இனி வரும் காலங்களில் இந்த தொழிலுக்கு தான் மவுஸ்..

Advertisement

Tshirt Printing Business Plan in Tamil

இன்றைய கால இளைஞர்களுக்கு படித்த படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காமல் கிடைத்த வேலையை செய்கின்றனர். பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக பிடிக்காத வேலையை செய்கின்றனர். ஒருவேளை பிடிக்கவில்லை என்றால் மற்றொரு வேலையை தேடுகின்றனர். ஆனால் நாமாக சுயதொழில் செய்ய வேண்டும் என்று நினைப்பதில்லை. சுயதொழில் உங்களுக்கு பிடித்த வேலையைசெய்யலாம். பிடித்த வேலையாக இருந்தாலும் அதனை நீங்கள் தொழிலாக செய்யும் போது அதற்கான எதிர்காலம் எப்படி இருக்கிறது என்பதை பார்த்து விட்டு ஆரம்பிப்பதுஅவசியமானது. இந்த பதிவில் ஒரு அருமையான தொழிலை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

தொழிலின் வளர்ச்சி:

நீங்கள் வீட்டிலிருந்து செய்ய கூடிய தொழிலில் Tshirt printing தொழில் சிறந்த தொழிலாக இருக்கும். இந்த தொழில் வளர்ந்து வரும் தொழிலாகவும் இருக்கிறது. 2025 ஆம் ஆண்டிற்குள் 9.6% வளர்ந்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீட்டிலிருந்து லாபமான தொழில் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த தொழில் சிறந்ததாக இருக்கும்.

மூலப்பொருட்கள்:

Heat transfer printing Machine

  • Screen printing machine-20,000
  • Heat transfer printing Machine- 5000
  • Direct to Garment Printing Machine
  • Subliminal T- shirt paper

Screen printing machine ஒரே நேரத்தில் 1000 ட்ஷர்ட்டுகள் வரைக்கும் பிரிண்ட் செய்யலாம்.

Heat transfer printing Machine ஆனது எல்லா இடத்திலும் கிடைக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த மெஷின் பயன்படுத்துவதற்கு ரொம்ப ஈசியாக இருக்கும்.

Direct to Garment Printing Machine  ஆனது ஜெராக்ஸ் எடுக்கிற மிஷின் மாதிரி இருக்கும்.மேலும் ரொம்ப மெதுவாக தான் பிரிண்ட் செய்து கொடுக்கும். ஆனால் தரம் சிறந்ததாக இருக்கும்.

உங்களுக்கு பணம் குறைவாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் Heat transfer printing Machine பயனுள்ளதாக இருக்கும்.

இந்த மெஷின்கள் அனைத்தும் ஆன்லைன் ஸ்டோர் ஆன Alibaba, indiamart, Amazon, flipkart, போன்ற தளங்களில் கிடைக்கிறது.

Sஅடுத்து பிளேன் ட்ஷர்ட்டுகளில் பிரிண்ட் செய்வதற்கு subliminal T- shirt paper தேவைப்படும். இந்த பேப்பரின் விலையானது 200 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை இருக்கும்.

அடுத்து ட்ஷர்ட்டுகள் வாங்க வேண்டியிருக்கும், இந்த ட்ஷர்ட்டுகளை மொத்தமாக கிடைக்கும் இடங்களில் வாங்கி கொள்வது சிறந்தது. அதாவது திருப்பூர், கோயம்புத்தூர், பல்லடம், ஈரோடு, சென்னை, சூரத், பாண்டிச்சேரி, விழுப்புரம் போன்ற ஊர்களில் ட்ஷர்ட்டுகள் குறைந்த விலையில் கிடைக்கும்.

டிஷர்ட் எப்படி பிரிண்ட் செய்வது:

tshirt business ideas

முதலில் நீங்க என்ன டிசைன் துணியில் பிரிண்ட் எடுக்க போறிங்களோ அதை Photoshop app இல் டிசைன் கொடுத்து Subliminal print machine இல் subliminal paper வைத்து பிரிண்ட் எடுத்துக்கொள்ளவும். இப்போது Heat transfer printing Machine-ல் துணியை வைத்து அதன் மேல் பிரிண்ட் எடுத்த ஸ்டிக்கரை வைத்துமெஷினை ஆன் செய்து கொள்ள வேண்டும்.

நீங்கள் டிஷர்ட் பிரிண்ட் ஆனது எந்த மாதிரியான audience எந்த மாதிரி ட்ஷர்ட்டுகள் விரும்புகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இப்படி டிஷர்ட் பார்த்து பிரிண்ட் செய்தால் தான் விற்பனை ஆகும்.

தினமும் 2 மணி நேர வேலை மாதம் ரூ.15,000/- வருமானம்..!

எங்கு விற்பனை செய்வது:

பிரிண்ட் செய்தே டிஷர்ட்டை துணி கடைகளில் கொடுத்து விற்பனை செய்யலாம், அப்படி இல்லையென்றால் நீங்கள் ஓரு ஆன்லைன் ஸ்டோர் ஆரம்பித்து அதன் மூலம் உங்களுடைய டிஷர்ட்டை விற்பனை செய்யலாம்.

ஆன்லைன் ஸ்டோர் ஓபன் செய்வதற்கு ztorespot வலைத்தளம் மூலமாக ஓபன் செய்துகொள்ளலாம்.

வருமானம்:

ஒரு டிஷர்ட்டை 300 ரூபாய்க்கு விற்பனை செய்கிறீர்கள் என்றால் 50 ட்ஷர்ட்டுகள் விற்பனை செய்தால் 15,000 ரூபாய் வருமானம் கிடைக்கும்.

காசே இல்லாமல் செய்யக்கூடிய 5 பிசினஸ் இதுதாங்க..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

 

 

Advertisement