தினமும் 2 மணி நேர வேலை மாதம் ரூ.15,000/- வருமானம்..! Own Business in Tamil..!
தினமும் இரண்டு மணி நேரம் வேலை செய்தால் போதும் மாதம் 15,000/- ரூபாய் வரை நம்மால் சுலபமாக சம்பாதிக்க முடியும். அப்படிப்பட்ட ஒரு அருமையான சுயதொழிலை பற்றி தான் நாம் இப்பொழுது தெரிந்துகொள்ள போகிறோம். பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக கணவன், மனைவி இருவருமே சம்பாதிக்கிறார்கள்.
ஆனால் எல்லா வீட்டிலும் பெண்கள் வேலைக்கு செல்வதில்லை. அதற்கு முக்கிய காரணம் வீட்டில் வயதானவர்கள் அல்லது குழந்தைகளை பார்த்து கொள்ள வேண்டும் என்பதற்காக வேலைக்கு போக முடியாத சூழல் தான். ஆனால் வீட்டில் இருக்கும் பெண்கள் வேலைக்கு செல்லும் பெண்களை பார்த்து நம்மால் வேலைக்கு செல்ல முடியவில்லையே என்ற ஏக்கத்தை போக்க வீட்டில் இருந்து செய்ய தொழில் ஏதும் இருந்தால் செய்யலாம் என்று யோசித்து கொண்டிருப்பார்கள்.
அவர்களுக்கு எல்லாம் உதவிடும் வகையில் இந்த பதிவில் வீட்டில் இருந்து ஒய்வு நேரத்தில் செய்ய கூடிய தொழிலை பற்றி பதிவிட்டுள்ளோம். இந்த தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் தொழிலை ஆரம்பியுங்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வெறும் 2000 ரூபாய் முதலீட்டில் மாதம் 1 லட்சம் வரை சம்பாதிக்க முடியும்..!
டியூஷன்:
முன்பெல்லாம் படிக்கும் மாணவர்கள் நூறில் ஒரு சிலர் மட்டுமே டியூஷனுக்கு செல்வார்கள். ஆனால் இன்றைய கால கட்டத்தில் அனைவருமே டியூஷனுக்கு செல்கிறார்கள். காரணம் பெற்றோர்கள் தன குழந்தை டியூஷனுக்கு சென்றால் இன்னும் கொஞ்சம் நன்றாக படித்து நல்ல தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள் என்பதினால் நீங்கள் ஒரு டிகிரி முடித்திருந்தால் கூட போதும் இந்த தொழிலை ஆரம்பிக்கலாம்.
இந்த தொழிலுக்கு தனியாக இடம் தேவையில்லை. உங்கள் வீட்டிலேயே இடம் இருந்தாலே போதுமானது. வீட்டில் இருந்தபடியே நல்ல வருமானத்தை பெற முடியும்.
மேலும் இந்த தொழிலை நீங்கள் முழு நேரம் செய்ய தேவையிருக்காது. காலை மற்றும் மாலை நேரத்தில் 2 மணி நேரம் எடுத்தால் போதுமானது. ஒருவருக்கு 400 முதல் 500 வரை பீஸ் நிர்ணயிக்கப்படுகிறது. குறைந்தது 20 பேர் வந்தாலே 10,000 ரூபாய் வரை சுபலமாக சம்பாதிக்கலாம்.
மேலும் தனியாக ஒரு பாடத்தில் சிறந்து விளங்குவீர்கள் என்றால் அந்த படத்தை மட்டும் எடுக்கலாம். இதற்கு நீங்கள் எடுக்கும் பாடம் மற்றும் வகுப்பை பொறுத்து வருமானம் மாறுபடும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
10 மணிநேரம் உட்காந்திருந்தால் போதும் தினமும் 10,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |