சலவை தொழில் ஆரம்பித்த 3 ஆண்டுகளில் 160 நகரங்களில் 600 மையங்கள்….

Advertisement

Tumbledry-யின்  வெற்றிக்கதை 

அனைவருக்கும் தொழில் தொடங்கவேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் அப்படி தொடங்கிய தொழில் நஷ்டமில்லாமல் செயல்படுமா என்றால் அது கேள்விக்குறிதான். யார் ஒருவரும் தனது முதல் முயற்சிலேயே வெற்றி பெறுவதில்லை. அப்படி முதல்முயற்சிலையே வெற்றி பெற்றவர்கள் அதற்காக அதிகம் உழைத்து இருக்க வேண்டும். அப்படி தனது முதல் முயற்சியாக தொடங்கிய தொழிலை வெற்றிகரமாக மாற்றியுள்ளனர். Tumbledry நிறுவனத்தின் நிறுவனர்கள் அவர்களை பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்..

Tumbledry laundry and Dry Cleaning Success Story:

கௌரவ் நிகம் டம்ப்ளெட்ரியின் இணை நிறுவனர் மற்றும் இயக்குனர் ஆவார். லக்னோவை இருப்பிடமாக கொண்ட கவுரவ், அங்குள்ள பிரபல லா மார்டினியர் கல்லூரியில் பி.காம் படிப்பை முடித்தார். அதனை தொடர்ந்து புனேவில் உள்ள சிம்பயோசிஸில் எம்.பி.ஏ படிப்பையும் முடித்தார். தனது ஆரம்பகட்ட வாழ்க்கையை  டெலிகாம் துறையில் முன்னணி நிறுவனமான ஏர்டெல்லில் 12 ஆண்டுகள் பணிபுரிந்த அவர். மொபைல் போன் தயாரிப்பாளரான LAVA வின் தயாரிப்பு தலைவராக பணிமாறுதல் பெற்றார்.

கௌரவ் நிகம், LAVA நிறுவனத்தின் senior vice president-ஆக இருந்தபோது, ​​ஒவ்வொரு மாதமும் 15 நாட்கள் சீனாவில் தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்த நேரத்தில் துணிகளை துவைக்க சரியான வழிகள் அவருக்கு கிடைக்கவில்லை. அப்போது அவரின் துணிகளை எடுத்துக்கொண்டு நீண்ட தூரம் பயணம் செய்து ஒரு உலர் கிளீனர் கடையைக் கண்டுபிடித்துள்ளார். அது அவருக்கு ஒரு உந்துவேகமாக அமைந்ததுள்ளது.

இந்தியாவில் அமைப்புசார தொழிலாக காணப்படும் இந்த சலவை தொழிலை, ஒரு brand-உடன் முன்னோக்கி எடுத்து செல்ல ஆசைப்பட்டார்.

அதற்காக தாஜ் ஹோட்டல், ஓபராயா ஹோட்டல் போன்ற ஹோட்டல்களில் செயல்படும் உலர் துப்புரவுப் பிரிவை நேரில் சென்று ஆராய்ந்துள்ளார்.

ஒன்றரை வருடங்களில் 18 கிளைகளுடன் “காப்பி 2.0 ” உருவான கதை

துபாயில் உள்ள உலர் சுத்தம் செய்யும் கடையையும் பார்வையிட்டுள்ளார். அதன் பிறகு, தனது சக பணியாளர்களான நவீன் சாவ்லா, கௌரவ் தியோதியா, தருண் அரோரா மற்றும் அனுஜ் குப்தா ஆகியோரின் துணையுடன் டம்பிள்ட்ரி நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார். இவர்கள் அனைவருமே டெலிகாம் துறையில் அனுபவமிக்கவர்கள்.

திரு நவீன் சாவ்லா Tumbledry-ன் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் இயக்குனர் ஆவார். Telecom மற்றும் FMCG துறைகளில் 25 வருட அனுபவமிக்கவர். புகழ்பெற்ற telecom நிறுவனங்களில் முக்கிய பதவிகளில் இருந்துள்ளார்.

இப்படி இணை நிறுவனர்கள் 5 நபர்களுமே அவர்களின் துறையில் குறைந்தது 10வருட அனுபவமும், முக்கிய பதவிகளிலும் இருந்தவர்கள். கௌரவ் நிகம், நவீன் சாவ்லா, கௌரவ் தியோதியா மூவரும் தங்கள் பணிகளை விட்டுவிட்டு முழு நேரத்தையும் Tumbledry நிறுவனத்தின் வளர்ச்சிக்காக செலவிட்டுள்ளனர்.

இந்த துறையில் அதிக போட்டிகள் இல்லாதது அவர்களுக்கு சிறப்பான ஒரு காரணியாக இருந்துள்ளது. பெரும்பாலான துறைகளில் பெரிய நிறுவனங்கள் அதிகம் செலுத்திவருகின்றனர். ஆனால் டிரை கிளீனிங் இந்தியாவில் இன்று வரை ஒரு அமைப்பு சார தொழிலாக மட்டும் இருப்பதால் இந்த துறை தங்களுக்கு வெற்றியை தேடித்தரும் என்று நம்பியுள்ளனர்.

Ola நிறுவனத்தின் வெற்றிக்கதை…

தொழில் போட்டிகள் அதிகம் இல்லாவிட்டாலும், அவர்கள் தொழிலுக்கு தேவையான  டிரை கிளீனிங் மிஷின்களுக்காக அதிக ஆராய்ச்சிகளை செய்துள்ளனர். ஒவ்வொரு மிஷின்கலும் எங்கிருந்து வரும், துணி துவைப்பதற்கான ரசாயனங்கள் எங்கிருந்து வரும், இப்படியெல்லாம் நிறைய ஆராய்ச்சிகள் நடந்துள்ளன.

அதன் பின் உலகின் சிறந்த தொழில்நுட்பத்தை தேர்ந்தெடுத்து
2019-ல் நொய்டாவைத் தலைமையிடமாகக் கொண்டு TumbleDry நிறுவனத்தை ஆரம்பித்தனர்.

அவர்களின் நிறுவனம் ஆரம்பித்த சில மாதங்களில் கொரோனா பாதிப்பு இந்தியாவை மட்டும் அல்லது உலகத்தையே ஆட்டிப்படைத்தது. அந்த நேரத்திலும் இவர்கள் தொழில் சீராக செயல்பட்டுள்ளது.

நிறுவனம் ஆரம்பித்து 4 ஆண்டுகளில் 585 கடைகள்
இந்தியாவில் 180 க்கும் மேற்பட்ட நகரங்களில் 585 உலர் கிளீன் கடைகளை திறந்துள்ளார்.

கடந்த ஆண்டு அதாவது 2022-ல் இவர்களது நிறுவனம் ரூ.116 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

TumbleDry வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்த நிறுவனம் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த TumbleDry App வாடிக்கையாளரின் பில் தொகை, அவரின் டெலிவரி நேரம் மற்றும் ஆர்டர் நிலை ஆகியவற்றை அறிய பயன்படுத்தப்படுகிறது.

இந்தியவில் 2026ல் TumbleDry நிறுவனம் 2000 புதிய மையங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. பெரிய நகரங்களில் 3 கிமீ சுற்றளவில் ஒரு TumbleDry மையம் அமைக்க திட்டமிட்டுள்ளன.

துணிகள் மட்டுமல்லாது வீடு மற்றும் கார்கள் போன்றவற்றையும் தூய்மைசெய்ய திட்டம் திட்டப்பட்டுவருகிறது.

இது போன்ற தொழில்முனைவோரின் வெற்றிக்கதைகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> success story 
Advertisement