Today Trending Business in Tamil
இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருக்குமே ஏதாவது ஒருவகையில் மிக மிக அவசியமாக தேவைப்படுவது பணம் தான் அப்படி நமது வாழ்க்கையை சுமுகமாக நடத்தி செல்வதற்கு மிகவும் தேவைப்படும் பணத்தை நாம் சம்பாதிக்க வேண்டும் என்றால் அதற்கு நீங்கள் நன்றாக படித்திருக்க வேண்டும் என்று தான் அவசியம் இல்லை. உங்களுக்கு அடிப்படை கல்வி தகுதி இல்லை என்றால் கூட நீங்கள் கைநிறைய சம்பாதிக்கலாம். உங்களின் மனதில் இப்பொழுது ஒரு கேள்வி எழும் அது எப்படி நாம் படிக்காமல் இன்றைய சூழலில் சம்பாதிக்க முடியும். இந்த பதிவை முழுதாக படித்திர்கள் என்றால் உங்கள் மனதில் எழும் அனைத்து கேள்விகளுக்கமான சரியான பதில் கிடைத்துவிடும். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Current Trending Business in Tamil:
பொதுவாக நாம் எங்காவது வெளியில் செல்ல வேண்டும் என்றால் உடனடியாக நமது வீட்டில் உடனடியாக கார், பைக் -யை எடுப்போம். ஆனால் உங்களிடம் கார், பைக் இரண்டுமே இல்லை என்றாலோ, இருந்தாலும் உங்களுக்கு அதை ஓட்ட தெரியாது என்றால் என்ன செய்வது உடனே ஆட்டோ, கார் வாடகைக்கு எடுப்போம்.
ஆனால் இனிமேல் கவலை வேண்டாம். இன்றைய காலகட்டத்தில் பைக் சர்வீஸ் என்று ஒரு ஆப்சன் நமக்கு உள்ளது. அதனால் நீங்கள் இதனை பயன்படுத்தி எங்கு வேண்டுமானாலும் எளிமையாக செல்லலாம்.
எனவே இதனை அனைவருமே விருப்புகிறார்கள். அதனால் நீங்கள் இந்த பைக் டேக்ஸி சர்வீஸ் சென்டர் தொழிலை துவங்கினீர்கள் என்றால் நன்கு சம்பாதிக்கலாம்.
தேவையான முதலீடு மற்றும் மூலப்பொருள்:
இந்த பைக் டேக்ஸி சர்வீஸ் சென்டர் தொழிலுக்கு தேவையான முக்கியமான மூலப்பொருள் என்று பார்த்தால் பைக் மற்றும் அதனை ஓட்ட தெரிந்த நபர்கள் தான்.
இதற்கான முதலீடு என்று பார்த்தால் 1 லட்சம் தான். அது எப்படி 5 பைக் என்றாலும் அதற்கு 5 லட்சம் வருமே என்று கேட்பீர்கள். ஆனால் பைக் அனைத்தும் மாத தவணையாக எடுத்துக் கொள்ளலாம். ஆகவே கஷ்டம் இருக்காது.
கல்வித் தகுதி இல்லாமல் கைநிறைய வருமானம் தரக்கூடிய சுயதொழில்
தொழில் தொடங்கும் முறை:
இந்த தொழிலை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் தொடங்கலாம். ஆனால் இப்படி ஒரு சர்வீஸ் சென்டர் உள்ளது என்பது நீங்கள் தொடங்கும் இடத்திலிருந்து சுற்றி உள்ள அனைத்து இடங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.
அதற்கு விளம்பரம், பிட் நோட்டிஸ் என்று விளம்பரம் செய்யலாம். வாட்சப் சேவையை கூட தொடங்கலாம். அதேபோல் முதலில் இந்த தொழிலை 5 பேர் கொண்ட தொழிலாக தொடங்குங்கள்.
அதேபோல் வண்டியில் எப்போதும் தண்ணீர் வைத்திருக்க வேண்டும். ஏனென்றால் வண்டியில் வருபவருக்கு கண்டிப்பாக தண்ணீர் தாகம் எடுக்கும் ஆகவே வைத்துக் கொண்டால் உங்களின் சேவை மற்றவர்களின் தாகத்திற்கும் உங்களின் சேவையை பற்றிய சொல்லவும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.
வருமானம்:
நீங்கள் இதில் கிலோமீட்டர் அடிப்படையில் தான் சம்பாதிக்க முடியும். அதாவது நீங்கள் ஒரு கிலோமீட்டருக்கு 30 ரூபாய் என்று வாங்குகிறீர்கள் என்று வைத்து கொள்வோம்.
இப்பொழுது உங்களிடம் வேலை பார்க்கும் ஒரு நபருக்கு வரும் கஸ்டமர் 3 கிலோமீட்டர் செல்விருக்கிறார் என்றால் உங்களுக்கு 90 ரூபாய் கிடைக்கும். இதுபோல் 20 கஸ்டமர்கள் வந்தார்கள் என்றால் 1,800 ரூபாய் கிடைக்கும்.
இப்பொழுது உங்களிடம் வேலை பார்க்கும் 5 நபர்களுக்கும் இதேபோல் கஸ்டமர்கள் வந்தால் உங்களுக்கு ஒரு நாளைக்கு 9,000 ரூபாய் கிடைக்கும். மாதம் 2,70,000 ரூபாய் கிடைக்கும்.
தினமும் காலையில் போட்ட முதலீட்டை விட அதிகமாகவே மாலைக்குள் திருப்பி சம்பாதித்துவிடலாம்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |