குறைந்த முதலீட்டில் நிரந்தர வருமானம் தரும் தொழில்
காலங்கள் மாற மாற அதற்கேற்றவாறு நாம் பயன்படுத்தும் பொருட்களும் மாறிவருகின்றன. அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. எனவே, நாம் சம்பாதிக்கும் பணம் அனைத்தும் அன்றாட தேவைகளுக்கே சரியாக இருக்கிறது. பிறகு எப்படி எதிர்கால தேவைக்காக சம்பாதிக்க முடியும். அதற்கு ஒரே வழி சுயமாக ஒரு தொழில் செய்வதுதான். சுயதொழில் செய்வதற்கு முன், இக்காலத்தில் எந்த பொருள் மக்களுக்கு அதிகமாக தேவைப்படுகிறதோ அந்த தொழிலாக பார்த்து செய்ய வேண்டும். அப்பொழுதான் சுயதொழிலில் நல்ல வருமானம் ஈட்ட முடியும். எனவே, அப்படி மக்கள் அன்றாடம் தேவைகளில் ஒன்றாக மாறிவிட்ட இந்த தொழில் உங்களுக்கு அதிக வருமானத்தை பெற்று தரும். அத்தகைய தொழிலை பற்றி இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம் வாருங்கள்….
கூரியர் தொழில்
இத்தொழிலை எப்படி தொடங்குவது.?
கூரியர் business தொடங்குவதற்கான முதன்மையான விஷயம் என்னவென்றால், எந்த வகையான பார்சலை முதலில் குறிப்பிட்ட நேரத்திற்குள் டெலிவரி செய்யவேண்டும் என்பதை தீர்மானிப்பதே.
நீங்கள் டெலிவரி செய்யும் பார்சலில் ஆவணங்கள், பொருட்கள், தயாரிப்புகள், உணவுப் பொருட்கள், பழங்காலப் பொருட்கள் என பலபொருட்கள் இருக்கலாம். அனைத்தையும் சரியான நேரத்தில் தகுந்த பாதுகாப்புடன் டெலிவரி செய்வதை உறுதிசெய்ய வேண்டும்.
முதலீடு எவ்வளவு.?
கூரியர் பிசினஸ் தொடங்க போதுமான முதலீடு உங்களுக்கு தேவைப்படும். உங்கள் கூரியர் பிசினஸ் நெட்ஒர்க்கை திறம்பட செயல்படுத்த உங்களுக்கு அதிகபட்சம் 2 லட்சம் முதலீடு தேவைப்படும்.
கூரியர் பிசினெஸ்க்கு பொருட்களை டெலிவரி செய்ய சரியான வாகன வசதிகள் தேவைப்படும். இதனை நீங்கள் பொருட்களின் எடை, செல்லும் தூரம் இவற்றை தேர்வு செய்ய வேண்டும். உங்களுக்கான வாகனத்தை நீங்கள் வாடகை அல்லது சொந்தமானதாகவும் பயன்படுத்தலாம்.
பார்சல்களை பேக்கிங் செய்வதற்கும் எடுத்துச் செல்வதற்கும், பல்வேறு வகையான அட்டைப்பெட்டிகள், பெட்டிகள், டோலிகள், டேப்கள், சரக்கு பட்டைகள், ஜிபிஎஸ் சாதனங்கள் மற்றும் ஸ்மார்ட்ஃபோன்கள் போன்ற சில அத்தியாவசிய உபகரணங்கள் தேவைப்படும்.
தொழில் செய்ய எவ்வளவு இடம் தேவை.?
இந்த தொழிலை தொடங்குவதற்கு உங்களுக்கு ஒரு பாதுகாப்பான இடம் தேவைப்படும். வாங்கி வைத்துள்ள பொருட்களை பேக்கிங் செய்வதற்கும் டெலிவரி செய்ய தாமதமாகும் பொருட்களை பாதுகாப்பதற்கும் ஒரு சிறிய பகுதியில் 30×30 இடம் இருந்தால் போதும்.
உங்கள் கூரியர் சர்விஸ் பிசினஸ் நகரத்தின் மையத்தில் இருப்பது சிறந்தது. இது உங்களுக்கு அதிக வாடிக்கையாளர்களை தேடித்தரும். உங்களின் பாதுகாப்பான மற்றும் குறுகியகால டெலிவரியும் உங்களுக்கு அதிக வாடிக்கையாளர்களை தேடித்தரும்.
எவ்வளவு வருமானம் கிடைக்கும்.?
இந்த தொழில் உங்களுக்கு நஷ்டத்தை வழங்காது. தொடர்ந்து 3 வருடங்கள் நீங்கள் கடுமையாக உழைத்தால் நீங்கள் மாதம் 1 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.