Ola நிறுவனத்தின் வெற்றிக்கதை…

Advertisement

Ola Cabs 

ஆண்டாண்டுகளாக இருக்கும் கேப் சேவையை, ஒருவித சொகுசு அம்சங்களுடன், கையிலுள்ள போனில் பட்டனை தட்டினால், குறிப்பிட்ட தொகைக்கு கார் வீட்டு வாசலில் வந்து நிற்கும் வசதியை ஏற்படுத்திய Ola இந்தியர்களுக்கு ஒரு புதிய அனுபமாக இருந்துருக்கும். ‘ஓலா’ இந்தப் பெயர் இன்று நம்மில் பலருக்கும் மிகவும் நெருக்கம். சென்னை போன்ற பெரு நகரங்களில் வசிப்பவர்கள் ஒருமுறையேனும் ஓலா கேப்ஸ் மூலம் பயணித்திருப்பார்கள். இன்று இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் 250 பெரிய மற்றும் சிறிய நகரங்களிலும் ஓலா சாம்ராஜ்ஜியம் கொடிகட்டி பறந்துவருகிறது. வாடகைக் காரில் இருந்து எலெக்ட்ரிக் வாகன விற்பனை என ஓலாவின் வளர்ச்சி என்பது சமீப காலத்தில் நம் அனைவரும் கண்கூடாக கண்டுவருகிறோம். ஆனால், இவ்வளவு பெரிய சாம்ராஜ்ஜியம் ஒரு சிறிய சம்பவத்தால் விளைந்தது என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. அந்த உத்வேகம் அளிக்கக்கூடிய கதையை தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்….

success story ola cabs bhavish agarwal:

ஓலாவின் நிறுவனர் பவிஷ் அகர்வால் மற்றும் அங்கித் பாடி

ஓலாவின் நிறுவனர் பவிஷ் அகர்வால், IIT பாம்பேயில் கணினி அறிவியலில் பி.டெக் பட்டம் பெற்றவர். பெங்களூரில் உள்ள Microsoft Research நிறுவனத்தில் தனது ஆரம்பக்காலத்தை தொடங்கினார், அங்கு அவர் பணிபுரிந்த போது தனது 2 கண்டுபிடிப்பிகளுக்கு காப்புரிமை தாக்கல் செய்துள்ளார். சர்வதேச இதழ்களில் 3 ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார்.

பவிஷ் தனது தொழில்முனைவோர் மனப்பான்மையால் உந்தப்பட்டு, ஓலா கேப்களை உருவாக்குவதற்கு முன்பு குறுகிய கால சுற்றுப்பயணங்கள் ஏற்பாடு செய்வது மற்றும் விடுமுறை நாட்களை கொண்டாடுவது போன்ற சேவைகளை ஆன்லைன் மூலம் வழங்கும் நிறுவனத்தைத் தொடங்கினார்.

இறைச்சிகளை ஆன்லைனில் விற்பதில் முன்னணி நிறுவனமா?

Ola Trips:

ஓலா ட்ரிப்  3 டிசம்பர் 2010 அன்று தொடங்கப்பட்டது. லூதியானாவில் பிறந்த ஓலா உரிமையாளர் பவிஷ் அகர்வால் முதலில் Olatrip.com என்ற ஆன்லைன் தளத்தைத் தொடங்கினார், அது விடுமுறைப் பொதிகள் மற்றும் வார இறுதி பயணங்களை வழங்குகிறது.

Ola உருவாக காரணம்:

ஓலா தொடங்கியதற்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதை உள்ளது. அது என்ன வென்றால் பவிஷ் பெங்களூரிலிருந்து பந்திப்பூருக்குச் செல்ல அவர் ஒரு காரை வாடகைக்கு எடுத்தார். அந்த பயணம் அவருக்கு ஒரு பயங்கரமான அனுபவத்தை வழங்கியது. பயணத்தின் நடுவில் காரை நிறுத்திய டிரைவர், பவிஷ் செலுத்தவேண்டிய தொகையைவிட அதிகமாக கேட்டார்.  பவிஷ் அவர் கேட்ட தொகையை மறுத்ததை தொடர்ந்து, பவிஷை பாதிவழியில் இறக்கிவிட்டு சென்றார் அந்த டிரைவர்.

ஆம், அன்றைய தினம் நடந்த சம்பவத்தால் கார்களை முன்பதிவு செய்யும் பல பயணிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை உணர்ந்துகொண்ட அவருக்கு, குறைந்த கட்டணத்தில் சிறந்த வாடிக்கையாளர் சேவையுடன் வாடகை கார் நிறுவனம் தொடங்கினால் என்ன என்ற ஐடியா வந்துள்ளது.  இந்த யோசனையை தனது சகா அங்கித்யுடன் பகிர்ந்துயுள்ளார்.

இளம் தொழில்அதிபர் ரிதேஷ் அகர்வால் வெற்றிக்கு இதுதான் காரணமா…

Ola Cabs ஆரம்பகட்ட நிலை:

மார்ச் 2015-ல் ஓலா கேப்ஸ் ஒரு ஸ்டார்ட்அப் ஆக தொடங்கப்பட்டது. ஓலா கேப்ஸை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்காக பவிஷ் தனது இணை நிறுவனர் அங்கித் பாடியை நாடினர். ஓலாவின் இணை நிறுவனர் மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரியான அங்கித் பாடி தனது பயணத்தை ஐஐடி பாம்பேயில் தொடங்கினார், அங்கு அவர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பைத் தொடர்ந்து CAD மற்றும் ஆட்டோமேஷனில் எம்.டெக். முடித்தார்.

நவம்பர் 2010 இல் Ola Cabs-ல் சேருவதற்கு முன்பு, வில்காம் மற்றும் QED42 உள்ளிட்ட பல்வேறு ஃப்ரீலான்ஸ் மற்றும் ஸ்டார்ட்அப் திட்டங்களில் பணியாற்றியுள்ளார்.

Olaவின் முதல் முதலீடு:

பவிஷின் பெற்றோர் தொடக்கத்தில் அவரது ஸ்டார்ட்அப்  திட்டங்களை ஏற்கவில்லை. அவர் எடுத்த முடிவால் அவர்கள் முற்றிலும் அதிருப்தி அடைந்தனர். இருந்தாலும், OLA தனது முதல் சுற்று ஏஞ்சல் முதலீட்டை snapdeal நிறுவனர் குணால் பால், ரெஹான் யார் கான் மற்றும் அனுபம் மிட்டல் ஆகியோரிடமிருந்து தனது முதல் முதலீட்டை பெற்றது.

Olaவின் தூண்கள்:

ஓலா நிறுவ காரணமாக இருந்தது பவிஷ் மற்றும் அங்கித் என்றாலும், ஆரம்ப காலகட்டத்தில் அவர்கள் இருவருக்கும் உதவியர்கள் பலர். உஷா லௌடோங்பாம், பவிஷுக்கு நிறுவனத்தின் தொழில்நுட்ப வடிவமைக்கு உதவினர், அஜிங்க்யா போத்தார் என்பவர் ஓலாவின் முதல் ஆண்ட்ராய்டு ஆப்-ஐ உருவாக்கினார். குஷால் போகடியே என்பவர் iOS அப்ளிகேஷனை ஏற்படுத்திக் கொடுத்தார், முதலில் பெங்களூரு மற்றும் மும்பையைத் தளமாக கொண்டு ”Ola Trips” உதயமானது.

Ola அர்த்தம்: 

ஓலா என்ற பெயர் ஸ்பானிஷ் வார்த்தையான ‘ஹோலா’ என்பதிலிருந்து உருவானது, இது ‘ஹலோ’ என்று தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Ola ஆரம்பகட்ட சவால்கள்:

ஆரம்பித்த எட்டு ஆண்டுகளில் 110 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டி பில்லியன் டாலர் மதிப்புள்ள ஸ்டார்ட்அப் நிறுவனமாக இருந்தாலும் ஆரம்பத்தில் ஓலாவை சந்தையில் நிலைநிறுத்த பவிஷ் மற்றும் அங்கித் இருவரும் பல சவால்களை சமாளிக்க வேண்டியிருந்தது. சில சமயங்களில் ஓட்டுநர்கள் பணிக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. அந்த நேரங்களில் பவிஷே ஓட்டுநராக செயல்பட்டுள்ளார். அதேபோல், அங்கித் தொடர்ந்து 48 மணிநேரம் கோடிங் பணிகளை கவனித்து தங்களின் App-ல்  முன்னேற்றத்தை கொண்டுவந்துள்ளனர்.

Ola உலகளாவிய சந்தை 

ஓலா, ஆஸ்திரேலியா, யுனைடெட் கிங்டம் மற்றும் நியூசிலாந்து ஆகிய 3 சர்வதேச நாடுகளில் தனது சேவையை வழங்குகிறது. ஆஸ்திரேலியாவில் அதன் செயலியில் 40,000 ஓட்டுனர்கள் பதிவு செய்துள்ளனர். இந்தியாவில், ஓலா 250+ நகரங்களில் செயல்படுகிறது. 2019 ஆம் ஆண்டில், லண்டனில் தொடங்குவதற்கு முன்னதாக, 10,000 க்கும் மேற்பட்ட டிரைவர்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் பயன்முறையில் விண்ணப்பித்தனர் . பிப்ரவரி 2020 இல், ஓலா தனது டாக்ஸி-ஹெய்லிங் சேவைகளை லண்டனில் 25,000க்கும் மேற்பட்ட ஓட்டுநர்களுடன் பதிவுசெய்தது. ஓட்டுனர்கள் அல்லாமல் இந்தியாவில் 3000 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள்.

8 ஆண்டுக்குள், 168 நகரங்களில் சேவைகளை வழங்கி 110 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டிய ஓலா கேப்ஸ், இந்தியாவின் ஐந்தாவது யூனிகார்ன் நிறுவனமாக 5 பில்லியன் டாலர் மதிப்பீட்டில், இப்போது உலகம் முழுவதும் 250 நகரங்களில் சேவைகளை வழங்கி வருகிறது. ஒவ்வொரு நாளும் 2 லட்சத்துக்கும் அதிகமான புக்கிங் பெறுகிறது.

ஓலா ஆப் மூலம் செய்யப்படும் அனைத்து முன்பதிவுகளிலும் சராசரியாக 15% கமிஷனை ஓலா பெறுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு FoodPandaindia என்ற கம்பெனியை வாங்கிய பவிஷ், ஓலா எலக்ட்ரிக் பைக் நிறுவனத்தைத் தொடங்கி, அதிலும் வெற்றிகண்டுள்ளார்.

பவிஷ் அகர்வால் சொத்துமதிப்பு:

பவிஷ் 2019 இல் கணக்கின்படி $350 மில்லியனுக்கும் அதிகமான தனிப்பட்ட நிகர மதிப்பைக் குவித்தார். செப்டம்பர் 2021 இல், அவரது சொத்து மதிப்பு $958.43 மில்லியன் உயர்ந்தது, அவரை இந்தியாவில் 40 வயதுக்குட்பட்ட பணக்காரர்களில் முதல் 10 இடங்களுக்குள் சேர்த்தது.

இது போன்ற தொழில்முனைவோரின் வெற்றிக்கதைகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> success story
Advertisement