. எனவே இதனை ஊறவைத்தோ அல்லது சாதாரணமாகவோ சாப்பிட்டு வருவதன் மூலம் உடலை ஆரோக்கியாமாக வைத்து கொள்ளலாம்.

பாதாம் பருப்பு:

பாதாம் பருப்பு

பாதாமில் நம் உடலுக்கு தேவையான ஏராளனமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் நாம் பாதாமை சாப்பிடுவதன் மூலம் கொலஸ்ட்ராலை குறைக்கவும், இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்கவும் மற்றும் மூளையை ஆரோக்கியமாக வைக்கவும் முடிகிறது.

அக்ரூட் பருப்பு:

அக்ரூட் பருப்பு

அக்ரூட் பருப்பில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இது மூளை மற்றும் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவுகிறது.

ஆரோக்கியத்திற்கு 5 ஜி தேவை இதை உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ளுங்கள்

எவ்வளவு சாப்பிட வேண்டும்.?

நட்ஸ்களில் 80% அளவிற்கு கொழுப்புசத்து உள்ளது. எனவே இதனை அதிகமாக எடுத்து கொள்ளுதல் கூடாது. அதிகமாக எடுத்து கொண்டால் உடல் எடை அதிகரிப்பு, பசியின்மை, உடல் சூடு போன்ற பல பிரச்சனைகள் வரக்கூடும். எந்தவொரு உணவையும் அளவோடு எடுத்து கொள்வது நல்லது. அதாவது “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்பதை அனைவரும் அறிய வேண்டும்.

நட்ஸ்களை ஊறவைத்து சாப்பிடுவதன் மூலம் அதன் முழு சத்துக்களையும் பெறமுடியும். மேலும் காலை அல்லது மாலை நேரங்களில் நட்ஸ்களை சாப்பிடுவது நல்லது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Natural health tips in tamil
Advertisement