100w சோலார் பேனலின் விலை, அளவு, விவரங்கள் மற்றும் பயன்பாடுகள்..!

Advertisement

100w Solar Panel Specifications in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் 100w Solar Panel பற்றிய அனைத்து  விவரக்குறிப்புகளை தெரிந்துகொள்ளலாம் வாங்க. இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் இன்றியமையாத ஒன்றாக இருப்பது மின்சாரம். மின்சாரம் இல்லையென்றால் சொல்லவே வேண்டாம். படத்தில் வடிவேல் சார் சொல்வது போல், டேய் EB கரண்ட்ட போட்டு விடுங்கடா.. என்று தான் இருக்கும்.

ஆனால், இப்போது சூரிய சக்தி மூலம் இயங்கக்கூடிய Solar Panel பெரும்பாலான இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், நம்மில் பலபேருக்கு Solar Panel பற்றிய விவரங்கள் பற்றி தெரிவதில்லை. ஆகையால் இப்பதிவின் வாயிலாக 100w Solar Panel பற்றிய விவரக்குறிப்புகள் பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க.

100w Solar Panel:

 100w solar panel dimensions in tamil

100w சோலார் பேனல் என்பது பெரும்பாலானவர்களின் பட்ஜெட்டிற்கு ஏற்றவாறு உள்ளது. இதனால் தான் அனைவரும் 100 வாட் சோலார் பேனல் வாங்க நினைக்கிறார்கள். ஒரு 100w சோலார் பேனல் ஆனது, நல்ல சூரிய ஒளி கிடைக்கும் போது 100 W வரை DC மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.

100w Solar Panel ஆனது, மிகவும் லேசானதாகவும், எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய அமைப்பிலும் இருக்கும். அதுமட்டுமில்லாமல், இருப்பிடம் மாற்று சூரிய ஒளியை பொறுத்து ஒரு நாளைக்கு 300-600 வாட்-மணிநேர மின்சாரத்தை வழங்குகிறது.

சோலார் பேனல் விலை 2024

100w 12-வோல்ட் சோலார் பேனல் ஆனது, மூன்று விதமாக உள்ளது. அவை,

  1. Monocrystalline solar panels
  2. Polycrystalline solar panels
  3. Bifacial solar panels

இவை ஒவ்வொன்றும் சூரிய ஆற்றல் உற்பத்தி திறன், ஆயுள், செயல்திறன் மதிப்பீடு போன்றவற்றில் வேறுபடுகிறது. இவற்றில் நீங்கள் உங்களுக்கு விருப்பமான ஒன்றை தேர்வு செய்யலாம்.

100w Monocrystalline Solar Panels:

மோனோகிரிஸ்டலின் சோலார் பேனல்கள் ஆனது, 15 முதல் 20% வரை மதிப்பீட்டை கொண்ட உயர் திறன் கொண்ட சோலார் பேனல்கள் ஆகும். மோனோகிரிஸ்டலின் சோலார் பேனல்கள், ஒரு மணி நேரத்திற்கு ஒவ்வொரு சதுர அடி பரப்பளவிற்கும் அதிக கிலோவாட் வெளியீடுகிறது. சூரிய ஒளி சரியில்லாதபோதும் மற்றும் மேகமூட்டமாக வானிலையில் மோனோ பேனல்கள் சக்தியை உருவாக்குகிறது. Monocrystalline Solar Panel ஆனது Polycrystalline பேனலை விட நீடித்தவை. அதற்கேற்றவாறு இதன் விளையும் சற்று அதிகம்.

Polycrystalline Solar Panels:

பாலிகிரிஸ்டலின் சோலார் பேனல்கள் ஆனது, 13 முதல் 16% வரை மதிப்பீட்டைக் கொண்ட சோலார் பேனல்களை விட குறைவான செயல்திறன் கொண்டவை ஆகும். நல்ல சூரிய ஒளி இருக்கும் பட்சத்தில், அதன் அதிகபட்ச கொள்ளளவிற்கு ஆற்றல் வெளியீட்டைக் கொடுக்கக்கூடியது. உயர்தர Polycrystalline Solar Panel ஆனது, மோனோ பேனல்களைப் போலவே நீடிக்கக்கூடியது என்றாலும், அதிகபட்ச வெப்பநிலையில் சேதமடைகிறது.

Bifacial Solar Panels:

Bifacial Solar Panels (இருமுக சோலார் பேனல்), ஒரு வரையறுக்கப்பட்ட இடத்தில் அதிகபட்ச ஆற்றல் உற்பத்தி செய்ய இருமுக சோலார் பேனல் சிறந்த வழி. இருமுக சோலார் பேனலின் இருபுறமும் சோலார் செல்கள் உள்ளது. இது பெறக்கூடிய ஆற்றலை கிட்டத்தட்ட இருமடங்காக உங்களுக்கு தருகிறது.

100w Solar Panel Price in Tamil:

100w சோலார் பேனல் வகை  விலை 
மோனோகிரிஸ்டலின் பேனல்கள் ரூ. 3800 முதல் ரூ. 4300 வரை
பாலிகிரிஸ்டலின் பேனல்கள் ரூ. 3500 முதல் ரூ. 4000 வரை
இருமுக பேனல்கள் ரூ. 4000 முதல் ரூ. 7000 வரை

40% மானியத்துடன் சோலார் பேனல் அமைப்பது எப்படி?

100w Solar Panel Specifications in Tamil:

  • அதிகபட்ச ஆற்றல் – 300-600 வாட்-மணிநேரம் (ஒரு நாளைக்கு)
  • அதிகபட்ச மின்னழுத்தம் – 20.4V
  • AMP – ஒரு நாளில் 30-36 ஆம்ப்ஸ் மின்னோட்டம்
  • அளவுகள் – 47×21.3×1.4 அங்குலம்
  • எடை – 6.5 முதல் 8 கிலோ வரை
  • செல்களின் எண்ணிக்கை – 36
  • திறன் – 16-23% (பேனல் வகையை பொறுத்து திறன் மாறுபடும்)

100-Watt Solar Panel Uses in Tamil:

  • 100-வாட் சோலார் பேனல் அனைத்தும், பல்வேறு வழிகளில் நமக்கு பயன்படுகிறது.
  • ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட்வாட்ச்கள், மடிக்கணினிகள் மற்றும் டேப்லெட்டுகள் போன்ற சாதனங்களை சார்ஜ் செய்ய பயன்படுகிறது.
  • டிவி பார்ப்பதற்கு உதவுகிறது.
  • பயணம் செய்யும்போது, சின்ன குளிர்சாதன பெட்டி மற்றும் காரின் சிறிய குளிர்சாதனப் பெட்டியை இயக்க பயன்படுகிறது.
  • சிறிய ஏசி அல்லது ஹீட்டர் யூனிட்டை இயக்குவதற்கு பயன்படுகிறது.

இதுபோன்ற பல தேவைகளுக்கு 100-Watt Solar Panel பயன்படுகிறது.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link

 

Advertisement