3 மணி நேரம் வேலை பார்த்தால் 12,000 ரூபாய் சம்பாதிக்கும் தொழில்..

Advertisement

100 rs Investment Business in Tamil

இன்றைய கால கட்டத்தில் குடும்பத்தில் உள்ள பொருளாதார பிரச்சனையை சரி செய்ய  வேண்டுமென்றால் கணவன் மனைவி இருவருமே வேலைக்கு செல்ல வேண்டியிருக்கிறது. இருந்தாலும் சில நபரது வீட்டில் முதியவர்கள் இருப்பார்கள் அவர்களை பார்த்து கொள்ள வேண்டும் என்பதற்காக வெளியில் சென்று வேலை அனுமதிக்க மாட்டார்கள். வீட்டிலிருந்து செய்ய கூடிய தொழில் ஏதவாது இருந்தால் செய் என்று கூறுவார்கள். அதனால் இந்த பதிவில் வீட்டிலிருந்து செய்ய கூடிய தொழிலை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

தினமும் வருமானம் தரும் தொழில்:

தினமும் வருமானம் தரும் தொழில் 

இந்த Wheat Grass Powder தயாரிக்கும் தொழிலை எவ்வாறு செய்வது, இதற்கு தேவையான மூலப்பொருட்கள் என்னென்ன, இதனை எவ்வாறு விற்பனை செய்வது என்பதை பற்றியெல்லாம் விரிவாக காணலாம்.

முதலீடே இல்லாமல் மாதம் 10,000 ரூபாய் வரை சம்பாதிக்க வேண்டுமா..? அப்போ இந்த தொழில் தான் சரியாக இருக்கும்

தேவையான மூலப்பொருட்கள்:

இந்த Wheat Grass Powder தயாரிக்கும் தொழிலுக்கு தேவையான மூலப்பொருள் என்று பார்த்தால் நல்ல நிலையில் உள்ள கோதுமை விதைகள், Wheat Grass Kit மற்றும் Packing Machine ஆகியவை தேவைப்படும்.

இந்த Packing Machine விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். அதேபோல் Wheat Grass Kit-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இந்த Wheat Grass Kit வாங்குகிற இடத்திலேயே நமக்கு தேவையான கோதுமை விதை மற்றும் உரம் ஆகியவை அளிக்கப்படும்.நீங்கள் தயாரிக்கும் Wheat Grass Powder-யை Online மூலமாக விற்பனை செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும். இந்த தொழில் செய்வதற்கு உங்கள் வீட்டிலேயே சிறிய இடம் இருந்தால் போதும்.

தயாரிப்பு முறை:

முதலில் நாம் வாங்கி வைத்துள்ள கோதுமை விதைகளை நன்கு சுத்தம் செய்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு நாள் இரவு முழுவதும் ஊறவிடுங்கள். பின்னர் அதனை வாங்கி வைத்துள்ள Wheat Grass Kit-ல் தேவையான அளவு மண் மற்றும் உரம் சேர்த்து நன்கு கலந்து அதன் மீது நாம் ஊற வைத்துள்ள கோதுமை விதைகளை தூவி அதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு வெயில் படும் இடத்தில் வைத்து கொள்ளுங்கள்.

இதற்கு தினமும் தேவையான அளவு தண்ணீர் தெளித்து வந்தீர்கள் என்றால் 10 நாட்களில் கோதுமை புள் வளர்ந்து விடும். இப்பொழுது அதனை அறுவடை செய்து அதனை நன்கு நிழலில் காயவைத்து பொடியாக அரைத்து Packing Machine-யை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.

வருமானம்:

பேக்கிங் செய்து வைத்துள்ள பொடியை நீங்கள் நாட்டு மருந்து கடைகள், சூப்பர் மார்க்கெட் போன்றவற்றிற்கு நேரடியாக சென்றும் விற்பனை செய்யலாம். அப்படி இல்லை என்றால் Online மூலமாக விற்பனை செய்யலாம்.

தோராயமாக 100 கிராம் கோதுமை புள் பொடியை 300 ரூபாய் முதல் 400 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது என்றால், ஒரு நாளைக்கு தோராயமாக நீங்கள் 3 கிலோ கோதுமை புள் பொடியை விற்பனை செய்கிறீர்கள் என்றால் 9,000 ரூபாய் – 12,000 ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.அதனால் இந்த Wheat Grass Powder தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

வாரம் 33,250 ரூபாய் வருமானம் தரக்கூடிய எளிமையான சுயதொழில்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

 

Advertisement