இளம் தொழில்அதிபர் ரிதேஷ் அகர்வால் வெற்றிக்கு இதுதான் காரணமா…

Advertisement

ரிதேஷ் அகர்வாலின் வெற்றிக் கதை

வீட்டில் இருந்துக்கொண்டே பட்ஜெட் விலையில் ரூம் புக் செய்யும் OYO App பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். 2022 கணக்கின்படி உலகில் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் 43.000 ஹோட்டல்களில் 10 லட்சம் அறைகளை வைத்திருக்கிறது OYO Rooms Company. இந்த கம்பெனி உரிமையாளர் 27 வயதுடைய ஒரு இளைஞர் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா, அதுவும் தனது கல்லூரிப்படிப்பை பாதியில் கைவிட்டவர். அவரின் இன்றைய சொத்துமதிப்பு Rs 8,200 கோடி. அவரின் தொடர் முயற்சியிலும் நம்பிக்கையிலும் தான் அவர் இந்த உயரத்தை குறைந்த காலத்தில் அடைந்துள்ளார். யார் அந்த இளம்தொழில் அதிபர் என்று தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.

OYO CEO  Ritesh Agarwal

ரிதேஷ் அகர்வால் ஒரிசாவின் பிசாம் கட்டாக்கில் ஒரு வணிகக் குடும்பத்தில் பிறந்தவர். அவர்களின் குடும்பத்தினர் கட்டாக்கில் ஒரு சிறிய கடையை நடத்திவந்தனர். ரிதேஷ் அகர்வால் ராயகடாவின் சேக்ரட் ஹார்ட் பள்ளியில் தனது ஆரம்ப கல்வியை பயின்றார். மென்பொருள் மேல் அதிக ஆர்வத்துடன் காணப்பட்ட அவர் தனது எட்டு வயதில் coding கற்றுக்கொள்ள தொடங்கினார். அதன் விளைவாக 2009-ல் IIT-ல் படிக்க  கோட்டாவிற்கு சென்றார். அங்கு வெறும் கோடிங் மட்டும் தான் கற்றுத்தருவதாக நினைத்த அவர், தனது படிப்பை நிறுத்தினர். ஓய்வான நேரங்களில் பயணங்களை செய்தார். அவர் ‘இந்திய பொறியியல் கல்லூரிகள்: சிறந்த 100 பொறியியல் கல்லூரிகளின் முழுமையான கலைக்களஞ்சியம்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதினார். மேலும் பதினாறு வயதில், டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமென்டல் ரிசர்ச்சில் நடந்த ஆசிய முகாமில் கலந்து கொண்ட 240 மாணவர்களில் இவரும் ஒருவர்.

oyo rooms

கல்வித் தகுதி இல்லாமல் கைநிறைய வருமானம் தரக்கூடிய சுயதொழில்..!

ரிதேஷ் அகர்வால் என்ற தொழில் முனைவோரின் ஆரம்ப கால பயணம் 

பின்னர், தொழில்துறையை பற்றி தெரிந்துக்கொள்ள டெல்லியில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆப் பிசினஸ் அண்ட் பைனான்ஸ் கல்லூரியில் சேர்ந்தார். பிசினஸ் செய்யவேண்டும் என்னும் ஆர்வத்தினால் படிப்பை பாதியிலேயே கைவிட்டார். அவர் தனது 17 ஆம் வயதில் அதாவது 2012-ல்  oravel travels என்னும் கம்பனியை தொடங்கினர். அவரின் பயணங்களின் போது, பல பகுதிகளில் அளவான பணத்தில் தங்குவதற்கு ஏற்ற ஹோட்டல் அறைகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுவதை உணர்த்த ரிதேஷ், அந்த சிக்கலை தீர்ப்பதற்கான யோசனையாகத்தான் oravel travels ஐ துவங்கினார். இந்த சிறிய நிறுவனம்தான் பின் நாளில் ஓயோ ரூம்ஸ் என்னும் மிகப்பெரிய கம்பெனியாக வளர்ந்தது.

ரிதேஷ் அகர்வால் அவருடைய 19 ஆம் வயதில் தெயில் பெல்லோஷிப்-இல் பங்கேற்றார். அதாவது ரிதேஷ் தனது புதிய ஐடியாகளை தெயில் பெல்லோஷிப் நிறுவனத்திடம் தெரிவித்ததன் மூலம், அவரின் புதுமையான ஐடியாக்களுக்கு அவருக்கு சம்பளம் வழங்கப்பட்டது. அவர் அந்த நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் பயிற்சி திட்டத்தில் இருந்தார். அதன் மூலம் ரிதேஷ் பிசினஸ் துவங்குவதற்கு தேவையான பணமும் முன்னனி தொழிலதிபர்களுடன் தொடர்பையும் உருவாக்கி கொண்டார்.

3 மணி நேரம் வேலை பார்த்தால் 12,000 ரூபாய் சம்பாதிக்கும் தொழில்..

OYO Rooms Booking Company 

Ritesh Agarwal OYO

தனது பயிற்சி காலத்தில் கிட்டத்தட்ட 100 மில்லியன் டாலர் சம்பாதித்தார். இதன் மூலம் ஓயோ ரூம்ஸ் ஐ உருவாக்கினார்.

OYO ஐடியா உருவான கதை 

நாடு முழுவதும் ஹோட்டல்கள் இருக்கின்றன. ஆனால் அவை முறையாக பராமரிக்கப்படுவதில்லை, அதனால் வாடிக்கையாளர் வருகையும் குறைகிறது. இந்த குறைபாட்டை சரிசெய்வதற்காக ஓயோ நிறுவனம், ஹோட்டல் உரிமையாளருக்கு பணத்தினை கொடுத்து தரமான ரூம்களை உருவாக்கவும், பராமரிக்கவும் சொல்கிறது. ஓயோ ரூம்ஸ் ஆப் மூலமாக ரூம்களை வாடிக்கையாளர்களே அந்த ரூம்களை புக் செய்ய வைக்கிறது இந்த கம்பெனி. ரித்தேஷ் என்ற ஒருவருடன் ஆரம்பித்த OYO இன்று உலகளவில் 17,000 பணியாளர்களை கொண்டுள்ளது.

மாலை நேரங்களில் தினசரி 2,500 வருமானம் தரும் தொழில்..!

Ritesh Agarwal சாதனைகள்

ரித்தேஷ் ஒரு எழுத்தாளர், ஒரு டெவலப்பர், ஒரு சிறந்த பேச்சாளர் மற்றும் ஒரு தொழிலதிபர். அவர் 2014 இல் EDU குழுவின் இளைய பேச்சாளராக விளங்கினார்.

17 வயதிலேயே ஒரு நிறுவனத்திற்கு CEO ஆக இருந்தவர்.

2013 – டாடா நிறுவனத்தின் First Dot Awards இல் Top 50 இளம் தொழில்முனைவோர் பட்டியலில் இடம் பிடித்தார்.

Global Student Entrepreneurship Awards India போட்டியில் இறுதி சுற்றுவரை முன்னேறினார்.

உலக அளவில் இளம் வயதில் மிகப்பெரிய தொழில்முனைவர்களாக அறியப்பட்ட 8 பேரில் இவரும் ஒருவர்.

3 மணி நேரம் வேலை பார்த்தால் 12,000 ரூபாய் சம்பாதிக்கும் தொழில்..

Ritesh Agarwal net worth:

இன்று அவரின் சொத்தின் நிகர மதிப்பு INR 7253 கோடி ($1.1 பில்லியன்) ஆகும். இதன் மூலம் இளம்வயதில் சுயமாக உருவாக்கிய கோடீஸ்வரர் என்ற புகழுக்கு சொந்தமாகிறார்.

உலகில் சாதித்தவர்கள் அனைவருமே தங்களது சாதனை பயணத்தை மிக மிக இளம்வயதிலேயே துவங்கிவிட்டார்கள். நீங்களும் இவரை போல் சாதிக்க விரும்பினால் இப்போதே உங்கள் புதுமையான ஐடியாகளை உருவாக்குங்கள். இன்றே அதற்கான பணியை துவங்குங்கள்.

இது போன்ற தொழில்முனைவோரின் வெற்றிக்கதைகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> success story

Advertisement