Jute Bag Business in Tamil
இன்றைய போட்டிகள் நிறைந்த உலகில் தங்கள் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காமல் பலரும் தங்களது வாழ்க்கையை அடுத்த நிலைக்கு முன்னேற்ற முடியாமல் மிக மிக கஷ்டபடுகிறார்கள். அதனால் இப்படிப்பட்ட நிலையில் உள்ள அனைவருமே ஏதாவது ஒரு சுயதொழிலை துவங்கி வாழ்க்கையில் முன்னேறலாம். ஆனால் ஒரு சிலருக்கு என்ன சுயதொழியல் தொடங்கினால் அதிக லாபம் கிடைக்கும் என்று தெரியவில்லை. அதனால் தான் அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கத்தில் தான் தினமும் நமது பதிவின் வாயிலாக ஒரு சுயதொழில் பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொண்டது வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் சணல் பை விற்பனை செய்யும் தொழில் பற்றிய முழுவிவரங்களையும் பற்றி அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் தான் இன்றைய பதிவை முழுதாக படித்து இந்த தொழிலை எவ்வாறு தொடங்குவது என்பதை அறிந்து கொண்டு அதனை தொடங்கை வாழ்க்கையில் முன்னேறுங்கள்.
Jute Bag Business Plan in Tamil:
இன்றைய சூழலில் சுற்றுசூழலை மாசுபடுத்த கூடாது என்ற புரிந்துணர்வு நாம் அனைவருக்குமே உள்ளது. அதனால் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்துவிட்டு அனைவருமே இந்த சணல் பையினை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.
அதனால் நீங்கள் இந்த தொழிலை துவங்கினால் அதிக லாபமா பார்க்கலாம்.
தொழில் செய்யும் முறை:
இந்த சணல் பை தொழிலை பொறுத்தவரையில் நீங்கள் இரண்டு முறையில் தொடங்கலாம். அதாவது முதல் முறை நீங்கள் ஒரு கடையை வைத்து அதில் சணல் பைகளை தயாரிக்கும் இடங்களில் இருந்து WholeSale-லாக வாங்கி விற்பனை செய்யலாம்.
அப்படி இல்லையென்றால் நீங்களே இந்த சணல் பைகளை தயாரித்து விற்பனை செய்யலாம். இதில் முதலாவது முறையை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.
ஆண்டுமுழுவதும் Demand-ம் அதிக லாபமும் கிடைக்க கூடிய தொழில் இதுதான்
முதலீடு மற்றும் மூலப்பொருள்:
இந்த தொழிலுக்கான முக்கியமான மூலப்பொருள் என்று பார்த்தால் சணல் பைகள் தான். மேலும் இந்த தொழில் செய்வதற்கான கடை. இந்த தொழில் செய்வதற்கு முதலீடு என்று பார்த்தால் தோராயமாக உங்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை தேவைப்படும்.
தொழில் தொடங்கும் முறை:
முதலில் மக்கள் கூட்டம் அதிக அளவு வரும் கடைத்தெரு போன்றவற்றில் கடையை திறக்க வேண்டும். பின்னர் சணல் பைகளை தயாரிக்கும் இடங்களில் இருந்து WholeSale-லாக வாங்கி விற்பனை செய்யுங்கள்.
அதிலும் குறிப்பாக மற்ற கடைகளை காட்டிலும் உங்களிடம் கலக்சன்ஸ் அதிகமாக இருக்க வேண்டும். மேலும் குறைவான விலையாக இருக்க வேண்டும் அப்பொழுது தான் மக்கள் உங்கள் கடையை தேடி மீண்டும் மீண்டும் வருவார்கள்.
முதலீடே இல்லாமல் மாதம் 10,000 ரூபாய் வரை சம்பாதிக்க வேண்டுமா அப்போ இந்த தொழில் தான் சரியாக இருக்கும்
வருமானம்:
நீங்கள் WholeSale-லாக தான் வாங்குகின்றிர்கள் அதனால் உங்களுக்கு மிக மிக குறைவான விலையில் கிடைக்கும். அதனால் நீங்கள் அதனை வாங்கி ஒரு பையின் விலை தோராயமாக 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யலாம்.
எனவே நீங்கள் தோராயமாக ஒரு நாளைக்கு 20 பைகளை விற்பனை செய்கின்றிர்கள் என்றால் நீங்கள் தோராயமாக ஒரு நாளைக்கு 2,000 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
அதனால் இந்த சணல் பை விற்பனை செய்யும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி உங்களின் வாழ்க்கையில் முன்னேறுங்கள்.
அதிக லாபம் மற்றும் டிமாண்ட் உள்ள இந்த தொழிலை இன்னும் செய்யலயா
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |