காப்பி 2.0 சத்யன் வெற்றிக்கதை
கைநிறைய சம்பளம், மன நிறைவான வேலை, பிரச்சினையில்லாமல் செல்லும் வாழ்க்கை என நிம்மதியாக போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில், சூறாவளி போல் வந்ததது covid 19. corona பலரின் வாழ்க்கையை அடியோடு புரட்டிப்போட்டது. அதில் ஒருவர் தான் சத்யன் பாலமாணிக்கம், உணவு துறையில் 15 வருட அனுபவம் இருந்தும், நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டதால் அவரின் வாழ்கை சூழல் பாதுகாப்பற்றதாக அமைத்துள்ளது. வாழ்க்கையில் சிக்கல்கள் வரும் போது அந்த பிரச்சனைகளை கீழ் தள்ளிவிட்டு மேலே வருபவர்கள் ஒரு சிலர் தான். அந்த வகையில் kappi 2.0 சத்யன் என்று அழைக்கப்படும் சத்யன் பாலமாணிக்கம், தனக்கு தெரிந்த உணவு துறையில் தனக்கு என்று ஒரு ப்ராண்டை கோவை சுற்றுப்புறத்தில் உருவாக்கியுள்ளார். அதுவும் ஒன்றரை வருடத்தில் 18 கிளைகளை தொடங்கியுள்ளார். எப்படி ஒருவரால் குறைந்த காலத்தில் இவ்வளவு வேகமாக தனக்கு என்று ஒரு இடத்தை பிடிக்க முடிந்தது. வாருங்கள் அவரை பற்றியும் காப்பி 2.0 உருவான கதை பற்றியும் தெரிந்துக்கொள்வோம்.
success story of kaapi 2.0 sathyan:
சத்யன் ஆரம்பகால வாழ்கை:
சத்யன், சேலம் அருகே தாரமங்கலம் என்ற கிராமத்தில் பிறந்த நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்தவர். சென்னையில் Diploma Hotel Management, அதனைத் தொடர்ந்து MBA Hotel Management போன்ற படிப்புகளை முடித்த சத்யன், ஜிஆர்டி ஹோட்டல்ஸ், தாஜ் குழுமத்தின் ஹோட்டல்கள், கேஎஃப்சி, எஸ்பிஐ சினிமாஸ், ஹாஷ் சிக்ஸ் போன்ற முன்னணி ஹோட்டல்களில் சில்லறை வர்த்தக மேலாண்மை, உணவு மற்றும் பானங்கள் போன்ற துறைகளில் 15 வருடம் அனுபவமிக்கவர்.
உணவு துறையில் வெயிட்டராக தன் வாழ்க்கையை ஆரம்பித்த சத்யன், கடின உழைப்பால் கொஞ்சம் கொஞ்சமாக பணி உயர்வுப் பெற்று, மாதம் ஒரு லட்சம் சம்பளம் பெறக்கூடிய GM என்ற பதவியை அடைந்தார்.
Covid-19 பிறகு:
சீராக சென்ற வாழ்க்கையில், கொரோனா ஊரடங்கு சத்யனின் வேலைக்கு பிரச்சினையை உருவாக்கியது. இரண்டு மாதங்கள் சம்பளமே இல்லாமல் வேலை பார்த்துள்ளார். அப்போதுதான், மாதச் சம்பளத்தை மட்டும் நம்பிக் கொண்டிருக்காமல் மற்றோரு வருமானம் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என யோசித்திருக்கிறார் சத்யன்.
சுயதொழிலின் ஆரம்பம்:
அப்போது அவருக்கு உருவான ஐடியா தான் சுயத்தொழில். ஆனால், முதல் தலைமுறையில் ஒருவர் தொழில்தொடங்குவது என்பது நடுத்தரவர்கத்திற்கு அவ்வளவு எளிதாக அமைவதில்லை. பல போராட்டங்களுக்கு இடையே நண்பருடன் இணைந்து தனது சேமிப்பு, மனைவியின் நகைகள், மீத தொகையை கடன் மூலம் பெற்று, ரூபாய் 5 லட்சம் முதலீட்டில் ஒரு காப்பி ஷாப்பை தொடங்கினார். அவரின் காப்பி ஷாப் 8 இடங்களில் தொடங்குமளவுக்கு மிக விரைவாக முன்னேறியது.
முதல் முயற்சியும் ஏமாற்றமும்:
ஆனால் நண்பருடன் ஏற்பட்ட கருத்துவேறுபட்டால் அந்த காபி ஷாப் தொழிலில் இருந்தது வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த ஏமாற்றம் அவருக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.
kappi 2.0 ஆரம்பம்:
உணவுத் துறையில் 15 வருட அனுபவம், நண்பருடன் 8 கடைகள் ஆரம்பித்ததில் கிடைத்த பாடங்கள் இவற்றைக் கொண்டு மீண்டும் தொழில் தொடங்கும் முயற்சியில் இறங்கினர். முதல் முறை போல் இல்லாமல் இம்முறை காபி ஷாப் ஆரம்பிப்பதற்கு உரிய சட்ட ஆலோசனைகள் பெற்று அதன் தொடர்ச்சியாக ஆரம்பிக்கப்பட்டதுதான் காப்பி 2.0 காபி ஷாப்.
இறைச்சிகளை ஆன்லைனில் விற்பதில் முன்னணி நிறுவனமா?
காப்பி 2.0 ன் புதுமைகள்:
கொங்கு மக்கள் காபியை விரும்பிக் குடிப்பார்கள். ஒவ்வொருக்கும் ஒவ்வொரு சுவை பிடிக்கும். இதைக் கருத்தில் கொண்டு முதல் முறையாக நான்கு வகையான காபி சுவைகளை ஒரே இடத்தில் வழங்கத் திட்டமிட்டுள்ளார். அதன்படி கும்பகோணம், சென்னை, கொங்கு, கூர்க் என நான்கு வெவ்வேறு வகையான காபியை வழங்கத் தொடங்கியுள்ளார்கள்.
காப்பி 2.0 காபி சுவை மக்களுக்கு ரொம்பவே பிடித்த சுவையாக மாற ஆரம்பித்த ஒன்றரை வருடத்தில் கோவையில் மட்டும் 18 பிரிவுகளையும் தொடங்கிவிட்டார் kappi 2.0 சத்யன். அது வெறும் காபிக்கடையாக மட்டும் அல்லாமல், சில மாதங்களுக்கு முன்பு அதனுடன் பேக்கரி ஒன்றையும் இணைத்துள்ளார். இது வாசனையான காப்பி உடன் வாடிக்கையாளர்களுக்கு ஆரோக்கியமான தின்பண்டங்களையும் வழங்குவதற்காக தொடங்கியதாக கூறுகிறார் kappi 2.0 சத்யன்.
தொழில் ஏற்படும் ஆரோக்கியமான போட்டிகளை சமாளிக்க க்ளவுட் கிச்சன் என்ற துரிதமாக உருவாக்க கூடிய உணவுகளையும் தற்போது விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளார். காப்பி 2.0 பேக்கரியில் உருவாகும் தின்பண்டங்கள் அவரின் மற்ற 18 கடைகள் மட்டும் அல்லாமல் மற்ற கடைகளுக்கும் வழங்கிவருகிறார்கள்.
அது மட்டும் இல்லாமல் கல்லூரி மாணவர்கள் பார்ட்டைமில் வேலை பார்த்து மாதம் 20 முதல் 30 ஆயிரம் வரை சம்பாதிக்கும் வகையில் காப்பி 2.0 ஆன் வீல்ஸ் என்னும் டூ வீலரில் நடமாடும் குக்கீஸ் கடையையும் தொடங்கியுள்ளார். போட்டி நிறைந்த உலகத்தில் தனது ப்ராண்டை மக்களிடம் கொண்டுச்செல்ல புதுப்புது யோசனைகளை உருவாக்கிக்கொண்டுள்ளார். பேக்கரி, க்ளவுட் கிச்சன், பேக் ஹவுஸ், காப்பி 2.0 ஆன் வீல்ஸ் போன்ற பல புதுமைகளை கையாளுகிறார்.
இளம் தொழில்அதிபர் ரிதேஷ் அகர்வால் வெற்றிக்கு இதுதான் காரணமா…
kappi 2.0 சொத்து மதிப்பு:
ஒரு நாளைக்கு 80 ஆயிரம் வரை வருமானம் வருவதாக கூறும் காப்பி 2.0 சத்யன், காப்பி 2.0 பிரைவேட் லிமிடேட் கம்பெனியாக ஆரம்பித்தபிறகு, காப்பி 2.0 மதிப்பு 8 கோடி ரூபாய் என்கிறார். 40 பேர் நேரடியாகவும், Franchise-ல் குறைந்தது 120 பேர் தற்போது பணிபுரிவதாக கூறுகிறார்.
எதிர்கால திட்டங்கள்:
தமிழகத்தில் குறைந்தபட்சம் 200 கிளைகளை திறப்பதும் 1,000-துக்கும் மேற்பட்டோர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவும் திட்டமிட்டுள்ளனர். பகுதி நேரமாக பணிபுரிய கல்லூரி மாணவர்கள், இல்லத்தரசிகள், மாற்றுத்திறனாளிகள் போன்றோரை இணைத்துக்கொள்வது போன்ற திட்டங்கள் வரும் காலங்களில் செயல்படுத்த உள்ளனர்.
kappi 2.0 கடைகள் அனைத்திலும் ‘எண்ணம் போல் வாழ்க்கை’ என்கிற வரிகள் இடம்பெற்றிருக்கும். இதுவே kappi 2.0 சத்யனின் மந்திரமாக உள்ளது. முழு கவனத்துடன் கடினமாக உழைத்து, சரியான செயலில் ஈடுபட்டால் அனைத்தும் சிறப்பாகவே நடக்கும் என்கிறார் சத்யன். உங்களிடம் கடின முயற்சியும் எந்த சூழலிலும் சோர்ந்துபோகாத மனதைரியமும் இருந்தால் நீங்களும் உங்கள் வாழ்க்கையில் வெற்றிபெறலாம்.
இது போன்ற தொழில்முனைவோரின் வெற்றிக்கதைகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | success story |