Wholesale Business Ideas in Tamil Nadu
வணக்கம் நண்பர்களே. இப்பதிவில் wholesale business ideas with low investment பற்றி பார்க்கலாம் வாங்க. பொதுவாக அனைவர்க்கும் குறைந்த முதலீட்டில் தொழில் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதுமட்டுமில்லாமல், குறைந்த முதலீட்டில் உள்ள தொழில்கள் மூலம் அதிக லாபம் ஈட்ட முடியும். ஆகையால், பெரும்பாலானவர்கள் குறைந்த முதலீட்டில் உள்ள தொழில்களை தான் தேடுகிறார்கள். எனவே, அவர்களுக்கு பயனுள்ள வகையில் குறைந்த முதலீட்டில் உள்ள மொத்த வியாபாரம் பற்றி பார்க்கலாம் வாங்க.
சுயதொழில் செய்ய நினைக்கும் பெரும்பாலானவர்கள் தேர்வு செய்வது wholesale business தான். wholesale business செய்வதன் மூலம் பல நன்மைகளை பெறலாம். ஆகையால், சுயதொழில் செய்ய நினைப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் குறைந்த முதலீட்டில் செய்யக்கூடிய wholesale business பற்றி பார்க்கலாம்.
Wholesale Business Ideas With low Investment:
கலை மற்றும் கைவினைப்பொருட்கள்:
Wholesale Business -களில் கலை மற்றும் கைவினைப்பொருட்கள் ஒரு நல்ல தொழில் ஆகும். இப்போதும் டிமாண்ட் உள்ள பொருட்களில் கலை மற்றும் கைவினைப்பொருட்கள் ஒன்று ஆகையால், நீங்கள் Wholesale Business செய்ய விரும்பினால் Arts and Crafts Wholesale Business -ஐ உங்கள் விருப்பங்களில் ஒன்றாக வைத்து கொள்ளலாம்.
விவசாய உபகரணங்கள்:
விவசாய உபகரணங்களில் பண்ணை இயந்திரங்கள், கைக்கருவிகள், உர தொட்டிகள், விவசாய கம்பி போன்றவை அடங்கும். என்றும் கைக்கொடுக்கக்கூடிய தொழில் என்றே இதை கூறலாம். ஆகையால், Wholesale Business -களில் விவசாய உபகரணங்களையும் வைத்து கொள்ளுங்கள்.
ஆடை மற்றும் ஜவுளி:
லாபகரமான Wholesale Business -ஐ தேடுகிறீர்களா.? அப்போ இந்த தொழிலை தேர்ந்தெடுங்கள். என்றும் அழியாத தொழில்களில் ஆடை தொழில்களும் ஒன்று. இதனை நீங்கள் மொத்தமாக வாங்கி வந்து வியாபரம் செய்யும் போது அதற்கான செலவு குறைவு லாபம் அதிகம்.
கட்டுமானப் பொருள்கள்:
கட்டுமான பொருட்களான செங்கல், ஜல்லி, கம்பி போன்ற பொருட்களை மொத்தமாக வாங்கி வந்து விற்பனை செய்வதன் மூலம் உங்கள் தொழிலின் லாபம் அதிகரிக்கும். அதற்கு நீங்கள் முதலில், செங்கல் உற்பத்தி நிறுவனங்கள், இரும்பு தயாரிக்கும் நிறுவனங்கள் போன்றவற்றில் சிறந்த நிறுவனங்களை தேர்வு செய்து தொடர்பு வைத்திருக்க வேண்டும். கட்டுமானத் தொழிலில் தரம் குறையாமல் பார்த்துக் கொள்ளவதன் மூலம் தொழிலில் வளர்ச்சி அடையலாம்.
இனி வரும் காலங்களில் இந்த தொழிலுக்கு தான் மவுஸ்..
அழகுசாதனப் பொருட்கள்:
அழகுசாதனப் பொருட்கள் பயன்பாடும், அதன் தேவையும் என்றுமே குறையாது. ஆகையால், அழகுசாதனப் பொருட்கள் விற்பனையை உங்கள் தொழிலாக தேர்வு செய்யலாம். முதலில், அழகு சாதனப் பொருட்களை வைக்க குறைந்தபட்சம் 150 சதுர அடி இடத்தை தேர்வு செய்து மக்கள் புழக்கம் அதிகம் உள்ள இடத்தில் இத்தொழிலை தொடங்க வேண்டும்.
மரச்சாமான்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள்:
Wholesale Business -களில் அதிகம் டிமாண்ட் உள்ள தொழில் மரச்சாமான்கள் தொழில். ஆகையால் விற்பனையாளர்கள் மொத்தமாக கொள்முதல் செய்து, பொருட்களை நேரடியாக சில்லறை விற்பனையாளர்களுக்கு விற்க வேண்டும். இக்காலத்தில் மட்டுமில்ல எதிர்காலத்திலும் பர்னிச்சரின் தேவை அதிகரித்துக்கொண்டே இருக்கும். ஆகையால், இத்தொழில் உங்களுக்கு நல்ல தீர்வாக இருக்கும்.
மொத்த வியாபாரம் செய்ய என்ன செய்ய வேண்டும்.?
மொத்த விற்பனையாளர்கள் உற்பத்தியாளர்களிடமிருந்து பொருட்களை வாங்கும்போது குறைந்த விலையில் வாங்க வேண்டும். மொத்தமாக வாங்கும்போது அப்பொருட்களுக்கான முதலீடு என்பது குறைவாக இருக்கும். ஆகையால், உங்கள் தொழிலுக்குக்கான பொருட்கள் எங்கு குறைந்த விலையில் கிடைக்கிறதோ அங்கு சென்று பொருட்களை மொத்தமாக வாங்கி கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் மட்டுமே தொழிலில் நல்ல லாபம் ஈட்ட முடியும்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |