Giloy என்பதன் தமிழ் பெயர் என்ன.? பயன்கள் என்ன.?

Advertisement

Giloy in Tamil Name

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் Giloy என்பதன் தமிழ் பெயர் மற்றும் அவற்றின் பயன்கள் பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க. Giloy என்ற வார்த்தையை நாம் அனைவரும் கேட்டு இருப்போம். ஆனால், Giloy என்றால் என்ன என்பது நம்மில் பலபேருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவில் Giloy என்பதன் தமிழ் பெயர் மற்றும் பயன்களை விவரித்துள்ளோம்.

நீங்கள் Giloy என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

Giloy in Tamil Name:

Giloy என்பதன் தமிழ் பெயர் அமிழ்தவள்ளி ஆகும். இதனை சீந்தில் என்றும் கூறுவார்கள். பெரும்பாலானவர்களுக்கு சீந்தில் என்று சொன்னால் தெரியும். எனவே, Giloy என்றால் தமிழில் அமிழ்தவள்ளி அல்லது சீந்தில் என்பது பெயர் ஆகும்.

Mussels என்றால் என்ன, அதன் அர்த்தம்

Giloy Meaning in Tamil:

Giloy (அமிழ்தவள்ளி) என்பது ஒரு வகையான மூலிகை செடி ஆகும். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. இதனை அதிகமாக உட்கொள்ளும்போது பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது. ​

Giloy in Tamil Name

இதனால் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இதனை உட்கொள்ள கூடாது அல்லது மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகு உட்கொள்ள வேண்டும்.

Giloy Benefits in Tamil:

  • சீந்தில் எனும் அமிழ்தவள்ளி நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், நோய்கள் ஏற்படாமல் தடுக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
  • வயிறு தொடர்பான பிரச்சனைகளை நீக்குகிறது.
  • காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்ற பிரச்சனைகளை நீக்குகிறது.
  • சீந்தில் அழற்சி எதிர்ப்பு, ஆன்டி பயாட்டிக், வயது முதிர்வை எதிர்க்கும் பண்புகள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைரஸ் எதிர்ப்பு, சர்க்கரை நோய் எதிர்ப்பு மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் போன்றவை உள்ளது.

How To Use Giloy in Tamil:

Giloy Benefits in Tamil

கஷாயம்- சீந்தில் இலைகளுடன் துளசி மஞ்சள் மற்றும் கிராம்பு சேர்த்து கஷாயம் செய்து அருந்தலாம்.

சீந்திலின் இலைகள் மற்றும் தண்டுகளை இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் இதனை இடித்து, ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். கொதிக்க வைத்த தண்ணீர் பாதியாக குறைந்ததும் வெதுவெதுப்பான சூட்டில் அருந்த வேண்டும்.

வெந்நீருடன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் சீந்தில் பொடியை கலந்து காலையில் எழுந்தவுடன் குடிக்கலாம். பெரும்பாலும் காலை வேளையில் சாப்பிடுவதற்கு  முன்பாக எடுத்துக்கொள்வது நல்லது.

இரட்சிப்பு என்றால் என்ன.?

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Useful Information in Tamil
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link
Advertisement