Grocery Shop Business in Tamil
இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருக்குமே ஏதாவது ஒருவகையில் மிக மிக அவசியமாக தேவைப்படுவது பணம் தான் அப்படி நமது வாழ்க்கையை சுமுகமாக நடத்தி செல்வதற்கு மிகவும் தேவைப்படும் பணத்தை நாம் சம்பாதிக்க வேண்டும் என்றால் அதற்கு நீங்கள் நன்றாக படித்திருக்க வேண்டும் என்று தான் அவசியம் இல்லை. உங்களுக்கு அடிப்படை கல்வி தகுதி இல்லை என்றால் கூட நீங்கள் கைநிறைய சம்பாதிக்கலாம். உங்களின் மனதில் இப்பொழுது ஒரு கேள்வி எழும் அது எப்படி நாம் படிக்காமல் இன்றைய சூழலில் சம்பாதிக்க முடியும். இந்த பதிவை முழுதாக படித்திர்கள் என்றால் உங்கள் மனதில் எழும் அனைத்து கேள்விகளுக்கமான சரியான பதில் கிடைத்துவிடும். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.
Grocery Shop Business Plan in Tamil:
இன்றும் என்றும் நமக்கு அடிப்படை தேவைகள் என்பது இருந்து கொண்டே தான் இருக்கும். அதனால் நீங்கள் ஒரு மளிகை கடையை திறந்திர்கள் என்றால் உங்களுக்கு நல்ல லாபம் இருக்கும்.
முதலீடு மற்றும் மூலப்பொருள்:
இந்த தொழிலுக்கான முக்கியமான மூலப்பொருள் என்று பார்த்தால் மளிகை பொருட்கள் மற்றும் நமது அடிப்படை தேவைக்கான அனைத்து பொருட்களும் தான். மேலும் இந்த தொழில் செய்வதற்கான கடை.
இந்த தொழில் செய்வதற்கு முதலீடு என்று பார்த்தால் தோராயமாக உங்களுக்கு 1 லட்சம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை தேவைப்படும். அதேபோல் கடையில் வேலை செய்வதற்கு 2 அல்லது 3 ஆட்கள் தேவைப்படுவார்கள்.
8 மணிநேரம் வேலை செய்தால் தினமும் 3,000 ரூபாய் வரை சம்பாதிக்க கூடிய அருமையான தொழில் இது தான்
தொழில் செய்யும் முறை:
இந்த தொழிலை பொறுத்தவரையில் மிகவும் முக்கியமான ஒரு விஷயம் என்றால் நீங்கள் எங்கு கடை திறக்கிறீர்கள் என்பது தான். அதாவது நீங்கள் மக்கள் கூட்டம் அதிக அளவு வரும் கடைத்தெரு போன்றவற்றில் கடையை திறக்க வேண்டும்.
அப்படியில்லை என்றால் உங்கள் ஏரியாவில் ஏதும் மளிகை கடைகள் இல்லை என்றாலும் அங்கும் நீங்கள் கடை திறக்கலாம். அதேபோல் உங்களிடம் மக்களுக்கு தேவையான அடிப்படை பொருட்கள் அனைத்தும் இருக்க வேண்டும்.
மேலும் ஆரம்பத்தில் குறைவான விலைக்கு பொருட்களை அளிக்க வேண்டும் அப்பொழுது தான் மக்கள் உங்கள் கடையை தேடி மீண்டும் மீண்டும் வருவார்கள்.
வருமானம்:
நீங்கள் மளிகை பொருட்களை WholeSale-லாக தான் வாங்குகின்றிர்கள் அதனால் உங்களுக்கு மிக மிக குறைவான விலையில் கிடைக்கும். அதனால் நீங்கள் அதனை வாங்கி MRP விலைக்கு விற்றாலே உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
இப்பொழுது உங்கள் கடைக்கு ஒருவர் வந்து 100 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கி செல்கிறார். அதேபோல் தோராயமாக ஒரு நாளைக்கு 100 நபர்கள் வருகிறார்கள் என்றால் உங்களால் 10,000 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.
ஆண்டுமுழுவதும் Demand-ம் அதிக லாபமும் கிடைக்க கூடிய தொழில் இதுதான்
முதலீடே இல்லாமல் மாதம் 10,000 ரூபாய் வரை சம்பாதிக்க வேண்டுமா அப்போ இந்த தொழில் தான் சரியாக இருக்கும்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |