ஆண்டுமுழுவதும் Demand-ம் அதிக லாபமும் கிடைக்க கூடிய தொழில் இதுதான்..!

Advertisement

Simple and Profitable Business in Tamil

இந்த உலகில் பணம் என்று உருவாக்கப்பட்டதோ அன்றிலிருந்து பணம் தான் அனைத்தும் என்றாகிவிட்டது. அதாவது பணம் இல்லாதவர்களை இந்த உலகம் மனிதனாக கூட மதிப்பதில்லை. அதனால் தான் அனைவருமே தங்களது வாழ்க்கைக்கு தேவையான பணத்தை சம்பாதிக்க தொடங்கிவிட்டார்கள். ஆனால் ஒரு சிலருக்கு மற்றவர்களிடம் வேலைக்கு செல்வதை விட தானே தனக்கான பணத்தை சம்பாதிக்க கூடிய ஏதாவது ஒரு சுயதொழிலை செய்வது தான் மிக மிக பிடிக்கும். ஆனால் அப்படிப்பட்ட எண்ணம் கொண்டவர்களுக்கு என்ன தொழில் சுயதொழி தொடங்கினால் நமக்கு அதிக லாபம் கிடைக்கும் என்பது தான் மிக பெரிய கேள்வியாக உள்ளது. அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கத்தில் தான் இன்றைய பதிவில் மிகவும் எளிமையான சுயதொழில் பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அது என்ன சுயதொழில் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

என்ன தொழில்..?

Simple profitable business ideas in tamil

முதலி அது என்ன தொழில் என்பதை அறிந்து கொள்வோம் வாங்க. அது என்ன தொழில் என்றால் கோதுமை புள் பொடி தயாரித்து விற்பனை செய்யும் தொழில்.

ஆம் நண்பர்களே கோதுமை புள் பொடியை பல மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் தயாரிப்பிலும் மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. அதனால் நீங்கள் இந்த தொழிலை தொடங்கினீர்கள் என்றால் நல்ல லாபம் காணலாம்.

முதலீடே இல்லாமல் மாதம் 10,000 ரூபாய் வரை சம்பாதிக்க வேண்டுமா அப்போ இந்த தொழில் தான் சரியாக இருக்கும்

தேவையான முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:

இந்த கோதுமை புள் பொடி தயாரித்து விற்பனை செய்யும் தொழிலுக்கு தேவையான மூலப்பொருள் என்று பார்த்தால் நல்ல நிலையில் உள்ள கோதுமை விதைகள், Wheat Grass Kit மற்றும் Packing Machine ஆகியவை தேவைப்படும்.

இந்த Packing Machine விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். அதன் ஆரம்ப விலை 1000 ரூபாய் ஆகும். அதேபோல் Wheat Grass Kit-ன் விலையும் அதன் மாடலை பொறுத்து மாறுபடும்.

மேலும் இந்த Wheat Grass Kit-யை வாங்குகின்ற இடத்திலேயே நமக்கு தேவையான கோதுமை விதை மற்றும் உரம் ஆகியவை அளிக்கப்படும்.

தேவையான ஆவணங்கள் மற்றும் இடவசதி:

நீங்கள் தயாரிக்கும் Wheat Grass Powder-யை Online மூலமாக விற்பனை செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும். மேலும் இது ஒரு உணவுப்பொருள் சம்பந்தப்பட்ட தொழில் என்பதால் FSSAI பெற்றிருக்க வேண்டும்.

இந்த தொழில் செய்வதற்கு உங்கள் வீட்டிலேயே நன்கு சுத்தமான சிறிய இடம் இருந்தாலே போதும்.

தயாரிக்கும் முறை:

Simple and Profit Business in Tamil

முதலில் நாம் வாங்கி வைத்துள்ள கோதுமை விதைகளை நன்கு சுத்தம் செய்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு நாள் இரவு முழுவதும் ஊறவிடுங்கள். அதன் பிறகு நாம் வாங்கி வைத்துள்ள Wheat Grass Kit-ல் தேவையான அளவு மண் மற்றும் உரம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

இப்பொழுது நாம் ஊறவைத்துள்ள கோதுமை விதைகளை இதன் மீது தூவி கொள்ளுங்கள். அதற்கு தேவையான அளவு தண்ணீர் தெளித்து நன்கு வெயில் படும் இடத்தில் வைத்து கொள்ளுங்கள்.

அதிக லாபம் மற்றும் டிமாண்ட் உள்ள இந்த தொழிலை இன்னும் செய்யலயா

இதற்கு தினமும் தேவையான அளவு தண்ணீர் தெளித்து வந்தீர்கள் என்றால் 10 நாட்களில் கோதுமை புள் வளர்ந்து விடும். பிறகு அதனை அறுவடை செய்து அதனை நன்கு நிழலில் காயவைத்து பொடியாக அரைத்து கொள்ளுங்கள்.

அதனை பிறகு நங் சலித்து Packing Machine-யை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.

விற்பனை செய்யும் முறை:

பேக்கிங் செய்து வைத்துள்ள பொடியை நீங்கள் நாட்டு மருந்து கடைகள், சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களுக்கு நீங்களே நேரடியாக சென்றும் விற்பனை செய்யலாம். அப்படி இல்லை என்றால் Online மூலமாக விற்பனை செய்யலாம்.

வருமானம்:

பொதுவாக கடைகளில் தோராயமாக 100 கிராம் கோதுமை புள் பொடி 300 ரூபாய் முதல் 400 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது என்றால், ஒரு நாளைக்கு நீங்கள் தோராயமாக 3 கிலோ கோதுமை புள் பொடியை விற்பனை செய்கிறீர்கள் என்றால் 9,000 ரூபாய் – 12,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

எனவே இந்த தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

தினமும் 9,000 ரூபாய் சம்பாதிக்க வேண்டுமா அப்போ இந்த தொழில் தான் சரியாக இருக்கும்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement