Licious
வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் நமக்கும் சற்று ஆச்சரியமாக தான் இருக்கும் இந்த ஆன்லைன் இறைச்சி கடை. சுத்தமான ருசியான தரமான இறைச்சி மற்றும் கடல் உணவுகள் கிடைக்குமா என்ற ஐயம் இருக்கத்தான் செய்யும். ஆனால் அதனையும் வெற்றிகரமாக மாற்றியுள்ளனர், நண்பர்களான அபய் ஹஞ்சுரா மற்றும் விவேக் குப்தா.
அசைவம் சாப்பிடுவது உங்களுக்கு பிடிக்குமா? உங்களுக்குப் பிடித்த அசைவ உணவுகள் அல்லது மிகவும் சுத்தமான ருசியான கோழி, மட்டன் அல்லது மீன் ஆகியவை உங்கள் வீட்டிற்கே வந்து டெலிவரி செய்தால் எப்படி இருக்கும். ஞாயிறு அன்று நீங்கள் ஓய்வெடுக்க நினைக்கும் போது உங்கள் வீட்டில் உள்ளவர்கள் உங்களை சந்தைக்கு இறைச்சி வாங்க செல்ல சொல்கிறார்கள், கண்டிப்பாக அது உங்களுக்கு பிடித்தமில்லாத ஒன்றாக தான் இருக்கும். காரணம் அங்கு இருக்கும் சுத்தமின்மையும் ஒரு காரணமாக இருக்கலாம். இவற்றை எல்லாம் யோசித்த அபய் ஹஞ்சுரா மற்றும் விவேக் குப்தா, தங்களின் கனவான சுய தொழிலை இறைச்சி மற்றும் கடல் உணவுகள் வீடுகளுக்கே சுத்தமான முறையில் டெலிவரி செய்வதில் இறங்கிவிட்டார்கள்.
ஆம், லிசியஸ் நிறுவனத்தின் சேவை, புதிய இறைச்சி, மீன் போன்ற கடல் உணவுகள் மற்றும் முட்டைகள் என்று நீங்கள் விரும்பும் உணவுகளின் இறைச்சிகளை, உங்கள் வீட்டிற்கே வந்து தருவதுதான். வாருங்கள் அந்த நிறுவனத்தை பற்றியும் அதை உருவாக்கியவர்களின் முயற்சியை பற்றியும் தெரிந்த்துக்கொள்வோம்.
Licious Startup Success Story in Tamil:
Licious Startup founders:
2015-ல் அபய் ஹஞ்சுரா மற்றும் அவரது நண்பர் விவேக் குப்தா ஆகியோர் இணைந்து licious என்னும் e-Commerce முறையில் meat trade, அதாவது இறைச்சி, மீன் மற்றும் முட்டைகளை விற்கும் தொழிலை தொடங்கினர். இருவரும் உணவுத்துறைகளில் வெவ்வேறு துறைகளில் பணிபுரிந்துக் கொண்டு இருந்தனர். ஒருநாள் மதியம் இருவரும் ஒரு ஹோட்டலில் அவர்கள் தொழில் சம்பந்தமாக பேசிக்கொண்டு சிக்கன் சாப்பிடும் போது, அந்த கோழி அவர்களுக்கு தரமற்றதாக தோன்றியுள்ளது. அவர்கள் இருவரும் தொழில் தொடங்குவதற்கான ஆராய்ச்சியில் இறங்கிய போது 73% இந்திய மக்கள் இறைச்சி மற்றும் கடல் உணவுகளை விரும்புவதாகவும் ஆனால் அத்தகைய உணவுபொருட்கள் தரமானதாக மக்களுக்கு கிடைக்கவில்லை என்பதை அறிந்தனர். இந்திய குடுப்பதினார் மாதம் ரூபாய் 2000 முதல் 3000 வரை இறைச்சி, மீன் மற்றும் முட்டை வாங்குவதற்கு செலவழிப்பதாக கண்டறிந்த அவர்கள் அதற்கான ஒரு brand உருவாக்க நினைத்தனர். அந்த நேரத்தில், இந்தியாவில் நல்ல இறைச்சி கடைகள் ஆன்லைனில் இல்லை. சந்தையில் அதிக விலையில் தரமற்ற இறைச்சி மற்றும் மீன்கள் தான் கிடைத்ததுள்ளது. இதுதான் அவர்கள் தொழில் தொடங்க முக்கிய காரணமாக அமைத்துள்ளது.
இளம் தொழில்அதிபர் ரிதேஷ் அகர்வால் வெற்றிக்கு இதுதான் காரணமா…
Licious Startup founded year:
அவர்களுக்கு இந்த தொழில் எந்தளவுக்கு வெற்றியை தேடி தரும் என்பது தெரியவில்லை ஆனால் அதற்கான முயற்சியில் இறங்கிய அவர்கள் 2015-ல் தங்களது உயந்த பதவிகளை விட்டுவிட்டு, அவர்களின் கனவான, சுய தொழிலை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் இருந்து பணம் திரட்டி, இந்தியாவில் இறைச்சி மற்றும் கடல் உணவுகளுக்கான ஆன்லைன் கடையை Delightful Gourmet Pvt Ltd கீழ் licious என்ற பெயரில் தொடங்கினார். முதலில் பெங்களூரை தலைமையிடமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதன் சேவைகள் முதலில் பெங்களூரில் தொடங்கியது. ஆனால் இப்போது இந்தியாவில் 20க்கும் மேற்பட்ட பெரும் நகரங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அவர்களின் நிறுவனம் தொடங்கிய போது, அவர்களையும் சேர்த்து மொத்தம் 5 நபர்கள் உள்ளடக்கியதாக இருந்தது. 2020 கணக்கின்படி, சுமார் 3800 ஊழியர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிறுவனம், பல்வேறு வகையான சிறந்த உணவு பொருட்கள் தயாரிப்பது மற்றும் சிறந்த வாடிக்கையாளர் சேவை வழங்குவதால் இந்தியாவில் முன்னணி ஆன்லைன் இறைச்சி மற்றும் கோழி கடையாக மாறியுள்ளது.
டாப் 10 சிறு தொழில்கள் | Top 10 Small Business Ideas in Tamil
Licious Networth:
licious ஆரம்பித்த ஒருவருடத்தில் அதாவது, 2016-ல், $25 மில்லியன் திரட்டியது. 2018ல் $30 மில்லியன் திரட்டியது. 2020-ல் Licious-ன் மதிப்பு மொத்தம் $75 மில்லியன் ஆகும். லிஸியஸ் நிறுவனத்தின் 2022-ம் ஆண்டின் நிகர மதிப்பு INR 1,140Cr ஆகும். அதாவது Rs 1000 crore நிகர லாபத்தை 6 வருடங்களில் பெற்றுள்ளனர்.
லிசியஸ் கம்பெனி வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக இருப்பது அவர்களின் இறைச்சி, கடல் உணவு மற்றும் சைவப் பொருட்கள் உட்பட பல வகையான உணவுபொருட்களை உயர்ந்த தரத்தில் வழங்குவது மற்றும் அவர்களின் இணையதளம் பயன்படுத்த எளிதானது, டெலிவரி சேவை விரைவானது, நம்பகமானது, மேலும் பல கட்டண விருப்பங்கள் வாடிக்கையாளருக்கு தகுந்தவாறு அமைத்துள்ளனர்.
அவர்கள் தங்கள் நிறுவனத்திற்கு பெயரிடுவதற்கு, 300-க்கும் அதிகமான பெயர்களை அலசியுள்ளனர். லிசியஸ் என்ற சொல்லுக்கு சுவையான என்று அர்த்தம் வந்ததால் அவர்களுக்கு இந்த பெயர் திருப்தி அளிக்கக்கூடியதாக இருந்துள்ளது.
தினமும் 9,000 ரூபாய் சம்பாதிக்க வேண்டுமா..? அப்போ இந்த தொழில் தான் சரியாக இருக்கும்..!
அவர்கள் இருவரும் நல்ல சம்பளம் வரக்கூடிய தொழிலை விட்டுவிட்டு அவர்களின் கனவை நோக்கி மிகவும் பாதுகாப்பாகவும் அதிக ஆராய்ச்சிகளுடனும் பயணித்தனர். இன்று இந்தியாவில் முன்னணி நிறுவனமாகவும் சிறந்த தொழில்முனைவர்களாகவும் இருவரும் விளங்குகிறார்கள். இவர்கள் தொழிலை ஆரம்பிக்கும் போது சிறிய பயமிருந்ததாக கூறும் அவர்கள் அந்தப்பயம் அவர்களை அதிக முயற்சிகளை எடுக்கவைத்தகவும் மிக அதிக கவனத்துடன் செய்யப்பட தூண்டியதாகவும் கூறுகிறார்கள்.
நீங்களும் ஒரு தொழில்முனைவோராக விரும்பினால் உங்களின் பாதை என்ன?, இப்போதைய சந்தை பிரச்சனைகள் என்ன?, அதற்கான தீர்வு என்ன?, என்பதை இவர்கள் போல் ஆராய்ந்து செயல்படுங்கள். உங்கள் கனவுகளும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
இது போன்ற தொழில்முனைவோரின் வெற்றிக்கதைகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | success story |